Half Yearly Exam 2024
Latest Updates
சிவில் சர்வீஸ் 2011 ல் முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு சலுகை
கடந்த, 2011ம் ஆண்டில், சிவில் சர்வீசஸ்
முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கு, இந்த ஆண்டு கூடுதலாக, ஒரு வாய்ப்பு
வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, மத்திய
பணியாளர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு
எதிராக, கடந்த ஆண்டு ஜூலையில், ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது
'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில்
மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை
அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம்
குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர்.
DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED
DSE ; SGT/SPL TEACHER'S TO BT SOCIAL SCIENCE PANEL RELEASED
தலைமைஆசிரியர் டார்ச்சர் -ஆசிரியை தற்கொலை : புதுக்கோட்டை சிஇஓ காலில் விழுந்து கணவர் கதறல்:நக்கீரன்
புதுக்கோட்டை
காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர்
தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக
பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிாியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த
ஆசிாியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து
கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு: இருபது செல்பேசிகளுடன் எட்டாம் வகுப்பு மாணவர் கைது
சேலம்
மாவட்டம், தம்மம்பட்டி அருகேயுள்ள உலிபுரம் ஊராட்சிக்குள்பட்ட
மூக்காகவுண்டன்புதூர். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை
இரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு அலுவலக பயன்பாட்டுக்கு வைத்திருந்த
இரு மடிக்கணினிகளை திருடிச்சென்றனர்.
கல்வி உரிமைச் சட்டத்தை கேள்விக்குறியாக்கும் மசோதா! எம். மார்க் நெல்சன்
மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கல்வி
உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை
தெரிவித்தனர். இதனால்,
குழந்தைகளின் வளர்ச்சியும், கல்வியும் பாதிக்கப்படுவதோடு பழைய நிலைக்கே
அவர்கள் தள்ளப்படும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
யுபிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் இல்லை: மத்திய அரசு
யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றம்
இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று
அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம் யுபிஎஸ்சி தேர்வு முறை
குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு யுபிஎஸ்சி
தேர்வு முறை, தேர்வு எழுதுவோரின் தகுதி, அதற்கான பாடதிட்டம் உள்ளிட்டவை
குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் மாற்றுச்சன்றிதளையும் வழங்க வேண்டும் - அரசுத்தேர்வுகள் இயக்குனர்
+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண்
சான்றிதழுடன் மாற்றுச்சான்றிதழையும் வழங்க வேண்டும். அதில் மாணவர்களுக்கு
வழங்கும் பிரதியில் மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண் என்ற இடத்தில் REFER
ORGINAL CERTIFICATE என எழுத வேண்டுமென அரசுத்தேர்வுகள் இயக்குனர்
அறிவுறுத்தியுள்ளார்.
தவறு, தவிர்க்க மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண்,டி.சி.,
சில தவறு, குளறுபடி தவிர்த்து பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்
பிளஸ்
2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்
வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கு அதிகமானோர்
விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 துணைத்தேர்வு பதிவு துவக்கம்
பிளஸ்
2 தேர்வில், 78,722 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதோர் மற்றும்
தேர்வுக்குப் பதிவு செய்து, பல காரணங்களால் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான
சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் இறுதி வாரத்தில் நடக்க உள்ளது.
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு எப்போது?
மத்திய
பாட திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 29ம்
தேதிக்குள் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு மார்ச்,
ஏப்ரலில் நடந்த, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வுக்கான, முடிவுகள், முறையே, வரும் 19ம் தேதியும், 29ம் தேதியும்
வெளியிட, சி.பி.எஸ்.இ.,
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண்
பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்தால், அதற்கு முன்பே கூட வெளியிடப்படலாம்.
'மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு தேவை'-தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர்
சேர்க்கை எண்ணிக்கையில், கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என, தமிழ்நாடு
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்ஜி., கல்லூரிகளில் ஐ.டி., இடங்கள் குறைப்பு: பல இடங்களில் எம்.சி.ஏ., பாடப்பிரிவு ரத்து
தமிழகத்தில்,
அண்ணா பல்கலைக்குட்பட்ட பல பொறியியல் கல்லூரிகளில், ஐ.டி., படிப்புகள்
குறைக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் எம்.சி.ஏ., - எம்.டெக்., படிப்புகள்
ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில்
உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக்
கோரும் மனுவைப் பரிசீலிக்க அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு சென்னை உயர்
நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
பெரியார் மணியம்மை பல்கலை.யில் ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். படிப்பு
தஞ்சாவூர்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த
பி.எஸ்ஸி., பி.எட். பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி: 25 சதவீத இடங்களை முழுமையாக நிரப்பக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
இலவச
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத
இடங்களில் ஏழை மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக
அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
டி.இ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு
மாவட்டக்
கல்வி அதிகாரி - டி.இ.ஓ., பதவிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டு உள்ளன; மெயின் தேர்வு, ஆக., 6ம் தேதி முதல், மூன்று நாட்கள்
நடக்கிறது. கல்வித் துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலி இடங்களை நிரப்ப,
2014 ஜூன் 8ம் தேதி, முதல்நிலை எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில், ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
.
.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைவது... : காரணம் புரியாமல் பெற்றோர் அதிர்ச்சி
அனுபவமிக்க ஆசிரியர்கள்,
கட்டமைப்புகள்இருந்தும், பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி
சதவீதம் குறைந்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான கடலூர்,
கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.