தமிழகத்தில்,
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ், மே 29ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது.
Revision Exam 2025
Latest Updates
ஆகஸ்ட் 20 முதல் கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: ஜூலை 10-இல் தரவரிசைப் பட்டியல்
ஐந்தரை
ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகம் அறிவித்தது.
பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகிறது! நீதிமன்ற உத்தரவு எதிரொலி
நீதிமன்ற
உத்தரவின் எதிரொலியாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான
பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகி வருகிறது. ஓரிரு நாள்களில்
இந்தப் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
Dept Exam Hall Ticket Published.
Departmental Examinations, May 2015 Memorandum of Admission (Hall Ticket) - TNPSC வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து
அனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில்,
டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட்
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர்
கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர்
நீதிமன்றத்துக்கு சென்றனர். அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
வகைப்பிரித்து கற்பிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிகளவில் தோல்வி!
அரசு பள்ளிகளில் ஏற்கனவே, ஸ்லோ லேர்னர் என
பிரித்து, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சிபெற
தவறியது தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?
‘ஆண்ட்ராய்டு
ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத்
தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள்
சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம்
வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து
பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...
சிகரெட்டால் ஏற்படும் உடல்நல கேடுகளை இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும் விளைவிக்கும்: அதிர்ச்சி தகவல்
புகைப்பழக்கத்தை
குறைக்க பயன்படுவதாக கூறி விற்கப்படும் இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும்
ரசாயனங்கள் சிகரெட் ஏற்படுத்தும் அதே உடல்நல கேடுகளை விளைவிக்கும் என
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பீகாரில் 40 ஆயிரம் போலி ஆசிரியர்கள்; விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
பீகாரில்
கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் 3 லட்சம் புதிய
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் அவர்களின் பட்டப்படிப்பு குறித்து
எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆசிரியைக்கு உடல்நலம் பாதிப்பு: பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
கன்னியாகுமரியை
சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு
கூறி இருந்ததாவது:- என் மனைவி அல்போன்ஸ், நட்டலம் அரசு உயர்நிலைப்பள்ளியில்
ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இக்னோ தொலைதூரக் கல்விக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப்
பல்கலைக்கழகத்தில் (இக்னோ) தொலைதூரக் கல்வி அடிப்படையில் கல்வி கற்க
விரும்புவோர் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்!-விகடன்
பிரபலமான
கல்வி நிறுவனங்களில் தங்களுடைய குழந்தை படித்தால், நல்ல நிலைமைக்கு வந்து
விடுவான் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல.
படிக்கிற குழந்தை எங்கு படித்தாலும் நல்ல மதிப்பெண் பெறுவது இயல்பு.
பி.இ. சேர்க்கை: 10 ஆயிரம் பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு: இதுவரை 1.75 லட்சம் விநியோகம்
பி.இ. சேர்க்கை: 10 ஆயிரம் பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு: இதுவரை 1.75 லட்சம் விநியோகம்
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திங்கள்கிழமை வரை 10 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு
25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு |
அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தேர்வு நடைமுறையில் குழப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக் கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. |
நெல்லை பாளையங்கோட்டை காமராஜர்நகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு
தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.
மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவு.
அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம்
முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய சிடி போன்ற மினிமம் லெவல்
மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. இது, கல்வி அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
மே 19ம் தேதி வெளியாகுமா சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புத் தேர்வு?
நடப்பு கல்வியாண்டுக்கான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கின. 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 26ம் தேதியும், பிளஸ் 2 தேர்வுகள், ஏப்., 20லும் முடிந்தன.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்கு நிதி அளிக்க முடியாது: மத்திய அரசு மறுப்பு.
தமிழகத்தில், கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணாக, எல்.கே.ஜி.,
யு.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, நிதி அளிக்க முடியாது என மத்திய அரசு
மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது: ஐகோர்ட்
கடுமையான
குற்றச்சாட்டுகள் இருப்பதால் அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில்
தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மீன்வள படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இந்த
ஆண்டுக்கான (2015-16) இளங்கலை மீன்வள பட்டப் படிப்பு (பி.எஃப்.எஸ்சி)
மற்றும் மீன்வள பொறியியல் (பிஇ) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப் பினை
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டிருக் கிறது. அதன்படி, மீன்வள
படிப்பு களுக்கு இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் பல்கலைக்
கழகத்தின் இணையதளத்தின் (www.tnfu.ac.in) மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். (தாள் வடிவிலான விண்ணப்பம் வழங்கப் படாது).
மாநகர பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகர
போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.