Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியை மீது ஆசிட் வீசிய பள்ளி முதல்வர்... சென்னையில் கொடூரம்


          சென்னை வளசரவாக்கத்தில் ஆசிரியை மீது அவர் பணிபுரியும் பள்ளியின் முதல்வரே ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பிற்கு ஆளான ஆசிரியையின் பெயர் மஞ்சு சிங் என்பதாகும். இவர் வளசரவாக்கத்தில் உள்ள சியோன் கிட்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

குரூப்1, 2 பிரிவில் காலியாக உள்ள 1060 பணியிடத்துக்கு இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு

குரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ரெயில்வேயில் வேலை; மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம்; மத்திய அரசு எச்சரிக்கை

         ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக இந்திய ரெயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. இதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

1,000 குரூப் - 2 பணியிடங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்வு


           தமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் - 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

அரசு பள்ளிகளில் விடுமுறைக்கு முன்னரே மதிய உணவு கட்.....


         பள்ளி வேலை நாட்கள் முடிந்ததால், தமிழகத்தில் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில், மதிய உணவு நிறுத்தப்பட்டு உள்ளது; மாணவ, மாணவியர் பட்டினியுடன் பரீட்சை எழுதும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஒரு ஜிபி 3ஜி சேவை ரூ.68 க்கு கிடைக்கும்: பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

ரூ.68 செலுத்தி ஒரு ஜிபி 3ஜி இணையதள பெறலாம் என்று பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல்லின் சென்னை தொலைத்தொடர்பு வட்டம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 3ஜி டேட்டா எஸ்டிவி எனப்படும் சிறப்புவிலை கட்டண சேவையை பிரபலப்படுத்த குறைந்த விலையில் 3 ஜி சேவைகளை வழங்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு ஜிபி 3ஜி சேவையை ரூ 68 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதன் செல்லுபடி காலம் 10 நாட்கள் ஆகும்.டேட்டா எஸ்டிவி புதிய சலுகையை ஏற்கனவே இருக்கக்கூடிய 1 ஜிபி சிறப்பு கட்டண சேவையிலும் பயன்படுத்தலாம். இதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. இந்த ஆரம்ப கால சலுகை ஏப்ரல் 1 முதல் 60 நாட்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குனர் என்.கே.குப்தா கூறும்போது, “புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டேட்டா எஸ்டிவி சலுகை கைபேசி மூலம் இணையத்தை பயன்படுத்துவதை குறைந்த விலையில் சாத்தியமாக்கும். ரோமிங் கட்டணமில்லாமல் இணையச்சேவை வழங்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான 3ஜி கட்டமைப்பு பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளது” என்றார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர்கள் 503 பேர் பணி நியமனம் : முன்னுரிமைஅடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில்503 கணினிபயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, 133 பேருக்கான பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கணினி பயிற்றுநர்கள் 652 பேர்பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதற்கான இணையதள கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற கலந்தாய்வில் கணினி பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.இதில் ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்க வேண்டும் என 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளனர். இதன் காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 643 பேரில் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேருக்கு பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உறுதிசெய்யப்பட்ட தேர்வுப் பட்டியல் பெறப்பட்ட பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்படும்.முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 491 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் கிடைத்துள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாசிரியர் கோரிக்கை-போட்டி தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பு

குழப்பமான பாடத்திட்டம் கொண்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், கலை, ஓவியம், தையல் மற்றும் இசைப் பிரிவு ஆசிரியர்கள், கவலை அடைந்துள்ளனர்.
பணி நிரந்தரம் தமிழக பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சிறப்பாசிரியர்களான ஓவியம், கலை, தையல் மற்றும் இசைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு, 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு போட்டித் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்தயாரித்து, அரசின் ஒப்புதலுடன், கடந்த ஜனவரியில் வெளியிட்டது.பாடத்திட்டம் மிகவும் குழப்பமாக உள்ளதாகவும், அதிக கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கு கூட, கடினமாக உள்ளதாகவும், கலை ஆசிரியர்கள்அரசுக்கு மனு அனுப்பினர். மேலும், பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத் தலைவர்ராஜ்குமார், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பினார்.

ரத்து செய்ய முடியாது இதை விசாரித்த அரசு, போட்டித் தேர்வு அரசின் கொள்கை முடிவு என்பதால், ரத்து செய்ய முடியாது; பாடத்திட்டமும் மாற்றிஅமைக்கப்படாது என, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இத்தகவலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனால், இத்தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று சிறப்பாசிரியர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.

அரசு பணி வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் : கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்சங்க மாநில செயலாளர் குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகம் படுத்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6 , 8 மற்றும் 10 வகுப்புகளுக்கு கணிப்பொறி இயல் என்ற பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக மூன்று ஆண்டுகளாக கணிப்பொறி இயல் பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அரசு நிறுத்தி விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டகணினியில் பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்கி, கணினியில் பி.எட் முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியிடங்களில், கணினியில் பி.எட் முடித்தவர்களை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முதற்கட்டமாக நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலந்தாய்வு : கணினி பயிற்றுனர்கள் 490 பேர் பணி நியமனம்

கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்து பெறப்பட்ட தேர்வாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் நேற்று நடந்தது.இதில் 643 கணினி பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்கள் பட்டியலில், முன்னுரிமை வாய்ந்தோர் பட்டியலில் தங்களின் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை ஆணை பெற்றுள்ளனர். இதன் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்து பெறப்பட்ட 643கணினி பயிற்றுநர்களில், முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 133 பணிநாடுநர்களுக்கு பணி நியமனத்திற்கான ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிநாடுநர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பில் பெறப்படும் உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உறுதி செய்யப்பட்ட தேர்வுப் பட்டியல் பெறப்பட்ட பின்னரே பணிநியமன ஆணை வழங்கப்படும். மேலும், முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 133 பணிநாடுநர்களை தவிர மற்ற பணிநாடுநர்களுக்கு கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்கான பணிநியமன ஆணை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் நேற்று வழங்கப்பட்டது. 

இதில் 490 கணினி பயிற்றுநர்கள் அவரவர்களின் சொந்த மாவட்டத்திலேயே பணிநியமன ஆணை பெற்றுள்ளனர்.

கணினி ஆசிரியர் நியமனத்தில்குழப்பம்: இன்று கவுன்சிலிங்நடத்துவதில் சிக்கல்?

     கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவை மற்றும் கலப்பு திருமணம் செய்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இறுதித் தேர்வை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்று, கணினி ஆசிரியர் கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.


பிளஸ் 2 உயிரியல் தேர்வு:கருணை மதிப்பெண் இல்லை

          பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

பீகார் : ஆசிரியர் தகுதிதேர்வு 3 ஆயிரம் பேர் தோல்வ

பாட்னா: பீகார் மாநிலத்தில் துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் 3
ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் கணினி ஆசிரியர் நியமிக்க தடை: ஐகோர்ட் உத்தரவு

            அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
 

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனத்திற்கான கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை நடக்கிறது

      பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு பணிக்கு அறிவிப்பு வெளியிடும்போது குழப்பம் ஏற்படுவதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தவிர்க்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

           சென்னை ஐகோர்ட்டில், என்.சாந்தி, எம்.எஸ்.கே.மணிபாரதி ஆகியோர்  தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், ‘மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 
 

கற்பித்தலில் புதுமையை புகுத்திய அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியைக்கு சிறப்புமிக்க பெல்டியர் விருது


கற்பித்தலில் புதுமையை புகுத்திய அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியைக்கு சிறப்புமிக்க பெல்டியர் விருது

      வர்த்தகத்தில் உள்ள கலாச்சார தாக்கத்தை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ‘பஃபா பஃபா’ என்ற விளையாட்டை உருவாக்கிய அமெரிக்க வாழ் இந்தியரான உதவி பேராசிரியைக்கு புதுமையான கற்பித்தல் முறைகளுக்கான மதிப்புமிக்க பெல்டியர் விருது கிடைத்துள்ளது.

வானத்தில் பறக்கும்போதே விமானங்கள் எரிபொருள் நிரப்பலாம்: விஞ்ஞானிகள் சாதனை

undefined
     கண்டம் விட்டு கண்டம் செல்லும் பயணிகள் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவே, குறிப்பிட்ட விமான நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்ப சில மணி நேரங்கள் கால விரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.
இதனை தடுக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு ஒன்று குருய்சர் எனேபிள்ட் விமான போக்குவரத்து அமைப்பை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம், ஒரு விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அது குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

       டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் முறையில் விண்ணப்பப்பதிவு சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இம்மையத்தில் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள டி.இ.டி வழக்குகள் விரைவாக முடிப்பதில் இழுபறி....

           தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் கடந்த விவாதத்தின் போது இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கொண்டமையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதிலும் வாதம் நடைபெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவதில் சிக்கல் நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரம் இடங்கள் காலி அமைச்சர் பழனியப்பன் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரத்து 415 இடங்கள் காலியாக உள்ளன என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.பழனியப்பன் தெரிவித்தார். 

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியீடு

          தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியீடு

புதிதாக 7461 நர்ஸ்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

       தமிழக சட்டப்பேரவையில் நேற்று மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கொண்டுவந்தன. இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக பதிலளித்து பேசியதாவது:
 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக தயாராவது எப்படி: வழிகாட்டுகிறார் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு

        "உயர் கல்வி படிப்பில் சேரும்போதே மாணவர்கள் தனக்கென இலக்கை ஏற்படுத்திக்கொண்டு படித்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது அவர்களுக்கு தொட்டு விடும் தூரமாக இருக்கும்," என தமிழக கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.

கப்பல் துறையில் காத்திருக்கு ஏராளமான பணியிடங்கள்: கேப்டன் பால் பென்னட் சிங் தகவல்

      "கடல்சார் மற்றும் நாட்டிகல் சயின்ஸ் படித்தால் கப்பல் துறையில் ஏராளமான பணியிடங்கள் காத்திருக்கின்றன" என மாஸ்டர் மரைனர் கேப்டன் பால் பென்னட் சிங் தெரிவித்தார்.

எந்த படிப்பு சம்பளத்தை அள்ளிக் கொட்டும்: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

       "உயர் கல்வியில் எந்த படிப்பை தேர்வு செய்தால் அதிக சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்" என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனைகள் வழங்கினார்.

நேரடி மானியத் திட்டத்தில் இணைய ஜூன் 30 வரை கூடுதல் அவகாசம்

    சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப். 6 முதல் புத்தகங்கள்

       அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி

          தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், ஒசூரில் "கட்செவி அஞ்சல்' ("வாட்ஸ் அப்') மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு

             பிளஸ் 2-க்கு 23ம் தேதி வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அதில் ஏ வகைகேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 10, 22வது கேள்விகள் பிழையாககேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive