Half Yearly Exam 2024
Latest Updates
தமிழ்நாட்டில் புதிதாக 30 பி.எட்., கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம்
தமிழ்நாட்டில்
இந்த கல்வியாண்டில் புதிதாக 30 பி.எட். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
தொடங்க அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். பி.ஏ.,
பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் உடனே பி.எட் ஆசிரியர்கள்
பயிற்சியை தேர்வு செய்வார்கள். இந்த பயிற்சியை முடிந்தால்தான் நடுநிலை
மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்ற முடியும்.
மூன்றாவது ஊக்க ஊதியம் பெறாத முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.எட்.,எம்.பில்.,பி.ஜிடிடிஈ இவற்றுள் இரண்டிற்கு ஊக்க ஊதிய உயர்வு கோருதல் நாள் 20.12.1993க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றிருப்பின் மூன்றாவது ஊக்க ஊதியம் பெறாதவர்களின் எண்ணிக்கை முதுகலை ஆசிரியர்களின் விவரம் கோருதல்
வேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண்
பிளஸ்
2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை
பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று
வருகிறது.
சான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை: இதனால் வேலை தேடுவோர், வேலை தருவோர் பயனடைவர்
இணையவழி
சான்றிதழ் சேமிப்பு மையத்தை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் துவக்கி
உள்ளது; இதனால், அமைச்சகத்தால் நடத்தப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களில்
படித்த மாணவர்களின் சான்றிதழ் விவரங்களை எல்லாம், அவர்களுக்கு வேலை தரும்
நிறுவனங்கள், எளிதாக பார்த்துக் கொள்ளலாம்; அத்துடன், போலி சான்றிதழ்
பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.
அரசு பொதுத் தேர்வுப் பணிகள்: அமைச்சு பணியாளர் போர்க்கொடி: கல்வி அதிகாரிகளை சுற்றுது சர்ச்சை
அரசு பொதுத் தேர்வு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக கல்விதுறை அமைச்சு பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்க கோரி கணிணி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு பி.எட். கணிணி அறிவியல் வேலையில்லா பட்டதாரி சங்கத்தினர் இன்று திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிகளில் 6 முதல் 10–ம் வகுப்பு வரை கணிணி அறிவியலை கட்டாய படமாக்கி அதற்கு கணிணியில் பி.எட். படித்தவர்களை ஆசிரியராக நியமிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணிணி ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தனியார் பாலிடெக்னிக்குகளுக்கு ஒரு பருவத்துக்கு ரூ. 15 ஆயிரம்: கட்டண நிர்ணயக் குழு அறிவிப்பு
சுயநிதி
தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) ஆண்டுக் கட்டணத்தை
நிர்ணயித்து, அதற்கான குழு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கல்விக் கட்டணம்
நிகழ் கல்வியாண்டு (2015-16), அடுத்த கல்வியாண்டுகளுக்கு (2016-17)
பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை ஆசிரியர் தேர்வு
கற்பித்தலில் புதுமையை புகுத்திய தேவகோட்டை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தேர்வு பெற்றுள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனம், கற்பித்தலில் புதுமையை கையாண்ட ஆசிரியர்கள் 75 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கமும் ஒருவர்.
அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் விரைவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை
தமிழகத்தில் ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பிளஸ்–2 தேர்வில் கட்ஆப் குறையும் எதிர்பார்ப்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வலைவிரிக்கும் தனியார் கல்லூரிகள்
நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாட வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறினர். இதனால் இந்த பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும் என அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.மருத்துவம், பொறியியல் கனவுடன் பிளஸ்–2 தேர்வில் கஷ்டப்பட்டு பல லட்சம் மாணவ, மாணவியர் பாடங்களை படித்தனர்.
கணினி ஆசிரியர 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை
'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. பிளஸ் 2 பொருளாதார பாட விடைத்தாள் திருத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 2 தாள்களையும் சேர்த்து 37,472 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 2 தாள்களிலும் 80,187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜாக்டா'-ஆசிரியர் போராட்டத்தில் அரசியல் தலையீடு: அரசு அதிர்ச்சி; பெற்றோர் கவலை
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் ஆசிரியர்கள் போராட்டம் அரசியலாகியுள்ளது. வரும், 12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உட்பட, சில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்
பங்கேற்க உள்ளனர்.
Special Article : அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு முன்பாவது ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு விடியல் பிறக்குமா?
சமூகத்தில் பின்தங்கியவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்டதே நலத்துறைப்பள்ளிகள் ஆகும்..அதிலும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் கடந்த 7 வருடங்களாக காலிப்பணியிடம் நிரப்பப்படாமல இருப்பதால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நிலை மிக மோசமானதாகவே உள்ளன என்பதை இரு தினங்களுக்கு முன்னதாக தினசரி நாளிதழ்களில் படித்தோம்..