Half Yearly Exam 2024
Latest Updates
இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
'பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 இயற்பியல் தேர்விலும் குழப்பம்
நேற்று
நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், சில கேள்விகள்
பிழையாகவும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி' டைப்
வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 14 வது கேள்வியில், '400 ஆம்ஸ்ட்ராங்
அலைநீளமுள்ள ஒரு ஒளியானது 2 மைக்ரோ மீட்டர் தொலைவு கடந்த பிறகு உருவாக்கம்
கட்ட வேறுபாடு' என கேட்கப்பட்டது.
பொதுத்தேர்வில் பழைய வினாத்தாள்: வரிசை மாறாமல் 'அப்படியே' கேள்விகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 திருப்புதல் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள், 'அப்படியே' பொதுத்தேர்விற்கும் வழங்கப்பட்டது.
10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு
தூத்துக்குடி
அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால்,
தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன்
கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதே போல 14 மாணவர்கள்
பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு
அகஇ - மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு - வழிமுறைகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்
பொருளியல் வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்
பிளஸ்
2 பொருளியல் வினாத்தாளில் 'புளு பிரின்ட்' படி கேள்வி கேட்காததால்
மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது
கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53
வது கேள்வி 'பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக' என
கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக
உள்ளது.
பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி: பீகாரில் தொடக்கம்
பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் கடைசி நாளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணப்பயன் உறுதி
பகுதிநேர
பயிற்றுநர்களின் 2015 மார்ச் மாத ஊதியமும், ஏப்ரல் 2014 லிருந்து அக்டோபர்
2014 வரையிலான காலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத்
தொகையும் 31.3.2015 க்குள் வழங்கி, உரிய பதிவேடுகளில் பதியப்பட வேண்டும்
என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்கள் ஆணை
பிறப்பித்துள்ளனர்.
பல்கலை மாணவர்களுக்கு பாடம் எடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்!
கழிவுப்
பொருட்களை கலை நயமிக்க பொருட்களாக மாற்றுவது எப்படி என, பொறியியல் மற்றும்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தி
அசத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் அட்டை பெறும் வசதி: தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்
மயிலாப்பூர்
தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இன்று புதிய வாக்காளர் அட்டை
மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
சந்தீப் சக்சேனா இன்று தொடங்கி வைத்தார்.
செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல் 1 முதல் அமல்
நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச்
சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான
அரசின் உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கத்தி, செல்லிடப்பேசியுடன் தேர்வெழுதிய மாணவர்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு
மேல்நிலைப் பள்ளியில் தேர்வறையில் பறிமுதல் செய்த கத்தி, செல்லிடப்பேசியை
திருப்பித் தருமாறு கேட்டு, ஆசிரியையை மிரட்டிய பிளஸ் 1 மாணவர்கள் இருவர்
வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 வினாத் தாள்: கைதான ஆசிரியர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: எஸ்.பி.
கட்செவி அஞ்சலில் பிளஸ் 2 கணித வினாத் தாளை
அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை போலீஸார்
காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தெரிவித்தார்.
கௌரவ விரிவுரையாளர்கள் ஊதியம்: இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை:
தமிழகத்தில் புதிதாகத்
தொடங்கப்பட்ட 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ
விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்
தெரிவித்தனர். பெரும்பாலும் வருகிற ஏப்ரலில் அவர்களுக்கான ஊதியம் முழுவதும் வழங்கப்பட்டு விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு
சென்னை
மாநகராட்சிக்கு சொத்து வரிதான் மிக முக்கிய வருவாயாகும். நடப்பு
நிதியாண்டில் ரூ.600 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்
நேற்று வரை ரூ.525 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?
நம் மாணவர்கள்
மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல்
ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட, 60% முதல் 80% வரை
மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக
இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை.
Direct Recruitment of Lecturer (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) for Government Law Colleges 2013 - 14 - Provisional Selection List Released
DIRECT RECRUITMENT OF LECTURERS (SENIOR SCALE) / LECTURERS SENIOR SCALE (PRE-LAW) FOR GOVERNMENT LAW COLLEGES - 2013 - 2014
PROVISIONAL SELECTION LIST
| |
Dated: 27-03-2015 |
Member Secretary
|
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!
தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான்
கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15
லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும்
அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான
மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம்
தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள,
அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான
காலக்கெடு, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமைச்
செயலர் ஞானதேசிகன், அனைத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்ரல், முதல் தேதி முதல் அமலுக்கு
வந்து உள்ளது.