Revision Exam 2025
Latest Updates
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!
தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான்
கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15
லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும்
அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான
மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம்
தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து உள்ள,
அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான
காலக்கெடு, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமைச்
செயலர் ஞானதேசிகன், அனைத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்ரல், முதல் தேதி முதல் அமலுக்கு
வந்து உள்ளது.
7th Pay Commission - செலவு விவரங்கள் கணிப்பு.
அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிப்பு.
'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல்
விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில்
ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்':கல்வித்துறை மீது சந்தேகம்
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு
நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின்
மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித்
தேர்வு நடத்தியது.
விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை
பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள்
திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல்
மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. பிளஸ் 2
பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து
வருகின்றன. முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில்
துவங்கியது.
"தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும்
பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்
என்கிற வாசகர் அரங்கம்
சரியானதே
தொப்பை குறைய - (to burn belly fat) என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்க...
பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும்
முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக
கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம்
அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும்
என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று
சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.
PGTRB கலந்தாய்வு தள்ளி போகுமா?
வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போட்டித் தேர்வு அறிவிப்பு: ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்.
தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,)
அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்
அரசு பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன்
பென்ஷன் திட்டத்திலும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் : இளங்கோவன் புகார்
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.
TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல்,
வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண்
29245/2014.
அரபு எண்ணை தமிழ் எண்ணாக்கும் வினா: 10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்
பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள்
தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா
போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.