பிளஸ் 2 மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தன. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான
வினாத்தாள்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் எளிமையாக இருந்ததால், கணிதம்
உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கான வினாத்தாள்கள் தொடர்பாக ஆசிரியர்கள்,
மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Revision Exam 2025
Latest Updates
பிளஸ்2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...
பிளஸ்2 தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வு எழுதும் மையங்களிலேயே செய்முறைத் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக
செவ்வாய்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறுகையில்,
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வரும் பிளஸ்2
பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். இதில்,
செய்முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் கருத்தியல் தேர்வு எழுதும்
மையங்களிலேயே 12,14,17,19 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிற செய்முறை
தேர்வில் கலந்து கொள்ளலாம்.
சலவை சோப், ஷாம்பு பயன்பாடு என்ன? ஆங்கிலம் 2ம் தாளில் சுவாரஸ்ய வினாக்கள்
பிளஸ் 2 தேர்வில் நேற்று நடந்த, ஆங்கிலம்
2ம் தாள் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
சலவை சோப், ஷேவிங் கிரீம், ஷாம்பு பயன்பாடு குறித்த கேள்விகள் இடம்
பெற்றிருந்தன. தேர்வில் காப்பியடித்த, 15 பேர் சிக்கினர்.
சிறந்த சிற்பக் கலை நகரமாகத் தேர்வு செய்ய 12-இல் யுனெஸ்கோ குழு மாமல்லபுரம் வருகை
சிறந்த சிற்பக்கலை நகரமாக மாமல்லபுரத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக, யுனெஸ்கோ குழு வரும் 12-ஆம் தேதி வருகிறது.பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் முதலாம்
மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள்
உருவாக்கப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழக தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கடலூர் மாவட்டம், சிதம்பரம் துணை கலெக்டர்
எம்.அரவிந்த், நிதித்துறை சார்புச்செயலாளராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் இயக்குனர்
எஸ்.நடராஜன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட
இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டார்.
மூளைச்சாவு அடைந்த ஆசிரியையின் உடல் உறுப்புகள் தானம்
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா
உதுகுலா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி
வந்தவர் ஷோபா (வயது 42). இவரது கணவர் பெயர் சோமசேகர்.
கல்வி நிறுவன மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்பு
கல்வி நிறுவனங்களில், சூரிய மின்சக்தி
அமைப்புகளை நிறுவ ஆலோசனை தேவைப்பட்டால், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
துறை ஆலோசகரை அணுக வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,
உத்தரவிட்டு உள்ளது.
எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!
எலுமிச்சை சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!
புதிய மருத்துவ காப்பீடு அட்டை எளிதில் டவுன்லோடுசெய்துகொள்ளலாம்!
www.TNNHIS2012.com என்ற
வலைத்தளம் சென்று employee login என்பத கிளிக் செய்து உங்கள் பழைய அட்டை
எண்னை user name மற்றும் உங்கள் பிறந்த தேதியை password ஆக உள்ளீடு
செய்தால் உங்கள் புதிய மருத்துவ காப்பீடு அட்டை விபரம் காணலாம்.
Padasalai's Departmental Exam Collection!
- Departmental Exam Study Materials - Click Here
- Departmental Exam Old Questions - Click Here
- Departmental Exam Latest Bulletins - Click Here
- Departmental Exam Syllabus - Click Here
- Departmental Exam Subject Codes - Click Here
- Departmental Exam Text Books - Click Here
- & More Department Exam Collection
வேலைவாய்ப்பு கோரி பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, பார்வையற்ற பட்டதாரிகள் சென்னையில் திங்கள்கிழமை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளஸ் 2 தேர்வு முறைகேடு: 36 பேர் நேற்று சிக்கினர்
சென்னை: பிளஸ் 2 ஆங்கிலம், முதல் தாள்
தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட, 36 பேர் பிடிபட்டனர். இதில், பள்ளி
மாணவர்கள், 12 பேர். அதேநேரம், ஆங்கிலம் முதல் தாள் ஆங்கில வழி
மாணவர்களுக்கு எளிமையாகவும், தமிழ் வழி மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவும்
இருந்தது.
'குரூப் - 2' தேர்வு முடிவு வெளியீடு
'குரூப்
- 2' தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான -
டி.என்.பி.எஸ்.சி., நேற்றிரவு, வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில்,
கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், 'குரூப் - 2' பதவிக்கான, 'மெயின்' தேர்வு
நடந்தது. துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர்,
நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட, 1,130 பதவிகளுக்கு, மொத்தம், 50
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், 5,635 பேர் தேர்வு
பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை
சேர்ப்பதற்காக, ஏப்ரல் மற்றும் மே மாதம், சிறப்பு முகாம் நடத்தப்படும்
நாட்களில், ஆதார் எண் பெறாதவர்களுக்காக, 'ஆதார் மெகா முகாம்' நடத்தப்பட
உள்ளது.
வருமான வரி: பள்ளிகளுக்கு கெடு
வரும்
31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு
நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி
பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற டி.இ.டி.வழக்குகள் வரும் மார்ச் 30தேதிக்கு ஒத்திவைப்பு - புதிய தலைமுறை தொலைகாட்சி
*ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் இயங்கும் விமானம் தனது உலக சுற்றுப்பயணத்தை இன்று காலை தொடங்கியது: நாளை இந்தியாவுக்கு வருகை
சூரிய ஒளியில் இயங்கும் விமானம் உலகளவிலான தனது முதல் சுற்றுப்பயணத்தை அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை தொடங்கியது. அங்கிருந்து ஓமன் செல்லும் இவ்விமானம் நாளை இந்தியாவுக்கு வந்து சேர்கிறது.
சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்
பொதுமக்களின்
முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக
வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை,
வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம். அது போல, அந்த சான்றிதழ்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்
கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
தேர்வு நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால் தேவையற்ற குழப்பங்கள்!
பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வரும் நிலையில்,
நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக,
தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.