Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிமாறுதல் இல்லைஆசிரியர் பயிற்றுனர்கள் கவலை

          விரைவில் 885 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,” என அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் வாசுதேவன், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் அபிராமி, மாவட்ட தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் காசிபாண்டியன் துவக்கி வைத்தார்.

'இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து'

           'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன. 

சிறந்த கல்வியாளராக தேர்வாகி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், பிரபல'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்திய ஆசிரியர்களின் படைப்புகளை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் 'மைக்ரோசாப்ட்' ஆய்வு செய்தது.

பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டியது என்ன? பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

         பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

1,145 மதிப்பெண் எடுத்து கல்லூரியில் சேர வழியில்லாத கூலி தொழிலாளி மகன்

       திருச்சி மாவட்ட அளவில், அரச பள்ளிகிளல் பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்ற கூலி தொழிலாளியின் மகன், வறுமையால் கல்லுாரியில் சேர வழியில்லாமல் தவிக்கிறார். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சப்பெருமாள்பட்டி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மோகன். இவர், பிளஸ் 2 தேர்வதில், 1,145 மதிப்பெண் எடுத்துள்ளார். அரசு பள்ளிகளில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். தற்போது, சென்னையில் ஒரு ஓட்டலில் பணி செய்கிறார்.

விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு- காரணம் என்ன?

          மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது.

எளிமையான வருமான வரி படிவம்இம்மாத இறுதியில் அறிமுகம்

          எளிமையான வருமான வரி கணக்கு தாக்கல் படிவம், இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என, தெரிகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 2015 - 16ம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை, கடந்த மாதம் வெளியிட்டது. 

அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

         சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும்

          தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் கிடைக்கும்.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
 

48 மணி நேரத்தில் 'பான்' எண் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை

          'பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வருமானவரித் துறையால் வழங்கப்படும், 'பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்பதன் சுருக்கம் தான், பான். வருமான வரி செலுத்துபவர்களும், வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வரவு - செலவு மேற்கொள்பவர்களும், பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஆலோசனை மையம் : கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு

           'மாணவர்களுக்கு, தனி ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மத்திய பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகளுக்கு, பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டு உள்ளது. அதன் விவரம்: அனைத்து உயர்கல்வி மையங்களிலும், மாணவர்களுக்கான ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். 

Lab Asst Exam 2015 Free Online Test For 6th Science

பாஸ் ஃபெயில் என்ற முறை வேண்டாமே

        அச்சம் என்பது மடமையடா என்பதற்கேற்ப குழந்தைகளை பயம் அறியாமலும், பயம் இல்லாமலும் வளர்க்க வேண்டும். ஆனால் அவர்களை பயமுறுத்தும்படி அமைவதுதான் தேர்வு. காரணம் பாஸ், ஃபெயில் என்ற முறைதான் அந்த பயத்தை ஏற்படுத்துகிறது.

பாட்டி வைத்தியம்.....

இருமல் :-
இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது.

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்குமா?

         'இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடும் முடிவை கைவிட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக, இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள், நீதிமன்றம் சென்றுள்ளதால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

ராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை

          புனேயிலுள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியில் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் இந்திய ராணுவ மருத்துவமனைகளில் டாக்டராக பணியமர்த்தப்படுவர்.

ரஷியாவில் கல்வி பயில விருப்பமா? வழிகாட்டும் ரஷிய கல்விக் கண்காட்சி

          ரஷியாவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும், ரஷிய கல்விக் கண்காட்சி சென்னையில் மே 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சியை தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் செர்கெய் எல்.கோடாவ், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப சட்ட திருத்தம் வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை.

          அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்  அடிப்படையில், இடஒதுக்கீடு விதிகளுக்குட்பட்டு நிரப்புவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

கார்பன் - டை - ஆக்சைடு அதிகரிப்பால் சுற்றுச்சூழலுக்கு எச்சரிக்கை மணி: கட்டுப்படுத்தாவிட்டால் மோசமான விளைவு ஏற்படும்.

           பூமியின் காற்று மண்டலத்தில், கார்பன் - டை - ஆக்சைடின் விகிதம் வரலாறு காணாத உச்சத்தை சமீபத்தில் எட்டியுள்ளது. 'இதை கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த, 10 ஆண்டுகளில், புயல், கடுமையான வெப்பம், வறட்சி போன்ற பேரிடர் ஏற்படலாம்' என, சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 
 

இன்ஜி., படிப்புக்கு 4 நாட்களில் 1.30 லட்சம் விண்ணப்பம் விற்பனை!

         அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிப்புக்கு, 1.30 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட பொறியியல் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விற்பனை, மே, 6ம் தேதி துவங்கியது. 

66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

         திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு

         பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். 

'இன்ஸ்பயர்' விருது - அறிவியல் தொழில்நுட்ப பயிற்சிக்காக திருப்பூர் மாணவர்கள் ஜப்பான் பயணம்

          அறிவியல் தொழில்நுட்ப பயிற்சிக்காக, தமிழக மாணவர்கள், மூன்று பேர் உட்பட, நாடு முழுவதிலும் இருந்து, 30 மாணவர்கள், ஜப்பான் செல்கின்றனர். பள்ளிகளுக்கு இடையேயான, மாவட்ட அறிவியல் கண்காட்சியில் வென்று, மாநில அளவிலான போட்டியில் வெல்லும் மாணவர்கள், 'இன்ஸ்பயர்' விருது பெறுகின்றனர்.

பிளஸ் 2: 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

          பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.

போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்



      முப்பதைத் தாண்டியவர்களா நீங்கள்? அப்படி யென்றால், உங்களில் பெரும்பாலானோருக்கும் இப்படிப்பட்ட பள்ளிப் பருவம் வாய்த்திருக்கும். காலை 8.30. இட்லியைப் பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருப் பீர்கள். வாசலிலிருந்து குரல் கேட்கும், “ஏய், மணிமாறா வாடா. பள்ளியோடத்துக்கு லேட்டாவுது.” உங்களோடு மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் குமாரின் குரல்தான் அது.
 

எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?


              மருத்துவத்தை அடுத்து மாணவர்களை அதிகம் வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான். முன்பு பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இப்போது தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து விட முடியும். ஆனால் எல்லோருக்கும் பொறியியல் படிப்பு பொருந்துமா...?


பள்ளியும் கல்வியும்; தினமணி

         பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமன்றி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தினமணியின் வாழ்த்துகள். பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,39,291 மாணவர்களில் 7,60,569 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 

எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் விண்ணப்பம்

          தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

9, 10ம் வகுப்புகளுக்கு இலவச 'அட்லஸ்' புத்தகம்

          தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், 'அட்லஸ்' புத்தகம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே வழங்கப்பட்டது. 
 

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும்

    பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஜூன் 19ல் மாணவர் தர வரிசைப்படி கல்லூரி பட்டியல் வெளியீடு

       ''கவுன்சிலிங்கில் முடிவெடுக்க வசதியாக, கடந்த ஆண்டில் மாணவர் தர வரிசைப்படியான கல்லூரிகள் பட்டியல், ஜூன், 19ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூலம் கட்டாயமாகிறது 'ஆதார்'

          பள்ளிகள் மூலம், 'ஆதார்' எண் பதிவு செய்வதை, கட்டாயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'ஆதார்' எண் உருவாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர், 'ஆதார்' எண் அளிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

கலை, அறிவியல், அக்கவுன்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு உயர்வு: இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கு இணையாக அதிகரிப்பு

         பி.இ., - பி.டெக்., மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு ஈடாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகள் இந்த ஆண்டு முன்னணிக்கு வந்துள்ளன. இதற்கான கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற அளவுக்கு, மாணவ, மாணவியரின் கவனம் புதிய திசை நோக்கி திரும்பியுள்ளது.

ஓய்வூதியம், 2 காப்பீட்டுத் திட்டங்கள் மோடி தொடங்கி வைத்தார்

         ஒரு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2 காப்பீட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive