Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதுரையில் அமைகிறது 'எய்ம்ஸ்' மருத்துவமனை: அறிக்கை சமர்ப்பித்தது ஆய்வுக்குழு

        தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடங்களை ஆய்வு செய்த மத்திய குழு, ஆய்வு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பித்து உள்ளது; மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவ மனை கிளை அமைக்க, மத்திய குழு பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கான குறுக்கெழுத்துப் போட்டி: சிபிஎஸ்இ அறிவிப்பு

      பள்ளி மாணவர்களுக்கு இடையே ஆங்கில மொழித் திறன், சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், குறுக்கெழுத்துப் போட்டியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.  இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் 171 உதவி, இளநிலை ஆய்வாளர் பணிகள்

        தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாகவுள்ள 171 உதவி ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


TAMILNADU MEDICAL COLLEGE CUT-OFF MARKS 2014 - 15


உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

 Image result for inverter 
            இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்.

ஆய்வக உதவியாளர் பணியிடம்:விருதுநகர் மாவட்டத்தில் 41556 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

             விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 41556 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

பிளஸ் 2 பொதுத் தேர்வு - தலைமை ஆசிரியர்களிடம் இன்று விசாரணை

            பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறைவு குறித்து, ஆதி திராவிட மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட வாரியாக இன்று விசாரணை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், 84.26; மாநகராட்சி பள்ளிகள், 87; ஆதிதிராவிட பள்ளிகள், 82.43 சதவீதம் என, குறைந்த அளவு தேர்ச்சி பெற்றன. மாநில, மாவட்ட முன்னணி இடங்களையும் அரசு பள்ளி மாணவர்கள் பெறவில்லை.
 

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி

         பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.  
 

உடுமலை கல்வி மாவட்டம் அமைய எதிர்பார்ப்பு! நிர்வாக சிக்கலை சந்திக்கும் கல்வித்துறை

          திருப்பூர் மாவட்டம் உருவாகி, ஏழு ஆண்டுகளாகியும், உடுமலை, தாராபுரம் வருவாய் கோட்டங்களுக்கான கல்வி மாவட்டம், இதுவரை துவங்கப்படவில்லை. இதனால், நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை, கல்வித்துறையினர் சந்தித்து வருகின்றனர்.

மாட்டுப் பாலால் ஒவ்வாமையா: குழந்தைக்கு ஆட்டுப்பால் தரலாமே

           மாட்டுப் பாலால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு வெள்ளாட்டுப் பால் கொடுக்கலாம், என கால்நடை மருத்துவ பல்கலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மாட்டுப்பால் மூன்று வயதிற்குட்பட்ட சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இக்குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் கொடுத்தால் எளிதில் செரிமானமாகும் என, கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

விலையில்லா சைக்கிள் பள்ளிகளுக்கு 'சப்ளை'

       பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ள, விலையில்லா சைக்கிள் பாகங்களை, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், சைக்கிள் நிறுவனங்கள் அனுப்பியுள்ளன. அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்பில் படிக்கும், மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்த, தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது.
 

மாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள்:தேர்வறைக்குள் அனுமதிக்க மறுத்ததால் சர்ச்சை


         காஷ்மீரில் பசுமாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள், அதை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க ‌மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

3,000 பணியிடங்கள் காலி: வி.ஏ.ஓ. சங்கம் அதிருப்தி

    தமிழகத்தில் 3,000 வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலியாக உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா-விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

      விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதையும் வரலாறு: அழிவின் விளிம்பில் அரிய பாடப்பிரிவுகள்: அவலத்தில் பி.ஏ., தமிழ் இலக்கியம்

          வேலைவாய்ப்பு, சம்பளம்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதால், தனியார் கல்லுாரிகளில் வரலாறு, தமிழ் இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அரியபாடப்பிரிவுகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

இன்ஜி., கல்லூரி திறன் பட்டியல் வெளியாவதில் சிக்கல்: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லாததால் அண்ணா பல்கலை மவுனம்

          அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி கிடைக்காததால், தமிழக பொறியியல் கல்லூரிகளின் செயல்பாட்டுத் திறன் பட்டியலை, இந்த ஆண்டு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சிற்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை

