Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்!

அதிரடி இது ‘ஜாக்டோ’ ஜல்லிக்கட்டு
 
        அறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு!
 

PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.

          ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது.

20 சத ஊதியத்தை மாணவர் நலனுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

             ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன் தனது சம்பளத்தில் 20 சதத்தை மாணவர்களின் நலனுக்கு மாதந்தோறும் வழங்கி வருகிறார்.ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன். இவர் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் ரூ.73 ஆயிரத்தையும், 2014-15-ஆம் கல்வியாண்டில் ரூ.79 ஆயிரத்தையும் தனது சம்பளத்தில் இருந்து வழங்கியுள்ளார்.
 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: 10.72 லட்சம் பேர் பங்கேற்பு

        தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம், 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.

'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்'

              பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

              பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Teachers Wanted For Aided Schools!

தமிழக போலீசில் 1,078 சப்–இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மனு படிப்பு சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க அதிரடி திட்டம்:

          தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

          அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2  புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி நாட்களில் ஆசிரியர்களுக்கு விடுப்பு: அரசாணை வெளியீடு

          தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு

         பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,'ஈசி'யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, கடினமாகவும் இருந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, கணிதத்தில், 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது; மாணவர் சேர்க்கை நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு

         இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது என்றும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மலேசிய பள்ளிகளில் திருக்குறள் பாடத்திட்டமாக சேர்க்க முடிவு

        'மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள், முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனர்,'' என, மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

Next TET soon?

XII COMPUTER SCIENCE - QUESTION 2 SERIES - Q.NO 23. ANSWER DESCRIPANCY

Respected sir,

               We wish to bring to your kind attention that there is a 

descripancy in Answer for the following question . 

Question series - 2

QUESTION NUMBER :  23


பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்

          சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, அந்த மெசேஞ்ஜர் மூலம், பணம் அனுப்பும் வசதியை, பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் மூலம், டெபிட் கார்டு துணையுடன் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்


தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்

         தகவல் தொழில்நுட்பத்தில் நாம் பல படிநிலைகளை கடந்து வந்துள்ளோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், முழங்கை அளவிலான மொபைல் போன்களை அபூர்வ கண்டுபிடிப்பாக எண்ணி சிலாகித்துக் கொண்ட நாம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் ‘பிளிப்’ போன்களை கண்டதும் புளகாங்கிதம் அடைந்தோம்.

பள்ளிக் கல்வி உதவியாளர் பணி: மார்ச் 21-இல் கலந்தாய்வு

     பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 346 உதவியாளர்களுக்கு மார்ச் 21-இல் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

24 மணிநேர கண்காணிப்பு கேமரா வசதிசெய்ய தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு


undefined

       பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் சேகரிப்பு, திருத்தும் மையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி செய்ய வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.
நாளை (மார்ச் 19) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குவதையொட்டி திருச்சி, அரியலுார் உட்பட 23 மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

பன்றிக் காய்ச்சல் பாதித்த மாணவர்கள் தனியறையில் தேர்வெழுத ஏற்பாடு

       சுகாதாரத்துறையினர் அறிவுரையை தொடர்ந்து, பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மாணவர்களை, தனியறையில் தேர்வு எழுத வைப்பதற்கு, கல்வித்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் தவறான வினாத்தாளை வழங்கிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு


பிளஸ்-2 தேர்வில் தவறான வினாத்தாளை வழங்கிய ஆசிரியர்கள்

  உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு
         வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை, 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை 30–ந்தேதி திங்கட்கிழமை செயல்படும். 31–ந்தேதி செவ்வாய்க்கிழமை நடப்பு நிதியாண்டிற்கான இறுதி நாள் என்பதால் விடுமுறை எனவும், ஏப்ரல் 1–ந்தேதி அடுத்த நிதியாண்டிற்கான முதல் நாள் என்பதால் கணக்குகளை தொடங்கும் பணிகளை மேற்கொள்வதால் அன்று விடுமுறை எனவும் தகவல் பரவியது.

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்.

          தமிழக அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

கேமரா மூலம் 24 மணி நேர கண்காணிப்பு:தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு

       ''பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் சேகரிப்பு, திருத்தும் மையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி செய்ய வேண்டும்,'' என தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.

இன்று பிட்' அடித்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்

          ராமநாதபுரத்தில் இன்று நடந்த பிளஸ் 2 கணிதம் தேர்வில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்த 4,794 மாணவ, மாணவிகளில் 11 பேரும், 25 தனித்தேர்வர்களில் 4 பேரும் "ஆப்சென்ட்' ஆயினர். 

தமிழகம் முழுவதும் பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவு

          பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட விபத்துகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஓட்டை உடைசலாக, பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்க, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு

         அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


தேர்வுமுறை விஷயத்தில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

          ஒரு கல்வியாண்டில் எந்த தேர்வுமுறை அடிப்படையில் மாணவர்கள் சேர்கின்றனரோ, அதே முறையை கடைசிவரை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். இடையில் மாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது. மனுதாரரை புதிய முறையில் தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் எம்.டி.எஸ்., தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும், என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பேனா மூடியை விழுங்கியதால் வகுப்பறையில் துடி துடித்து உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவன்

           வகுப்பறையில் விளையாடிய போது விசிலடிக்க பயன்படுத்தப்பட்ட பேனா மூடியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சிறுவன் பள்ளியிலேயே துடி துடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

NPS (CPS )யில் முதல் தனியார் மயம்

PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here

        01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமானமுடிவினை இடைக்கால  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டுஆணையம் (PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர் வங்கிஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனவங்கியான BANK OF INDIA  ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது.

TET COURT NEWS:

         TET COURT NEWS: ஆதிதிராவிடர் /கள்ளர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் வழக்கு ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive