பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபட
உள்ள 2,720 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சி.இ.ஓ., வழங்கினார். பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு வரும் 19ம் தேதி துவங்குகிறது. கடலூர் மாவட்டத்தில்,
கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் உள்ள 410 உயர் நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 42 ஆயிரத்து 227 மாணவ, மாணவிகள்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி அட்டவணை
லீக் ஆட்டங்கள் முடிவடைந்த
நிலையில், உலகக்
கோப்பை கிரிக்கெட்
காலிறுதிப் போட்டிகளுக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அவை:
பிரிவு ஏ: நியூஸிலாந்து,
ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்
பிரிவு பி: இந்தியா,
தென் ஆப்பிரிக்கா,
பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்
ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: பாடங்கள் நடத்துவதில் சிக்கல்.
தொடர்ந்து
நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல்
ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் கல்வி கற்பிப்பது, புதிய செயல்
திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மொழிப் பாடங்களை கையாள்வது உட்பட பல்வேறு
வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஐ.நா.,வில் பேச்சு - ஆசிய கண்டத்தில் இருந்து சென்ற ஒரே பெண் ஆசிரியை
சாத்துார்:“உலகளவில் ஆண் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது,”என, ஐ.நா., சபையில்
நடந்த பெண்களின் நிலை குறித்த கருத்தரங்கில் பேசிய சாத்துார் பள்ளி ஆசிரியை
ரமாதேவி தெரிவித்தார். விருதுநகர், சாத்துார் ஆங்கில பட்டதாரி ஆசிரியை
ஆர்.ரமாதேவி. அ.ராமலிங்காபுரம் ஊராட்சி பள்ளியில் பணிபுரிகிறார். ஐ.நா.,
சபையில் நடந்த 'பெண்களின் நிலை' குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேசினார்.நேற்று மாலை ஊர்
திரும்பிய அவர் கூறியதாவது:
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம்
வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும்
அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள்
உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர்
மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி
முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.
சிறுநீரகத்தின் பணிகள்:
SSA ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மாநிலம் முழுவதும் கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது.இந்தத்
தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3-ஆம் வகுப்பு,
5-ஆம் வகுப்பு,8-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்றது. இதில் மாணவர்களின்
வாசிப்பு திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கணித அடிப்படை
செயல்பாடுகளை அறியும் திறன்கள் சோதிக்கப்பட்டன.
2010-2011 ம் ஆண்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) முறைபடுத்தி ஆணை
2010-2011 ம் ஆண்டு டி ஆர் பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்)-முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை
பி.எஃப் பிடித்தத்தில் புதிய முறை கொண்டுவர அரசு முடிவு (மொத்தசம்பளத்தில் 12% சதவீதம் )
தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்வதில் புதிய முறையை கொண்டு
வர மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழியர்
ஒருவரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை மட்டுமே கணக்கிட்டு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.
கனடா நாட்டு பள்ளிகளில் பாடத்திட்டமாகிறது அண்ணன்மார் கதை!
கொங்கு வட்டாரத்தில் அண்ணன்மார் கதை பிரசித்தி பெற்றது. கோவில்களில் இது
மரபாக நிகழ்த்தப்படுகிறது. நம்பிக்கை நிறைந்த அந்த கதையை, மாணவ, மாணவியர்
எளிதில் புரிந்து விவாதிக்கும் வகையில், டிஜிட்டல் வடிவமாக்கி உள்ளார் கனடா
நாட்டில், டொரன்டோ பல்கலை பேராசிரியை பிரண்டா பெக். சமீபத்தில் சென்னை
வந்திருந்த அவருடன் பேசியதிலிருந்து...
“வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” –இனி பேசிகிட்டே இருக்கலாம்
டெல்லி: உலக அளவில் பிரபலமான
குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான "வாட்ஸ் அப்" நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ்
காலிங் சேவையையும் தொடங்கி விட்டது. வாட்ஸ் அப்பின் வாய்ஸ் காலிங் குறித்த
போலிச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய
வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப்
நிறுவனம்.
'ஒரிஜினல்' காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி?
காஞ்சிபுரம்:'ஒரிஜினல்' காஞ்சிபுரம் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல்,
வெளியூரில் தயாரிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் விற்கப்படும் போலி பட்டு
சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருவதாக, பட்டு சேலைகள் கூட்டுறவு
சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். பட்டு சேலை என்றாலே, காஞ்சிபுரம் தான்
என்ற அளவிற்கு பெருமை உள்ளது.
'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்
திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை,
'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.
சத்துணவு மையங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு
''தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து,
வரும் ஏப்., 15ம் தேதி முதல், காலவரையின்றி, அனைத்து சத்துணவு மையங்களையும்
மூடி போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடுசத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
தோட்டக்கலை அலுவலர் பதவி 605 பேருக்கு அழைப்பு
சென்னை:தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்,
605 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும், 30ம் தேதி
சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகிறது.
வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Tamil Nadu Revised Scales of Pay Rules For JA & Typist
Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Recommendations of the Grievance Redressal Cell - Dispensation of Higher Start of Pay for the posts of Graduate Junior Assistants / Typist and Record Clerks orders issued -
டி.என்.பி.எஸ் சி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்வோர் கவனத்திற்கு
10,+2,பட்டப்படிப்பில்
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழோ,தெரிவு சான்றிதழோ,பட்டமளிப்பு விழா
சான்றிதழ் அனைத்தையும்
கையில் வைத்திருத்தல்
நலம்.பட்டப்படிப்பில்
கண்டிப்பாக இந்த மூன்றில் ஒன்று இருந்தால்
பின்னர் அவர்கள்
கேட்பதை ஒரு
UNDERTAKING ல் எழுதி கொடுக்கலாம்.இல்லாதவர்கள் பருவ
சான்றிதழை காட்டுங்கள்
பிளஸ் 2 கணித தேர்வு: பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக 7 நாட்கள் விடுமுறை
மாணவர்கள் அதிக
மதிப்பெண் எடுக்கவும், தோல்வி விகிதம் குறைக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு
தேர்விற்கும் போதுமான கால இடைவெளி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு
ஒவ்வொரு தேர்வுக்கும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்
பள்ளிக்கல்வி துறை வரலாற்றிலேயே முதல் முறையாக கணித தேர்விற்கு 7 நாட்கள்
இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் உயிரைப் பற்றி கவலைப்படாத அதிகாரிகள்?
நமது நாளிதழ்
செய்தி எதிரொலியாக, பெருங்குடி அரசு துவக்க பள்ளியில், மேற்கூரை பூச்சு
உதிர்ந்த கட்டடத்தில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களை, பெற்றோர் முற்றுகையிட்டனர்.