சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு
வெளியிடப்பட்டது.10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு
மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர்.
Revision Exam 2025
Latest Updates
இன்று 10ம் வகுப்பு ரிசல்ட்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.
தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
பள்ளிக்கு
செல்லாமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமை
ஆசிரியையை ஆதிதிராவிட இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
2வருட பிஎட் பாடங்கள் விவரம் இதோ 4 செமஸ்டர் முறை
Course Structure for the NCTE Two-Year B.Ed. Programme Semester Wise Distribution of the
Courses Semester 1
Course 1 Childhood and Growing Up 100 marks
Course 2 Contemporary India and Education 100 marks
2ஜி, 3ஜி நெட் சேவைக்கு பிஎஸ்என்எல் புதிய சலுகை
பி.எஸ்.என்.எல் 2ஜி மற்றும் 3ஜி நெட் சேவை பயன்படுத்துவோர் தாங்கள் பயன்படுத்தாத டேட்டாக்களை அடுத்த ரீசார்ஜில் சேர்த்துக்
கொள்ளும் முறையை பி.எஸ்.என்.எல் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இது
குறித்து பி.எஸ்.என்.எல் நுகர்வோர் துறை இயக்குநர் என்.கே. குப்தா
கூறுகையில், பி.எஸ்.என்.எல் ப்ரீ பெய்ட் கார்டு மூலம் 2ஜி மற்றும் 3ஜி இணைய
சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சேவை காலம் முடிந்த பின்பு, மீதம்
இருக்கும் டேட்டாக்களை அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது பயன்படுத்திக்
கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம்.
அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 3 கல்வியாண்டுகளாக இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் திரும்ப பெறுமா?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இன்று (21-ம்தேதி) வெளியாக இருப்பதால், அதில் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக
இழந்த முதலிடத்தை திரும்ப பிடிக்குமா என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள்
மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்
துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு
அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி
அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய
பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்காததால், கடும்
அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு
'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற
முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும்,
மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி
மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு
மத்திய
அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட
வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது
குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு
உள்ளன. மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள்
அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு
பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு
உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும்,
பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் - இயக்குனருக்கு கோரிக்கை
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இயக்குனருக்கு கோரிக்கை
10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
தனது உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென நினைக்கும் தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
பெங்களூரு மாநகரில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக புதிய விதிமுறைகள்
பெங்களூரு மாநகரில் பள்ளிகள் உள்ள பகுதியில்
வாகன போக்குவரத்து இயக்குவதில் சில மாற்றங்கள் செய்து
அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் தினமும் வேகமாக வாகன இயக்கம்
அதிகரித்து வருகிறது. மாநகரில் உள்ள பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ,
மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனியார் வாகனம்
பயன்படுத்துவது சாமானியமாகி விட்டது.
ஜெயலலிதா வருகிற 23ம் தேதி காலை முதல்வராக பதவி ஏற்கிறார்!!
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 22ம்
தேதி காலை முடிந்ததும், பிற்பகல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட
தலைவர்கள் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிக்கிறார். சொத்து குவிப்பு
வழக்கில் கடந்த 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா உட்பட நான்கு
பேரும் விடுதலை ஆனார்கள். பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பிற்கு
பிறகு தமிழக முதல்வராக ஜெயலலிதா உடனடியாக பதவி ஏற்பார் என அனைவரும்
எதிர்பார்த்தனர்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி
தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்
கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டமே
நடத்த வேண்டிய நிலை உள்ளது.
"ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்.."
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்நீதிபதி. வைத்தியநாதன் அவர்கள் இடைக்கால தீர்ப்பு வழங்கிய பிறகும் .
10-ஆம் வகுப்புத் தேர்வு-தற்காலிகச் சான்றிதழ்
பத்தாம்
வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில்
பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
நிகழ்
கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க
வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்ச்சி பெறாத அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்'
அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத
மாணவர்களுக்கு, சிறப்பு, 'டியூஷன்' நடத்த, ஆசிரியர்களுக்கு வாய்மொழி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27 வரை பதிவு: உடனடி துணைத்தேர்வு ஜூன் 26ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு தேர்வில், மறு கூட்டலுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
'ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன்,
குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக்
கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., ரிசல்ட் தாமதம்: மாணவ, மாணவியர் குழப்பம்
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின், 10ம் வகுப்பு
தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
குறித்து, அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.