          மாமல்லபுரத்தில் உள்ள, அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இக்கல்லூரியில், தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை (பி.டெக்.,); கவின்கலை இளையர் மரபு சிற்பக்கலை பட்டம் (பி.எப்.ஏ.,); கற்சிற்பம், சுதை சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய தனித்தனி சிற்ப பிரிவுகள்; கவின்கலை இளையர் மரபு  ஓவியம் மற்றும் வண்ணம் (பி.எப்.ஏ.,), ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
 

கர்நாடகாவில் கல்வித்துறை பதவி உயர்வுக்கு கம்ப்யூட்டர் கல்வி முக்கியம்

       பெங்களூரு: 'கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான தேர்வில் வெற்றி பெறாத, அரசு பட்டப்படிப்பு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் அல்ல' என, பட்டப்படிப்பு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

புதுவைக்கு தனி மேல்நிலை கல்வி வாரியம் அமைக்க வேண்டும்: முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை

முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
      சமீபத்தில் வெளிவந்துள்ள பிளஸ்–2 பொதுத் தேர்வு முடிவுகள் புதுவையில் தேர்ச்சி சதவீதம் சென்ற ஆண்டைவிட குறைந்திருப்பதை காட்டுகிறது. 

குரூப்-2 தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா? - விளக்கம்

            துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழி லாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை பல்கலையில் இலவச 'நெட்' பயிற்சி

          சென்னை பல்கலையில், எஸ்.சி., - எஸ்.டி., ஓ.பி.சி., மாணவர்களுக்கு, 'நெட்' தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பேராசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

          விதிகளை மீறி, பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் பட்டியலை கணினி மூலம் சரிபார்த்து, 'ரெய்டு' நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப வினியோகம் துவக்கம்: ஜூன் 19ல் முதற்கட்ட கலந்தாய்வு?

            தமிழகம் முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ''ஜூன், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது,'' என, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

919 பக்க தீர்ப்பின் விபவரம்: கடனை வருவாயாகக் கணக்கிடாமல்சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது

      ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி இன்று காலை வழங்கினார். அவர் அளித்த 919 பக்க தீர்ப்பின் விபவரம்:
1. குற்றம் சாட்டபட்டவரின் சொத்துக்களுடன், நிறுவங்களின் மதிப்பு, கட்டுமான செலவும் அரசு தரப்பால் சேர்க்கப்பட்டுள்ளன.

3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார்.

ஜெயலலிதா விடுதலை; மேல்முறையீடு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

              சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து  கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.  தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்தடைந்தார்.

"கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகளை தடை செய்!"

இது குடும்ப உறவுகளுக்கு குட்பை சொல்வதோடு, பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை எகிற வைக்கும்...

தேர்ச்சி விழுக்காடும், அரசுப் பள்ளி எதிர்காலமும்!!

            தமிழ்நாடு ,புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 7 அன்று வெளியிடப்பட்டன. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம். தேர்ச்சி பெறாதவர்கள் சோர்ந்து போகாமல் அடுத்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துவோம். தேர்வு முடிவுகளோடு அரசுப் பள்ளிகள் பின் தங்கின என்றும் தனியார் பள்ளிகள் முந்தின என்றும் சில நாளேடுகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது உண்மைதான் என்றாலும் அரசுப் பள்ளிகளை அலட்சியப்படுத்தி தனியார் பள்ளிகளை உயர்த்தும் தொனி இதில் இருப்பது தான் சங்கடம்.

'வேலை கிடைக்காது என்ற விரக்தியில் பதிவை புதுப்பிக்காத 57 லட்சம் பேர்!'

          அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால், வேலை கிடைக்காது என்ற விரக்தியில் 57 லட்சம் பேர் பதிவை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு

          பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், சாதாரண, ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் படித்தால், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' : கல்வித்துறை முடிவு - Dinamalar

          'ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் சரியாகப் பாடம் நடத்தாததே, பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம்' என, கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், 'ஓபி' அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவை கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.


கணினி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

      பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கணினி ஆசிரியர்கள் சார்பில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive