Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

25ஆம் தேதி தமிழக பட்ஜெட்

             தமிழக அரசின் 2015 - 16ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 25ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்து புதிதாக ஆய்வு நடத்த முடிவு

          தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது குறித்த உண்மை நிலவரத்தைக் கண்டறியும் வகையில், தனி அமைப்புகள் மூலம் புதிய ஆய்வை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.

அரசுப்பள்ளிகள் தங்களை நிலை நாட்டிக்கொள்ள போராட வேண்டியுள்ளது

            மாநிலத்தில் முதலிடம் ...!! கணினி.... யோகா.... நாட்டியம்..... கராத்தே.....என்று தங்களால் இயலாதவற்றை தம் பிள்ளைகள் மூலம் சாதிக்க வேண்டும் என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு ஆபத்தாண்டவனாய் கண் முன்னே தெரிபவை பிரமாண்ட கட்டிடங்களும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறையும் அட்மிஷன் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் கொட்டைக்கூல் காபியும் தான்....

பொதுத்தேர்வுப் பணியில்ஈடுபட உள்ள 2,720ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

            பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள 2,720 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சி.இ.ஓ., வழங்கினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 19ம் தேதி துவங்குகிறது. கடலூர் மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் உள்ள 410 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 42 ஆயிரத்து 227 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.


உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்மட்டுமே முதன்மைகண்காணிப்பாளர்கள்:

            பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.


4 ஆண்டுகள் ஆகியும்நடைமுறைக்கு வராத ஸ்மார்ட்கார்டு திட்டம்: ஆசிரியர்கள்அதிருப்தி

           பள்ளி கல்வித்துறையால், மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டத்திற்காக, பல்வேறு புள்ளி விபரங்களை சேகரித்த கல்வித்துறை, எவ்வித தகவல்களையும் தரவில்லை என, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு

       ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி அட்டவணை

       லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை:
பிரிவு : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்
பிரிவு பி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்

Teachers Wanted For Aided School

 

முதன்முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு திறனாய்வு தேர்வு

          சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. சென்னை சேலையூரில் உள்ள சியோன் பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், அப்பள்ளியில் பணியாற் றும் 860க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: பாடங்கள் நடத்துவதில் சிக்கல்.

              தொடர்ந்து நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் கல்வி கற்பிப்பது, புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மொழிப் பாடங்களை கையாள்வது உட்பட பல்வேறு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே புத்தக விநியோகம்

           கோடை விடுமுறையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) புத்தகங்களை முன்கூட்டியே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

          பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16) தொடங்கப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருத்துகின்றனர்.

சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஐ.நா.,வில் பேச்சு - ஆசிய கண்டத்தில் இருந்து சென்ற ஒரே பெண் ஆசிரியை

           சாத்துார்:“உலகளவில் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது,”என, ஐ.நா., சபையில் நடந்த பெண்களின் நிலை குறித்த கருத்தரங்கில் பேசிய சாத்துார் பள்ளி ஆசிரியை ரமாதேவி தெரிவித்தார். விருதுநகர், சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஆர்.ரமாதேவி. அ.ராமலிங்காபுரம் ஊராட்சி பள்ளியில் பணிபுரிகிறார். ஐ.நா., சபையில் நடந்த 'பெண்களின் நிலை' குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேசினார்.நேற்று மாலை ஊர் திரும்பிய அவர் கூறியதாவது:

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

              உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.
சிறுநீரகத்தின் பணிகள்:

வரும் கல்வியாண்டில் B.Sc கண் பரிசோதகர் படிப்பு தொடங்க நடவடிக்கை

           சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் (2015-16) பி.எஸ்ஸி. கண் பரிசோதகர் படிப்பு தொடங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.

இந்திய தேசிய கொடியின் வரலாறு - விதிகள்

          1917-ஆம் ஆண்டு, பாலகங்காதர திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து, 'சுயாட்சிப் போராட்டம்’ தொடங்கினர். அப்போது, அவர்கள் வடிவமைத்த தேசியக் கொடியின், இடது ஓரத்தில், பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இருந்தது. இதை, இந்திய சுதந்திரப் போராளிகள் பலரும் எதிர்த்ததால், விரைவிலேயே திரும்பப் பெறப்பட்டது.

SSA ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

         ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மாநிலம் முழுவதும் கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது.இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு,8-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்றது. இதில் மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளை அறியும் திறன்கள் சோதிக்கப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு; அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

CABINET MAY APPROVE 6 PERCENT DA HIKE IN NEXT WEEK

The Union Cabinet is likely to approve hiking dearness allowance (DA) to 113 per cent from existing 107 per cent benefiting 30 lakh central government employees and 50 lakh pensioners in its meeting scheduled in next week.

அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது : முதல்வர்

         அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை வீதம் குறைந்து வருகிறது. அரசின் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சில வகுப்புகளில் மாணவர்களே இல்லை. சில வகுப்புகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர்களின் சொந்த செலவில் ஏற்பாடு செய்த ஆங்கில உச்சரிப்பு சார்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி

    அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் பணிவான வணக்கம். எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் குறைகூறும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் இதுபோன்ற ஆசிரியர்களும் பலர் உள்ளனர் என்று. 

2010-2011 ம் ஆண்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) முறைபடுத்தி ஆணை

          2010-2011 ம் ஆண்டு டி ஆர் பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்)-முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை

ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

           ஒரே நேரத் தில் இரு படிப்பு படித்ததாக கூறி ஆசிரியர் பணி மறுக்கப்பட்டவரின் மனுவை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, விளாங்குடியை சேர்ந்த எஸ்.தேன்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
 

பி.எஃப் பிடித்தத்தில் புதிய முறை கொண்டுவர அரசு முடிவு (மொத்தசம்பளத்தில் 12% சதவீதம் )

          தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்வதில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழியர் ஒருவரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை மட்டுமே கணக்கிட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  பிடித்தம் செய்யப்படுகிறது. 
 

கனடா நாட்டு பள்ளிகளில் பாடத்திட்டமாகிறது அண்ணன்மார் கதை!

            கொங்கு வட்டாரத்தில் அண்ணன்மார் கதை பிரசித்தி பெற்றது. கோவில்களில் இது மரபாக நிகழ்த்தப்படுகிறது. நம்பிக்கை நிறைந்த அந்த கதையை, மாணவ, மாணவியர் எளிதில் புரிந்து விவாதிக்கும் வகையில், டிஜிட்டல் வடிவமாக்கி உள்ளார் கனடா நாட்டில், டொரன்டோ பல்கலை பேராசிரியை பிரண்டா பெக். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவருடன் பேசியதிலிருந்து...
 

“வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” –இனி பேசிகிட்டே இருக்கலாம்

வந்துருச்சு “வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” – இதிலாவது “மிஸ்ட் கால்” கொடுக்காம பேசுங்கப்பா!
          டெல்லி: உலக அளவில் பிரபலமான குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான "வாட்ஸ் அப்" நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ் காலிங் சேவையையும் தொடங்கி விட்டது. வாட்ஸ் அப்பின் வாய்ஸ் காலிங் குறித்த போலிச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப் நிறுவனம். 
 

'ஒரிஜினல்' காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி?

         காஞ்சிபுரம்:'ஒரிஜினல்' காஞ்சிபுரம் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல், வெளியூரில் தயாரிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருவதாக, பட்டு சேலைகள் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். பட்டு சேலை என்றாலே, காஞ்சிபுரம் தான் என்ற அளவிற்கு பெருமை உள்ளது.


'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி

            இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை, 'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.

சத்துணவு மையங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு

              ''தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து, வரும் ஏப்., 15ம் தேதி முதல், காலவரையின்றி, அனைத்து சத்துணவு மையங்களையும் மூடி போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடுசத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

தோட்டக்கலை அலுவலர் பதவி 605 பேருக்கு அழைப்பு

         சென்னை:தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 605 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும், 30ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகிறது.

வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு



வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive