Half Yearly Exam 2024
Latest Updates
'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்
மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல்
விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில்
ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர்.
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்':கல்வித்துறை மீது சந்தேகம்
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு
நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின்
மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித்
தேர்வு நடத்தியது.
விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை
பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள்
திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல்
மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. பிளஸ் 2
பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து
வருகின்றன. முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில்
துவங்கியது.
"தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும்
பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்
என்கிற வாசகர் அரங்கம்
சரியானதே
தொப்பை குறைய - (to burn belly fat) என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்க...
பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும்
முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக
கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம்
அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும்
என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று
சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.
PGTRB கலந்தாய்வு தள்ளி போகுமா?
வரும் 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போட்டித் தேர்வு அறிவிப்பு: ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்.
தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,)
அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: தினகரன்
அரசு பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன்
பென்ஷன் திட்டத்திலும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் : இளங்கோவன் புகார்
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.
TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் கோர்ட் எண் 12 ல்,
வரிசை எண் 170 ஆவதாக விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது..வழக்கு எண்
29245/2014.
அரபு எண்ணை தமிழ் எண்ணாக்கும் வினா: 10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்
பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள்
தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா
போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.
PGTRB கலந்தாய்வில் - தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற 28-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
கல்வித் துறை நடவடிக்கை: சீர்காழி அருகே 6 மாணவர்களும் தமிழ் 2-ஆம் தாள் தேர்வு எழுதினர்
நாகை
மாவட்டம், சீர்காழி அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத
அனுமதி மறுக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகள் கல்வித் துறையின் நடவடிக்கையால்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வை எழுதினர்.
பிளஸ் 2 வினாத்தாள் 'வாட்ஸ்அப்'பில் அனுப்பிய விவகாரம்: சி.இ.ஓ., அலுவலகத்தில் போலீசார் விசாரணை
பிளஸ் 2 வினாத்தாள், வாட்ஸ்அப் மூலம்
வெளியானது தொடர்பாக, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகத்தில், மாவட்ட
குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயலாளர் மா.விஜயகுமார்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–
அரியானா மாநில பள்ளி மாணவர்களுக்கு 'எலக்ட்ரானிக்' அடையாள அட்டை
அரியானா மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் அடையாள அட்டை வழங்கும் திட்டம், அடுத்த மாதம் துவங்குகிறது.
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் . தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கப்படுமா?
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான, எழுத்து பிழையான கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி டைப்' வினாத்தாளில் ஒரு
மதிப்பெண்ணில் 2 வது கேள்வியில் 'லெட்டின்' அணு எடை தவறாக உள்ளது. 19 வது
கேள்வியில் ஓர் அமைப்பு, சுற்றுப்புறத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் மதிப்பு
கொடுக்கப்பட்டு, அண்டத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் கேட்கப்பட்டது. அதற்கான
விடை தவறாக உள்ளது.
6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும் மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு?
பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காதது தொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 ஆசிரியர்களுக்கு, 'மெமோ'
கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா? -DINAKARAN
அரைக்காசு உத்தியோகம் என்றாலும்
அது அரசாங்க
உத்தியோகம் என்றால் தான் சமூகத்தில் மதிப்பும்,
மரியாதையும் இருக்கும். ஆனால் அரசின் புதிய கொள்கைகளால்
ஆசிரியர்கள் அந்த மதிப்பை இழந்துள்ளனர்.
'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார்
கோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்.,
நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல
குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜியை, 'டம்மி'
பதவிக்கு தூக்கி அடித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு
உள்ளார்.