Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தஞ்சை தமிழ் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் பிஎட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக, மதுரை மைய ஒருங்கிணைப்பாளர் பா.பாலன் வெளியிட்டுள்ள செய்தி:

பிற சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

           இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : CPS திட்டத்தை கைவிடவேண்டும் - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரிடம் நேரில் மனு

'ஜாக்கோட்டா': பின்னணியில் ஆளும் கட்சி?

          'ஜாக்டா' மற்றும் ஜாக்டோ' ஆசிரியர் சங்கக் கூட்டுக் குழுவுக்குப் போட்டியாக உருவாகியுள்ள, 'ஜாக்கோட்டா' என்ற குழுவினர் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளனர். இதனால், ஆசிரியர் சங்கங்களை உடைக்க முயற்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சந்தேகங்கள் சில ?

          மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?

அரசாணை நிலை எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது 
மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து

                  
          பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, இரு நாடுகளுக்கும் இடையே தடைப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையற்ற பட்டதாரிகள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

             9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 3-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

40 ஆயிரம் சத்துணவு, அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பாஜக

         தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு பத்து நாட்களில் பணி நியமன ஆணை: முற்றுகையிட்டோரிடம் அரசு உறுதி

            நேர்முகத்தேர்வு நடந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும், பணி ஆணை வழங்கவில்லை என, காத்திருக்கும் பட்டதாரிகள், பதிவாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். 'பத்து நாட்களில் நியமன ஆணை அனுப்பப்படும்' என, அவர்களுக்கு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

25 லட்சம் 'காஸ்' சிலிண்டர்; 12 ஆயிரம் ஊழியர்; ஒரு நாளைக்கு ரூ.7.5 கோடி வசூல்!

           25 லட்சம் 'காஸ்' சிலிண்டர்; 12 ஆயிரம் ஊழியர்; ஒரு நாளைக்கு ரூ.7.5 கோடி வசூல்! வீடுதோறும் சப்ளையில் நடக்கும் கொள்ளையோ கொள்ளை

ஆசிரியர் இல்லாத பள்ளியில் தேர்வுக்கு முன் சுறுசுறுப்பு: 2 ஆசிரியர்களை களத்தில் இறக்கிய கல்வித்துறை!!

           சென்னை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 பிரிவில், ஐந்து பாடங்களுக்கு, ஓர் ஆண்டாக ஆசிரியர் இல்லாத தகவல் அம்பலமானதை தொடர்ந்து, கல்வித்துறை விழிப்படைந்துள்ளது. பொதுத் தேர்வு துவங்குவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், இரு பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

TET Case Details

TET:ராமர் சுடலைமணி வழக்கு 13-03-2015 அன்று மீண்டும் வருகிறது


         இன்று விசாரணைக்கு வந்த ராமர் சுடலைமணி வழக்கு 13-03-2015 அன்று மீண்டும் வருகிறது.அன்றைய தினம் உறுதியாக தடை விலக்கப்படு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் சோமையாஜி அவர்கள் வரவில்லை. மனுதாரர்கள் தரப்பிலான வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதால் இன்று தடை விலகவில்லை நாளை மறுநாள் உறுதியாக தடைவிலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடைத்தாள்களை சரிபார்க்க வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்

       விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு கேற்ப முகப்புத் தாள் மற்றும் விடைத்தாளர்கள் சரியாக உள்ளதா என்பதை தலைமை மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சரிபார்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டார்.  

பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வுப் பணிகள்

       தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு பிரபல ஓவியர் மூலம் ஒரு நாள் பயிற்சி

       சேலம் மாவட்ட அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு, பிரபல ஓவியர் மூலம், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தியாவில், தில்லி, கேரளா மற்றும் தமிழகத்தில் பெண்கள் கல்வி சிறந்து விளக்குகிறது

undefined
      நாட்டில் பெண்கள் கல்வி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தில்லி, கேரளா மற்றும் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
"டிஜிட்டல் பாலினம் அட்லஸ்" யுனிசெப் மூலம் பெண்கள் கல்வி குறித்து துல்லியமான புள்ளியல் விவரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. இதில், தில்லி, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்களின் கல்விநிலை சிறந்து விளங்குவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாளை உலக சிறுநீரக தினம்: ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால் ஆபத்து- டாக்டர்கள் எச்சரிக்கை



       ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2–வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை மேடவாக்கத்தில் உள்ள மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடந்தது. இதில் 500–க்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், ரத்தம் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.

புதுவையில் ரூ.1 கட்டணத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்

    தமிழகத்தில் மாணவர்கள் பள்ளி-கல்லூரி செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸை பயன்படுத்தி தமிழக அரசின் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம். ஆனால், மாணவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தான் பயணம் செய்ய முடியும். மாணவர்களுக்கு என தனியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகியே பயணம் செய்கின்றனர்.
 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

     மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் யு.ஜி.சி.விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 

மாணவர்கள் கேலி செய்ததால் பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை

     மாணவர்கள் கேலி செய்ததால் அவமானம் அடைந்த பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தார்.

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள்

        வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியைகள் கே.கல்பனாவும் சொர்ணவல்லியும்.

எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு?

       நாம் 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது 12 % பேர்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் கைநாட்டுதான்.
‘‘(மனுசன்) சந்திரன் மேல கால வைச்ச காலம்
நீ கைநாட்டு வைக்கிறது அலங்கோலம்.”

வெற்றிப் பாதை- எஸ்.எஸ்.எல்.சி: அறிவியல் கண்ணோட்டம் இருந்தால் அள்ளலாம் மதிப்பெண்

     பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதுதான். கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் தேர்வில்தான் அதிகமான மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்களையும், அதிகமானோர் தேர்ச்சியும் பெற்றுவருவதே இதற்கு சான்று. அறிவியல் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு (25 மதிப்பெண்கள்) கருத்தியல் தேர்வு (75 மதிப்பெண்கள்) என நடத்தப்படுகிறது.

பள்ளியில் பொம்மலாட்டம் !! மாணவர்கள் கொண்டாட்டம் !!!!!!

நன்றி,
Mr.தாமஸ் ஆண்டனி ,
இடைநிலை ஆசிரியர்,ஈரோடு .

முக்கியப் பாடத் தேர்வுகள் எளிமையாக இருக்குமா? பிளஸ் 2 மாணவர்களிடம் எதிர்பார்ப்பு

    பிளஸ் 2 மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தன. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான வினாத்தாள்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் எளிமையாக இருந்ததால், கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கான வினாத்தாள்கள் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிளஸ்2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

      பிளஸ்2 தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே செய்முறைத் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
         இது தொடர்பாக செவ்வாய்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வரும் பிளஸ்2 பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். இதில், செய்முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே 12,14,17,19 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிற செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சலவை சோப், ஷாம்பு பயன்பாடு என்ன? ஆங்கிலம் 2ம் தாளில் சுவாரஸ்ய வினாக்கள்

          பிளஸ் 2 தேர்வில் நேற்று நடந்த, ஆங்கிலம் 2ம் தாள் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். சலவை சோப், ஷேவிங் கிரீம், ஷாம்பு பயன்பாடு குறித்த கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வில் காப்பியடித்த, 15 பேர் சிக்கினர்.

சிறந்த சிற்பக் கலை நகரமாகத் தேர்வு செய்ய 12-இல் யுனெஸ்கோ குழு மாமல்லபுரம் வருகை

           சிறந்த சிற்பக்கலை நகரமாக மாமல்லபுரத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக, யுனெஸ்கோ குழு வரும் 12-ஆம் தேதி வருகிறது.பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு

       தமிழக தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
          கடலூர் மாவட்டம், சிதம்பரம் துணை கலெக்டர் எம்.அரவிந்த், நிதித்துறை சார்புச்செயலாளராக இடமாற்றம் செய்யப்படுகிறார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குனர் எஸ்.நடராஜன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார்.
 

மூளைச்சாவு அடைந்த ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம்

கோலார் தங்கவயல், 
          கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா உதுகுலா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஷோபா (வயது 42). இவரது கணவர் பெயர் சோமசேகர். 
 

கல்வி நிறுவன மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பு

           கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ ஆலோசனை தேவைப்பட்டால், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆலோசகரை அணுக வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. 
 

தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

           சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட, பட்டயப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 11) வெளியிடப்பட உள்ளன.பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
 

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி: சரத்குமார் யோசனை!

            அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார். 

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive