Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இதர பிற்படுத்தப்பட்டோரின் 'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த பரிந்துரை: ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10.50 லட்சமாக ஆக்க தேசிய கமிஷன் விருப்பம்

       'ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், 'கிரீமி லேயர்' உச்சவரம்பை, தற்போதைய, ஆறு லட்சம் ரூபாயில் இருந்து, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 

14ம் தேதி தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகம் பிளஸ் 2 முடிவுகள் நாளை வெளியாகிறது

      பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதை இணைய தளத்தில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதிய மாணவ, மாணவர்கள் தாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.  

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம் - தேர்வுக் கட்டண விபரம்

      இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். 

நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' : 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

          தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது; மார்ச், 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.43 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகிறது.

25 சதவீத இடஒதுக்கீடு: மே 19 வரை விண்ணப்பங்களை விநியோகிக்க தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

          கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மே 19 வரை விண்ணப்பங்களை பெற்றோருக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டார்.

அக்னி நட்சத்திரம் - 'வெயிலில் செல்லாதீங்க': டாக்டர்கள் அறிவுரை

        'அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளதால், பகல் நேரத்தில், வெயிலில் செல்ல வேண்டாம்; அதிகளவில், நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். 

ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள் வெளியிட்டு சிவகாசி பள்ளி ஆசிரியை சாதனை !

        சிவகாசி காரனேசன் துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரியும் இடைநிலை ஆசிரியை, கவிஞர் மாலாபிரியதர்ஷினி ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள் வெளியிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் சிறந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்

          பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்றால் வேப்பங்காயை சாப்பிடுவது போல கசப்பான ஒன்றாகும். இதனை தவிர்ப்பதகாக அவர்கள், உடல்நிலை சரியில்லை எனவும், குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டியும் நகர்ப்புறங்களில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வது வாடிக்கையாக அரங்கேறி வருகிறது

TET தேர்வை ரத்து செய்வது கூடாது - மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

        ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது,கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியும்!

      நொறுங்கி வீழ்ந்த கட்டிடங்களின் முன்பாக செல்ஃபி எடுத்துக்கொள்பவர்கள், பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் பசியை மூலதனமாக்கி உணவுகளை கொள்ளை விலைக்கு விற்பவர்கள்... இவர்கள் எல்லோரையும் விட மோசமானவர்கள் வதந்தி பரப்புகிறவர்கள். நாசாவில் சொன்னார்கள், நாங்குனேரியில் சொன்னார்கள் என ‘அடுத்த பூகம்பம் இன்னும் 24 மணி நேரத்தில் வரும்’ என செல்போனி லும் இணையத்திலும் இந்தியா முழுக்க வதந்தி பரப்பினார்கள் பலர். பூகம்பத்தைக் கணிக்க முடியுமா?

வில்லங்கமான வாகனச் சட்டம்! அறிவோம் அனைவரும்

அபராதம்... சிறை... லைசென்ஸ் பறிப்பு...வாகன முடக்கம்...

       ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். தினமும் சுமார் 360 பேர். கடந்த 10 ஆண்டுகளில் 46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் படுகாயமடைந்து தங்கள் வாழ்வைத் தொலைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஒரு மத்திய அமைச்சரை சாலை விபத்துக்கு பலி கொடுத்தது நரேந்திர மோடி அரசு. ‘‘விபத்துகளைத் தடுக்க புதிய சட்டம் வரும்’’ என அப்போதே சொன்னார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம்

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

MAT நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ளும் மேலாண்மை கல்லூரிகளின் பட்டியல்

  மேனஜ்மென்ட் ஆப்டிடியூட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு மேட், அனைத்திந்திய ஆப்டிடியூட் டெஸ்டிங் சர்வீஸ் (AIMATS), ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.

தேர்வில் காப்பி அடித்ததாக மாட்டிய போலீஸ் ஐ.ஜி.

கேரளாவில் சட்டத் தேர்வில் காப்பி அடித்ததாக போலீஸ் ஐ.ஜி. டி.ஜே. ஜோஷ் சிக்கினார். 

      கேரள மாநிலம் திருச்சூர் ஐ.ஜி.,யாக இருப்பவர் ஜோஸ். அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு (எல்.எல்.எம்.,) படித்து வந்தார். கொச்சி கலமச்சேரியிலுள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் கிரைம் 2ம் தாள் தேர்வெழுதிய ஜோஸ், பிட் அடித்ததை தேர்வறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் அளித்தார். கேரள ஐ.ஜி., ஒருவர் தேர்வில் பிட் அடித்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தியாவில் 5 முதல் 10% குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிப்பு

  இந்தியாவில் 5 முதல் 10 சதவீதம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய குழந்தை மருத்துவர்கள் (சென்னை கிளை) செயலாளர் டாக்டர் சோமந்தரம் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடப்பதை விளம்பரப்படுத்த இயக்குநர் உத்தரவு

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு புதிய அடையாளத்தைக் கொடுக்கும் ஆக்ஸ்போர்டு டிக்சனரி

     சர்வதேச அளவில் மூன்றாம் பாலினத்திற்கான அங்கீகாரங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆண் மற்றும் பெண் பாலினத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க திரு, திருமதி (Mr,Miss,Mrs) போன்ற வார்த்தைகளை சிறப்பு முன்னொட்டாக பயன்படுத்தி வருவதைப் போன்று திருநங்கைகளைக் குறிக்க Mx என்ற சிறப்பு பெயரை பயன்படுத்த புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்சனரி திட்டமிட்டுள்ளது.  

SSA திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தல்

            அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 06.05.2015 (புதன்கிழமை) அன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

     பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (7-ம் தேதி) வெளியாகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் பெரும்பாலான  மாணவ,மாணவிகள் பொறியியல் படிப்பில் சேரவே ஆசைப்படுகின்றனர். 

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்

Ariyalur
University College
of Engineering,
Ariyalur – 621 704.

Centre for Entrance
Examinations & Admissions,
Anna University, Chennai – 600 025.


உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி! இரா.சரவணன் - அடடா வெயில்டா... அனல் வெயில்டா!

     வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?


சமச்சீர் கல்வி இல்லாமல் போய்விடும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க தடையற்ற சான்றிதழ் வழங்கக்கூடாது

       தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தடையற்ற சான்றிதழ் வழங்கக்கூடாது என்று தமிழக அரசிடம் மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை கைவிடுகிறது மத்திய அரசு:

        அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பள்ளிகள் உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
 

ஆறு நாட்களாக முடங்கியதுவேலைவாய்ப்பக 'வெப்சைட்'

         வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்' 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
 

ஆய்வக உதவியாளர் பணி 5 லட்சம் பேர் விண்ணப்பம்

            அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நேற்று மாலை வரை, 5.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணிக்கான, 4,362 பணியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

மாணவர்கள் சேர்க்கை கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு

           தமிழக அரசு, அரசு உதவி, சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, 35 புதிய விதி முறைகளை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 

பி.எல்., படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றம்8ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்

              அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மே, 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., பட்டப் படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றப்படுகிறது.
 

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம்வினியோகம் நாளை துவக்கம்

            தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல், 60 மையங்களில் வினியோகம் செய்யப்படுகிறது. அண்ணா பல்கலையில், 20 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது. தமிழகம் முழுவதும், மொத்தம், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.  

நெருங்குகிறது தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் - மனநல நிபுணர்கள் சொல்வது என்ன?

                                

         கோடைகாலம் துவங்கினாலே, விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில், தேர்வு முடிவுகளை நினைத்து, பதட்டத்தில் பரிதவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர். இச்சமயத்தில், பெற்றோர் உஷாராக செயல்பட வேண்டியது அவசியம் என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

முடிவு அறிவிக்கப்பட்ட பின் எஸ்.எஸ்.எல்.ஸி. சிறப்பு வகுப்புகள்

       முடிவு அறிவிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடக்க உள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை மாணவர்களுக்கு தபாலில் அனுப்ப ஆலோசனை

          பத்தாவது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை, மாணவ, மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

விளையாட்டு விஷயத்திலும் கவனம் செலுத்துமா பள்ளி கல்வித்துறை?

        கல்வி அறிவுபெற்ற சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளி வகுப்பறைகள் உள்ளது போன்று, அந்த மாணவர்களை உடல் ரீதியாகவும்; உற்சாகமாகவும் இருக்க வைப்பது பள்ளிகளில் உள்ள மைதானங்கள்தான்.

உங்கள் வீட்டின் மதிப்பு என்ன?- உதவுகிறது பத்திரப்பதிவுத் துறை இணையதளம்

புதிய வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ வாங்கப் போகிறீர்களா? ஒரு பகுதியில் வீடுகள் என்ன விலையில் விற்கப்படுகின்றன என்பதில் குழப்பமாக உள்ளதா? கவலையை விடுங்கள். இதற்கும் அரசின் பத்திரப்பதிவுத் துறை இணையதளம் உதவுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive