தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, அதிகாரிகள் ஆர்வமின்மையால் கேள்விக்குறியாகி வருகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
CSAT தாள், தகுதித் தாளாக மாற்றம்: புதிய முறை நடப்பாண்டு முதல் அமல்
சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வில் CSAT தாள் தகுதித் தாளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 படித்தவர்கள் உதவித்தொகையுடன் ஜப்பானில் படிக்கலாம்: தூதரகம் அறிவிப்பு
ஜப்பானில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் உயர்கல்வி பெற வசதியற்ற மாணவ, மாணவி-உதவ நினைப்போர் உதவிக்கரம் நீட்டலாம்
பிளஸ் 2 தேர்வில் 1,100 மதிப்பெண்களுக்கு
மேல் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவி உயர் கல்வி பயில வசதியின்றி தவித்து
வருகின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள்.
திருத்தங்கல் சிறப்புப் பள்ளி மாணவி
சி.முத்துச்செல்வி கணக்கு பதிவியல் பாடத்தில் 200-க்கு 200, வணிகவியலில்
199, பொருளியலில் 194, கணினி அறிவியலில் 183, தமிழில் 194, ஆங்கிலத்தில்
165 என மொத்தம் 1,135 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை
படைத்துள்ளார்.
தனியார் நர்சரி பள்ளி மோகத்தால் மூடப்படும் அபாயத்தில் அங்கன்வாடி மையங்கள்
பெற்றோர்களின் நர்சரி பள்ளி மோகத்தாலும், அரசின் அக்கறையின்மையாலும்
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
TNOU பி.எட். படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும்
தமிழ்நாடு திறந்தநிலை பல்ககலைக்கழகத்தில் (TNOU) பி.எட். படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் பாடப்புத்தகம் மீண்டும் விற்பனை
பெற்றோர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு பின், சென்னை, டி.பி.ஐ.,
வளாகத்தில், பாடப்புத்தகம் விற்பனை செய்யும் கவுன்டர் மீண்டும்
திறக்கப்பட்டு, புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
பள்ளிக்கூடம் திறக்கும் ஜூன் 1–ந் தேதி 67 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு
பள்ளிக்கூடங்கள் ஜூன் 1–ந் தேதி
திறக்கப்படுகின்றன. அன்று அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் படிக்கும் 67 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள்,
நோட்டுப்புத்தகங்கள், அட்லஸ் ஆகியவை விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளன என்று
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
ஊதியம் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி ஆசிரியை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு
சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில்
பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஆசிரியை தனக்கு சம்பளம் வழங்க உத்தரவிடுமாறு,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகனிடம் செவ்வாய்க்கிழமை மனு
அளித்துள்ளார்.
சென்னை ஐ.சி.டி. இணை உறுப்பினராக கலசலிங்கம் பல்கலை. தேர்வு
சென்னையில் உள்ள அகில இந்திய தகவல் மற்றும்
தொடர்பு பயிற்சி கழகத்தின்(ஐ.சி.டி) இணை உறுப்பினராக விருதுநகர் மாவட்டம்,
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான
நினைவுக் கேடயம் மற்றும் சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
1.50 லட்சத்தை தாண்டியது பி.இ. விண்ணப்ப விநியோகம்
பொறியியல்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை
மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 199 விநியோகமாகியுள்ளன.
அரசு பள்ளி கழிப்பறைகளுக்கு பிறந்தது விடிவு: உள்ளாட்சிகளிடம் பராமரிப்பு பணி
அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம்
ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில், போதுமான கழிப்பறை
வசதியில்லை. இருக்கும் பள்ளிகளிலும், முறையான பராமரிப்பு இல்லாததால்,
சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளை வழங்க ஏற்பாடு
பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண்
பட்டியல் நாளை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மாணவர்கள் உயர்
கல்விக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி
வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதி தேர்ச்சி
பெற்றுள்ளனர். இவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு வசதியாக தற்காலிக
மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும்.
தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுடன் மேயர் ஆலோசனை
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
குறைந்தது குறித்து தலைமையாசிரியர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை
நடத்தப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின்
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்தது. இதனால் மாநகராட்சி
கல்வித் துறை மீது குறை கூறப்பட்டு வந்தது.
பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதம்
பிளஸ் 2 தேர்வில் பள்ளிகளின் வகை வாரியாக தேர்ச்சி சதவீதத்தை அரசுத்
தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சராசரியாக
84.26 சதவீதமாக உள்ளது. கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகளின் தேர்ச்சி
அதிகபட்சமாக 99.20% என்ற அளவில் உள்ளது.
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்
டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில்
நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகம்
முழுவதும் 34 மையங்களில் (அரசுப் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்)
இன்று முதல் ஜூன் 9 வரை வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை
நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை
வழங்கப்படும். ஜூன் 9 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மதுரையில் அமைகிறது 'எய்ம்ஸ்' மருத்துவமனை: அறிக்கை சமர்ப்பித்தது ஆய்வுக்குழு
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடங்களை ஆய்வு செய்த மத்திய குழு,
ஆய்வு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; மதுரையில், 'எய்ம்ஸ்'
மருத்துவ மனை கிளை அமைக்க, மத்திய குழு பரிந்துரைத்து உள்ளதாக
கூறப்படுகிறது.
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
ஆய்வக உதவியாளர் பணியிடம்:விருதுநகர் மாவட்டத்தில் 41556 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 41556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான தேர்வு
நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு - தலைமை ஆசிரியர்களிடம் இன்று விசாரணை
பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைவு
குறித்து, ஆதி திராவிட மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை
ஆசிரியர்களிடம், மாவட்ட வாரியாக இன்று விசாரணை நடக்கிறது. பிளஸ் 2
தேர்வில், அரசு பள்ளிகள், 84.26; மாநகராட்சி பள்ளிகள், 87; ஆதிதிராவிட
பள்ளிகள், 82.43 சதவீதம் என, குறைந்த அளவு தேர்ச்சி பெற்றன. மாநில, மாவட்ட
முன்னணி இடங்களையும் அரசு பள்ளி மாணவர்கள் பெறவில்லை.
பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி
பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும்
பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு
கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ்
மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
உடுமலை கல்வி மாவட்டம் அமைய எதிர்பார்ப்பு! நிர்வாக சிக்கலை சந்திக்கும் கல்வித்துறை
திருப்பூர் மாவட்டம் உருவாகி, ஏழு ஆண்டுகளாகியும், உடுமலை, தாராபுரம்
வருவாய் கோட்டங்களுக்கான கல்வி மாவட்டம், இதுவரை துவங்கப்படவில்லை. இதனால்,
நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை, கல்வித்துறையினர் சந்தித்து
வருகின்றனர்.
மாட்டுப் பாலால் ஒவ்வாமையா: குழந்தைக்கு ஆட்டுப்பால் தரலாமே
மாட்டுப் பாலால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு வெள்ளாட்டுப் பால்
கொடுக்கலாம், என கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம்
தெரிவித்துள்ளது. மாட்டுப்பால் மூன்று வயதிற்குட்பட்ட சில குழந்தைகளுக்கு
ஒவ்வாமையை ஏற்படுத்தும். இக்குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் கொடுத்தால் எளிதில்
செரிமானமாகும் என, கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.