Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நேரடி மானியத் திட்டத்தில் இணைய ஒரு வாரம் மட்டுமே அவகாசம்:

        சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்கள் இன்னும் ஒரு வார கால (மார்ச் 31 வரை) அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன.  

ஏப்ரல் 19-இல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

         மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
 

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு: வெளிப்படைத்தன்மைக்கு ஆவன செய்யப்படுமா?

             மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

மின் சக்தியில் பறக்கும் விமானம்: நாஸா சோதனை:

     மின் சக்தியில் இயங்கும் 18 விசைகளைப் பொருத்திய இறக்கை கொண்ட விமானத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வடிவமைத்துள்ளது.
 
               இந்த இறக்கையின் சோதனையோட்டத்தை இவ்வாண்டு இறுதியில் நடத்த நாஸா திட்டமிட்டுள்ளது.18 விசைகள் (புரொபெல்லர்) பொருத்திய விமான இறக்கையின் மாதிரி வடிவை ஒரு வாகனத்தில் (படம்) பொருத்தி, அதனை மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் நிலத்தில் செலுத்தி சோதனை நடத்தப்படும்.

உண்மையான வரலாறு எங்கே!!!

           ரம்பம் முதல் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று ஒரு பாடம் உண்டு.இதில் இந்திய வரலாறு பற்றி கூறப்பட்டு இருப்பது ஒரே மாதிரியான பல்லவியாக இருக்கும்.ஆதி காலத்தில், எந்தெந்த ஆண்டுகளில் இந்தியா மீது யார், யார் படையெடுத்து வந்தார்கள்? அந்த அன்னிய நாட்டு மன்னர்களின் விவரங்கள், பின்னர் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆண்ட மன்னர்கள் ஒருவருக்கொருவர் எந்த இடத்தில் எதற்காக மோதிக்கொண்டார்கள்? அசோகர் சாலைகளில் மரம் நட்டார் என்பது போன்ற தகவல்கள் ஆண்டு  வாரியாக சிரத்தையுடன் தயாரித்து கொடுக்கப்பட்டு இருக்கும்.
 

காஷ்மீர் மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பட்ஜெட்டில் அறிவிப்பு:

          காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசின் 2015–2016–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் நிதி மந்திரி ஹசீப்தரபு நேற்று தாக்கல் செய்தார். 
 

வெளிநாட்டு வினோதங்கள்-வன்முறை படம் ஒளிபரப்பிய ஆசிரியைக்கு சிக்கல்:

          மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம் தொடர்பான திரைப்படங்கள் சில நேரங்களில் பள்ளிகளில் ஒளிபரப்புவது உண்டு. ஆனால் அமெரிக்க ஆசிரியை ஒருவர் தவறான படத்தை ஒளிபரப்பி சிக்கலில் மாட்டியுள்ளார்.
 

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர்

          பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு ஆணையிட்டு அனுப்பியு ள்ள செயல் முறைகள்

காது கேளாதோருக்கான பட்டப்படிப்பு: 15 இடங்களுக்கு 150 பேர் விண்ணப்பம்

            விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், காது கேளாதோருக்கான சிறப்புப் பட்டப் படிப்பு மேலும் சில கல்லூரிகளில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் எழுந்துள்ளது.

குரூப் -2வில் 1:5 விகிதம்தேர்வானவர்கள் குழப்பம்

            டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
 

கணக்கு பண்ணுங்க..

          கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டியது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.


'ஜாக்டோ, ஜாக்டா' தனித்தனி போராட்டம்: ஆசிரியர்கள் குழப்பமோ குழப்பம்

              ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல், 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், ஜாக்டோவுக்கு போட்டியாக, 'ஜாக்டா' குழு சார்பில், ஏப்ரல், 12ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியை தேவை

காசு இல்லாத மக்களின் கவனதிற்கு; இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை???

                உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் இதற்காக நான் கடந்த 6 வருடமாக அனைத்து விபசார ஊடகங்களையும் அணுகி கேவலப்பட்டு அசிங்கப்பட்டும் ஏழை மக்களின் உயிர் காக்க போராடி கொண்டு உள்ளேன் இந்த பல்லடம் சிவகுருநாதன் 9952432752 தயவு கூர்ந்து அனைவரும் பகிருங்கள் உங்களை நான் பணம் கேட்கவில்லை பகிரத்தான் வேண்டுகிறான். மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு???
 

செல்போனில் தகவல் திருட்டை தவிர்க்க ஆண்டிராய்டில் புதிய பாதுகாப்பு வசதியான ஸ்மார்ட் லாக் அறிமுகம்.

              செல்போனில் தகவல் திருட்டை தவிர்க்க கூகுள் நிறுவனம் ஆண்டிராய்டில், புதிய பாதுகாப்பு வசதியான 'ஸ்மார்ட் லாக்' என்ற அப்-பை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் செல்போனில் இருந்து தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம் என கூறப்படுகிறது. 

தமிழ் ஆண்டுகள்


இந்திய தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்குக்கு ஸ்வீடன் நாட்டு விருது...

            இந்திய கிராமங்களை மேம்படுத்தும் பணியில் புதுமையான நீர் சேகரிப்பு முயற்சிகள் மூலம் ஈடுபட்டதற்காக, பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கிற்கு 2015ஆம் ஆண்டுக்கான 'ஸ்டாக்ஹோம் நீர் விருது' வழங்கப்படுகிறது. இதுகுறித்து, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் நீர் விருதுக் குழு வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற இந்தியாவின் நீர் பாதுகாப்பை வலுவாக்கும் விதமாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ராஜேந்திர சிங் மேற்கொண்டு வரும் கடினமுயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

பல துறை வாய்ப்புகளை கொண்ட ஆங்கில இலக்கியம்

           பல துறைகளில் பணி வாய்ப்புகளை சாத்தியமாக்கும் படிப்புகள், தனக்கான பொழிவை என்றுமே இழப்பதில்லை. அவற்றில் ஒன்றுதான் ஆங்கில இலக்கியம்.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணை வழங்க கலந்தாய்வு : வரும் 28ம் தேதி நடக்கிறது

           ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.  இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?-நன்றி புதிய தலைமுறை

                        திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பே வெளிவராமல் உள்ளது.  

'பியூன்' வேலைக்கு விண்ணப்பித்த எம்.எல்.ஏ., மகன்: தகுதி, திறமை இருந்தால் தான் பணி நியமனமாம்

           ராஜஸ்தானில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் மகன், மாநில அரசு அலுவலகத்தில், 'பியூன்' வேலைக்காக விண்ணப்பித்த செயல், பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது. 

தனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகம் விலை 50 சதவீதம் உயர்வு: பள்ளிகள், பெற்றோர் அதிர்ச்சி

          தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 சதவீத்திற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
 

தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?

1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

            மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  
 

அடி, உதை மாணவர் காப்பி அடித்ததை கண்டித்த ஆசிரியருக்கு.............

          ஜான்சி: பீகாரைத் தொடர்ந்து, உ.பி.,யிலும், 'பிட்' கலாசாரம் களைகட்டியுள்ளது. கல்லூரி தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்த பேராசிரியரை, மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Express Pay Order

       பணியிட தொடர் நீட்டிப்பு ஆணை -2013 -2014 ம் ஆண்டில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 250 BT ,50 ELE HM ,50 HS HM பணியிடங்களுக்கு 31.12.2015 வரை

பிளஸ்-2 பரீட்சை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு?: கல்வி அதிகாரிகள் விசாரணை.

             வாட்ஸ் அப் மூலம் பிளஸ்-2 கணித தேர்வு வினாத்தாளை அனுப்பிய விவகாரத்தில் யார்-யாருக்கு தொடர்பு என்பது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தனியார் பள்ளி கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடி!!

       ஓசூரில், ப்ளஸ் 2 வினாத்தாளை, "வாட்ஸ்- அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

TET வெயிட்டேஜால் பாதிப்பு - பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

           எல்லாத்தகுதி இருந்தும் வெய்ட்டேஜால் ஆசிரியர் பணி இழந்தேன்; பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

டில்லி:விரைவில் இ-ரேஷன் கார்டு

      நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரேஷன்மற்றும் ஆதார் அட்டை திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளன.

குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


             2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.
 

கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

            மார்ச் 21-வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்கால கட்டத்தில் வினாத்தாள் கசிவு பரிமாற்றம், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஏதாவது ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பு விடுகிறது.
 

அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி

           தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்தகல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 5000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive