Revision Exam 2025
Latest Updates
சென்னையில் பள்ளிச் சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி: தமிழக அரசு நிதியுதவி...
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் இன்று அமைச்சர்கள் முன்னிலையில் உடன்பாடு
தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
2010 மே சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர்கள் டி.இ.டி தேவையில்லை வழக்கு நாளை இறுதி விசாரணை
Mr.Abi murugadass
ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்( D.T.Ed) : மே 18-இல் தொடக்கம்
அரசு உதவி பெறும் 50,000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை!
சத்துணவு சமையல் வேலை பார்க்க சொல்வதா: ஆசிரியர்கள் கொந்தளிப்பு?
பாடசாலை வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தம்புது பொலிவே! புத்தாண்டுப்பூவே!
சித்திரைக் கனவே! வரதேவதையே!
வருடம் தவறாமல் புதுவாசம்கொண்டு வாராயோ!
வல்லமை பலதந்து வலிமை தரவந்தாயோ!.
உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் 21.04.2015 அன்று இறுதி விசாரணையில் இடம்பெற்றுள்ளது
Case Status Status : PENDING
Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014
V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.
TNTET:10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் முன் நீதிமன்றம் தலையிட வலியுறுத்தல்.
லாவண்யா உள்ளிட்ட சிலர் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், தகுதியானவர்கள், தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான வழக்கு: 21-ல் விசாரணை - Dinamani
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு
சத்துணவு ஊழியர்கள் - அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு -தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன்
TET CURT NEWS : TET வழக்குகள் ஏப்ரல்21 இறுதி விசாரணை,அரசு பதில் மனு தாக்கல்.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அரசு செவிசாய்க்குமா?
ஆசிரியர் மாறுதல் தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் எதிர்பபார்க்கின்றனர். சென்ற வருடம் போன்று தாமதமாக மாறுதல் கலந்தாய்வினை நடத்தி ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளானது போன்று இம்முறை நிகழாது என்று எதிர்பார்க்கின்றோம்.முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வர். அரசு செவிசாய்க்குமா?
By.
Mr.Sivakumar
SG Teacher, Mangalore Union
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு
தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது
தொலைதூர கல்வி தேர்வுபல்கலை அறிவிப்பு மதுரை காமராஜ் பல்கலை
மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை
கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் கூட்டுறவு ஊழியர்கள் பணியில் சேருவதில் சிக்கல் ஓராண்டில் பட்டயப் படிப்பை முடிக்க புது நிபந்தனை
பீகாரில் சம்பள உயர்வு கேட்டு 73,000 பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டம்
இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார்.
இவர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது.அந்த மாநிலத்தில் உள்ள 80 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம்சராசரியாக ரூ.40 ஆயிரம். ஆனால், தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.தற்போது பீகார் மாநில தொடக்கப் பள்ளிகளில் 63 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.இதுகுறித்து மாநில கல்வி மந்திரி பி.கே.சகி கூறும்போது, ‘‘ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசுடன் பேசப்போகும் 15 உறுப்பினர்களின் பட்டியலை முதலில் அவர்கள் தரட்டும். அதன் பிறகு பேசி முடிவு செய்யலாம்’’ என்றார். ஆனால் ஆசிரியர் சங்க தலைவர் புரன்குமார், ‘ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இப்போது பின் வாங்குகிறது’ என்றார்.
இந்த நிலையில் நியமன ஆசிரியர்கள் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் 73 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது.
TETஎழுத தேவையில்லை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.
மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.NCTE விதி படி,
23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட 94 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தகுதித் தேர்வு இன்றி எதிர்காலத்தில் ஏற்படும் காலிபணியிடங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது .இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதிமன்றம் NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்து 5 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தீர்ப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .எனவே இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.
Thanks To,
Mr.Abi Mudugadoss