புத்தம்புது பொலிவே! புத்தாண்டுப்பூவே!
சித்திரைக் கனவே! வரதேவதையே!
வருடம் தவறாமல் புதுவாசம்கொண்டு வாராயோ!
வல்லமை பலதந்து வலிமை தரவந்தாயோ!.
ஆசிரியர் மாறுதல் தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் எதிர்பபார்க்கின்றனர். சென்ற வருடம் போன்று தாமதமாக மாறுதல் கலந்தாய்வினை நடத்தி ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளானது போன்று இம்முறை நிகழாது என்று எதிர்பார்க்கின்றோம்.முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வர். அரசு செவிசாய்க்குமா?
By.
Mr.Sivakumar
SG Teacher, Mangalore Union
இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார்.
இவர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது.அந்த மாநிலத்தில் உள்ள 80 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம்சராசரியாக ரூ.40 ஆயிரம். ஆனால், தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.தற்போது பீகார் மாநில தொடக்கப் பள்ளிகளில் 63 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.இதுகுறித்து மாநில கல்வி மந்திரி பி.கே.சகி கூறும்போது, ‘‘ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசுடன் பேசப்போகும் 15 உறுப்பினர்களின் பட்டியலை முதலில் அவர்கள் தரட்டும். அதன் பிறகு பேசி முடிவு செய்யலாம்’’ என்றார். ஆனால் ஆசிரியர் சங்க தலைவர் புரன்குமார், ‘ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இப்போது பின் வாங்குகிறது’ என்றார்.
இந்த நிலையில் நியமன ஆசிரியர்கள் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் 73 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது.
மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.NCTE விதி படி,
23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட 94 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தகுதித் தேர்வு இன்றி எதிர்காலத்தில் ஏற்படும் காலிபணியிடங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது .இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதிமன்றம் NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்து 5 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தீர்ப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .எனவே இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.
Thanks To,
Mr.Abi Mudugadoss
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில்
GO 25 & GO 71 க்கு பதிலளிக்க அரசு மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு அளித்துள்ளததாக தகவல்.
அரசு லாவண்யா தொடுத்த GO 29க்கு மட்டுமே Counter கொடுத்துள்ளது.
மற்ற GO 71 GO 25 க்கு மட்டுமே Time one week கேட்டுள்ளது.