'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற
முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும்,
மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி
மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு
மத்திய
அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட
வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது
குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு
உள்ளன. மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள்
அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு
பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு
உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும்,
பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் - இயக்குனருக்கு கோரிக்கை
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இயக்குனருக்கு கோரிக்கை
10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
தனது உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென நினைக்கும் தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ?
பெங்களூரு மாநகரில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக புதிய விதிமுறைகள்
பெங்களூரு மாநகரில் பள்ளிகள் உள்ள பகுதியில்
வாகன போக்குவரத்து இயக்குவதில் சில மாற்றங்கள் செய்து
அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் தினமும் வேகமாக வாகன இயக்கம்
அதிகரித்து வருகிறது. மாநகரில் உள்ள பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ,
மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனியார் வாகனம்
பயன்படுத்துவது சாமானியமாகி விட்டது.
ஜெயலலிதா வருகிற 23ம் தேதி காலை முதல்வராக பதவி ஏற்கிறார்!!
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 22ம்
தேதி காலை முடிந்ததும், பிற்பகல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட
தலைவர்கள் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிக்கிறார். சொத்து குவிப்பு
வழக்கில் கடந்த 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா உட்பட நான்கு
பேரும் விடுதலை ஆனார்கள். பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பிற்கு
பிறகு தமிழக முதல்வராக ஜெயலலிதா உடனடியாக பதவி ஏற்பார் என அனைவரும்
எதிர்பார்த்தனர்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி
தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்
கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டமே
நடத்த வேண்டிய நிலை உள்ளது.
"ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்.."
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்நீதிபதி. வைத்தியநாதன் அவர்கள் இடைக்கால தீர்ப்பு வழங்கிய பிறகும் .
10-ஆம் வகுப்புத் தேர்வு-தற்காலிகச் சான்றிதழ்
பத்தாம்
வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில்
பெற்றுக்கொள்ளலாம்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
நிகழ்
கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க
வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்ச்சி பெறாத அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்'
அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத
மாணவர்களுக்கு, சிறப்பு, 'டியூஷன்' நடத்த, ஆசிரியர்களுக்கு வாய்மொழி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27 வரை பதிவு: உடனடி துணைத்தேர்வு ஜூன் 26ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு தேர்வில், மறு கூட்டலுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
'ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன்,
குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக்
கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., ரிசல்ட் தாமதம்: மாணவ, மாணவியர் குழப்பம்
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின், 10ம் வகுப்பு
தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
குறித்து, அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்':'104'ல் ஆலோசனை துவக்கம்
தமிழகத்தில்,
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ், மே 29ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது.
ஆகஸ்ட் 20 முதல் கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: ஜூலை 10-இல் தரவரிசைப் பட்டியல்
ஐந்தரை
ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகம் அறிவித்தது.
பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகிறது! நீதிமன்ற உத்தரவு எதிரொலி
நீதிமன்ற
உத்தரவின் எதிரொலியாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான
பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகி வருகிறது. ஓரிரு நாள்களில்
இந்தப் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
Dept Exam Hall Ticket Published.
Departmental Examinations, May 2015 Memorandum of Admission (Hall Ticket) - TNPSC வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து
அனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில்,
டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட்
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர்
கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர்
நீதிமன்றத்துக்கு சென்றனர். அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
வகைப்பிரித்து கற்பிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிகளவில் தோல்வி!
அரசு பள்ளிகளில் ஏற்கனவே, ஸ்லோ லேர்னர் என
பிரித்து, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சிபெற
தவறியது தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?
‘ஆண்ட்ராய்டு
ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத்
தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள்
சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம்
வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து
பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...