Revision Exam 2025
Latest Updates
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது மே 11-ல் தீர்ப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மேல்முறையீட்டு மனு
மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகும் என அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர்
வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு
மனுக்கள் மீதான தீர்ப்பு, வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய தமிழகம்கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி.,MD.,MLA அழைப்பு..!
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு உரிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை
வெளியிடாத தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை
கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்டத்தில்மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கடைசி
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள
அனைத்துதனியார் சுயநிதி பள்ளிகளிலும் (சிறு பான்மை பள்ளிகள் தவிர்த்து)
மாணவர்களை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், வரும் 19-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண் டும்.
தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ல் வெளியாகும்
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி
(திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
8.5.2015
- Lab Asst Study Material | 6th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 7th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 8th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 9th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
- Lab Asst Study Material | 10th Science Book Important Points [Tamil Medium PDF Document Download]- Click Here
இடமாறுதல் கவுன்சிலிங்கை மே மாதம் நடத்த வேண்டும ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை மே மாதம் நடத்த வேண்டும் என
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி கழகம் வலியுறுத்தி
உள்ளது.தேனி மாவட்ட தலைவர் சின்னராஜா கூறியதாவது:
8ம் வகுப்பு பொது தேர்வு: ஹால் டிக்கெட் அறிவிப்பு
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட
அறிவிப்பில், 'மே மாதம் நடக்கும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஆன் -
லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், மே 8ம் தேதி (நேற்று) முதல், ஹால்
டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப
எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பெறலாம்' என,
கூறப்பட்டுள்ளது.
அரசு திரைப்படக் கல்லூரி: வரும் 11 முதல் விண்ணப்பம் தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக்
கல்லூரியில் வரும் 11 (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட
உள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் சரிவு! தலைமையாசிரியர்களுக்கு விரைவில் 'மெமோ'
கோவை மாநகராட்சி பள்ளிகள், கடந்தாண்டு பிளஸ்
2 பொதுத்தேர்வில், 91.82 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்தாண்டு,
தேர்ச்சி சதவீதம் குறைந்து, 89.34 சதவீதம் பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதம்
குறைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு
பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல்,
வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண்
நிர்ணயிக்கப்படுகிறது.
ADW Welfare TET Posting Regarding...
|
|||||||||
|
பிளஸ் 2 தேர்வு முடிவால் வருத்தம்: ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு ‘104’ சேவை மூலம் ஆலோசனை
பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது, மதிப்பெண் குறைந்தது போன்ற காரணங்களால் சங்கடமாக உணர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் என 6
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று ‘104’ சேவை மையத்துக்கு தொடர்பு
கொண்டு ஆலோசனை பெற்றனர்.
சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
பிளஸ்–2 தேர்வு முடிவு: மனஅழுத்தத்தால் தவித்த மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்
தேர்வு
நேரங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கும் அருமருந்தாக 104 உதவி மையம்
விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு
மற்றும் குடும்ப நல துறையின் கீழ் இயங்கி வரும் இந்த உதவி மையம் பல்வேறு
வழிகளில் உதவிகரமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் மருத்துவ ஆலோசனைகளை
வழங்கும் இந்த மையம், தேர்வு நேரத்தில் முழுக்க முழுக்க மாணவர்களின் மனதில்
இருக்கும் வலியை போக்குவதற்கு பயன்படுகிறது.
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம்
இதுகுறித்து, தேர்வுத் துறை
இயக்குனர் தேவராஜன்
வெளியிட்ட அறிவிப்பு:
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு,
மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும்,
தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
பி.இ. விண்ணப்பம்: இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன? எங்கே பெறலாம்?
பொறியியல் படிப்புகளில் சேரப்போகும்
மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள்
அவற்றை எங்கே
பெறுவது என்பன
குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
மே 19 முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்
தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக்
கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள்.
பாஸ்வேர்டை மறந்தாலும் கவலையில்லை: வலைத்தளங்களை பயன்படுத்த உதவும் புதிய சாப்ட்வேர் வருகிறது
பேஸ்புக்,
டுவிட்டர் என பல்வேறு இணைய செயல்பாடுகளுக்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு)
மறக்காமல் இருப்பது மிக கடினமான செயல்களில் ஒன்று. இந்த கஷ்டத்தை
போக்கும்விதமாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கடவுச்சொல்லுக்குப்
பதிலாக கேள்வி-பதில் முறையை உருவாக்கி உள்ளார்கள்.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு
10-ஆம்
வகுப்பு தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிந்து கொள்வதற்கென
போதிய மையங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் அமைக்க வேண்டும்
என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்ஜி.,க்கு 'கட்-ஆப்' 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு : மருத்துவத்திற்கு 0.5 சதவீதம்குறைகிறது
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்' அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில்,
'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்கிறது அரசு பள்ளிகளின் வீழ்ச்சி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது.
தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது
தெரியவந்து உள்ளது.
அதிர்ச்சி தரும் வட மாவட்டங்கள்
பிளஸ்
2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் வட மாவட்டங்களில் பெரிய முன்னேற்றம்
ஏற்படவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, அரியலுார்
உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம், மற்ற மாவட்டங்களை விட
குறைந்தே உள்ளது. மாநில 'ரேங்க்' பெறுவதிலும் தேர்ச்சி சதவீதத்திலும் மற்ற
மாவட்டங்களை இந்த ஆண்டாவது பின்னுக்குத் தள்ளும் என்ற எதிர்பார்ப்பு
வழக்கம் போல் பொய்த்துப் போனது. மற்ற மாவட்டங்கள் 90 சதவீதத்தை எட்டிய
நிலையில், இம்மாவட்டங்கள் இன்னும் 80 சதவீதத்தை தக்க வைக்கவே போராடும் நிலை
உள்ளது.