Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வை CBSE பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும்

         புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம்

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?

       அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.

விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால் சிக்கல்

          காரைக்குடி: பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பார்கோடு முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை

           பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

TATA சங்க ஊதிய வழக்கு தற்கால நிலை

          8.3.2015 அன்று ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் " ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .


தேர்வு பணியில் இருந்து விடுவித்து கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி

       வாட்ஸ் அப் விவகாரத்தினால் கல்வித்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளன. தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை இடம் மாற்றம் செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை

* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை: 
 அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப் பள்ளிகள் 3044, மேனிலைப் பள்ளிகள் 2727.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? - அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

         தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

பள்ளிகளில் அம்மை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

       திருப்பூரில், அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால், இதுகுறித்த விழிப்பணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற சட்டப்பிரிவு 66ஏ செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


       சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களே இல்லாத 124 பள்ளிகள்

           ஜம்மு-காஷ்மீரில் உள்ள 124 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்தார்.

கொடுக்கறதே கட்டை சம்பளம்...! இதுல 'டோர் கேன்வாசிங்' வேலையுமா?

           மாநிலம் முழுவதும், பல தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டில், மாணவர்களை, 'வளைக்கும்' பணியில், ஆசிரியைகளை ஈடுபடுத்தி உள்ளது. பள்ளியை சுற்றி உள்ள நகர, கிராமங்களில், வீடு, வீடாக சென்று, 'நோட்டீஸ்' வழங்கி, பள்ளியின் அருமை, பெருமைகளை எடுத்துக்கூறி, மாணவர்களை இழுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளன. இதற்கு, ஆசிரியைகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

தனியார்பள்ளிகளின் கூத்து!!!

          எங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.
 

பள்ளி நிர்வாகிகளை தப்பவைக்க முயற்சியா?

           பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகிகளை தப்பி  வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
 

கிருஷ்ணகிரி பள்ளியில் ஜெராக்ஸ் எடுத்து மோசடி

               ஓசூரை போலவே, கிருஷ்ணகிரியிலும் பிளஸ்2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி  தொடங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. 
 

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு

*கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா? 
*பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா?
*எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?
 
           ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரம் முக்கியம். ஒரு சமுதாயம் அறிவுசார்ந்த, இளமையான, சுறுசுறுப்பான சமுதாயமாக  இருப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது.
 

பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

       பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களைத் தவிர, பறக்கும்படை உள்ளிட்ட பிற அலுவலர்களால் பிடிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்படட தேர்வறை கண்காணிப்பாளரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

1. பேக்கிங்/சமையல் சோடா:

            சமையல் சோடாவானது, மஞ்சள் நிற‌ பற்களை நீக்கி வெண்மையான பற்களை பெற உதவும் எளிய மற்றும் விரைவான வழியாகும். இது பற்களில் உள்ள தகடை ஒழித்து உங்கள் அழகான பற்களை பளபளப்பாக மாற்றுவதோடு வெண்மையான‌ ஒளியையும் தருகிறது. நீங்கள் இதை எல்லாம் பெறுவதற்கு பற்பசை சிறிதளவு, பேக்கிங் சோடா சில தேக்கரண்டி இவற்றை நன்கு கலந்து கொள்ளவும். 
 

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

           தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. 

பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'

              பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்

            முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.

ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?

               அடுத்தடுத்து, அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவைகள் இருக்காது என, தெரிகிறது. 
 

பேருந்தில் அடிபட்டு உயிருக்கு போராடியவர்... முதலுதவி செய்து நெகிழவைத்த மனிதாபிமான அமைச்சர்!

      விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்தார்.

பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை

        பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வேதனை தந்த வேதியியல் தேர்வு; பிளஸ் 2 மாணவர்கள் புலம்பல்

               பிளஸ் 2 வேதியியல் தேர்வில் எதிர்பாராத வினாக்கள், திரித்து கேட்கப்பட்ட கேள்விகளால், மாணவர்கள் திக்குமுக்காடினர்; அதேநேரத்தில், கணக்கு பதிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக, மாணவர்கள் கூறினர்.

இடியாப்ப' கேள்விகளால் மாணவர்கள் திணறல்: வேதியியலில் 'சென்டம்' சரியும்?

           பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த வேதியியல் தேர்வில், பல கேள்விகள், சுற்றி வளைத்து கேட்கப்பட்டதால், மாணவ, மாணவியர், திணறினர். இதனால், இந்த பாடத்தில், 'சென்டம்' சரியலாம் என கூறப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

               மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டு பிடிக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.

          பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்

பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :

தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 
சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் 

ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

           அகஇ - 2015/16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - படிவங்கள், தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive