Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட்டேட்டா கட்டணத்தை பாதியாககுறைக்கமுடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

          மொபைல் இண்டர்நெட்  டேட்டா கட்டணங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து  வரும் நிலையில், அரசு நிறுவனமான  பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள்  தொடர்ச்சியாக உயர்ந்து வரும்  நிலையில், அரசு      நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பிளஸ் 2'பொதுத்தேர்வு துவக்கம்:போக்குவரத்து கழகத்திற்குஉத்தரவ

         'பிளஸ் 2' பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5)  துவங்குகிறது. இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது என பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

Safety measures in exam centers

பத்திரிக்கைச் செய்தி  

         தருமபுரி மாவட்ட தேர்வு மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்  தருமபுரி மாவட்டத்தில்  நடைபெற உள்ள மார்ச்/ஏப்ரல்  2015 பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு  மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.  

பிளஸ்–2 தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி

               
         பிளஸ்–2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பெரிய அளவில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 80 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்.

குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை

         குரூப் 2 தேர்வு மூலம் நேரடி நியமன உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிவோருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 

12–ம் பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதா? மராட்டிய கல்வி வாரியம் மறுப்பு

      12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை மராட்டிய மாநில கல்வி வாரியம் மறுத்துள்ளது.

மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ராமநாதபுரம் மாவட்டஆட்சியர்

      ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பன்றி காய்ச்சல் பாதிப்பா: 'டாமி புளூ' போட்டு தேர்வு எழுதலாம்: சுகாதாரத்துறை செயலர் தகவல்

           சென்னை: ''தமிழகத்தில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. பீதி அடையும் அளவுக்கு நிலைமை இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்; பாதிப்புள்ள மாணவர்கள், 'டாமி' புளூ மாத்திரை போட்டு தேர்வு எழுதலாம்; எந்த சிக்கலும் இல்லை,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வங்கி ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

          அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளை பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்வு நேரத்தில் பீதியூட்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பாதீர்: அரசு, தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

      'பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வு நடக்கும் நிலையில், தேவையற்ற தகவல்களை எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பீதியை ஏற்படுத்தாதீர்கள்' என, தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 28–ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு

           மத்திய அரசு ‘பட்ஜெட்’டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து ஏப்ரல் 28–ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாகவும், ஜூலை மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

உலகக் கோப்பை முதல் கட்டம்: ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், சாதனைகள்!

         ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைவிடவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வாக்கியத்தை யாராவது சொல்லியிருந்தால், அவரது மனநலன்குறித்துச் சந்தேகம் வந்திருக்கும். 

நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் பயிற்றுநரா?

1. ஒரு சிறந்த ஆசிரியர் பயிற்றுநருக்கு மிகவும் முக்கியானது Planner. ஒரு வாரத்தில் தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான திட்டம்.

CRC SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு உள்ளது!

          CRC SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு உள்ளது. தலைமை செயலகத்தில் சுற்றறிக்கையில் உள்ளது. CRC SPL CL குறித்து SSTA சார்பாக ஆகஸ்ட் /2014 முதல் முறையாக இயக்குனர் அவர்களிடம் கேட்டு பள்ளி கல்வித்துறையில் உள்ளதை போல் தொடக்கக்கல்வி துறையிலும் வேண்டுமென கோரப்பட்டது ,கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகல்வி துறையில் இதுகுறித்து வெளியிட்ட அரசாணைகளை சேகரித்து இயக்குனரிடம் வழங்கியது முதல் இதுநாள் வரை தொடர்ந்து வலியுத்தப்பட்டு வருகிறது.
 

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்


      ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர்.
 

நகல் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க காவல் துறையின் புகார் ரசீது அவசியம்

    குடும்ப அட்டை தொலைந்துபோனவர்கள், நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கும்போது காவல் துறையில் புகார் அளித்ததற்கான ரசீது இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 

டாக்டரின் ஆலோசனைப்படி மாஸ்க் அணியலாம்: பன்றிக்காய்ச்சல் பாதித்த மாணவர்களுக்கு தனி தேர்வு மையம்

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு நாளை தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போதிய வெளிச்சம், காற்றோட்டம், மின்விளக்கு, மின்விசிறி வசதி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கும் இந்நோய் பரவி உள்ளதால் பள்ளிகள் தகுந்த முன்னெச்சரிச்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

         தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது. 590 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதே போல மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் இன்று நடந்தது.
 

அரசு பொதுத்தேர்வுகள்: மாணவர்கள்-பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைப்பு



      நாளை (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள் / மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை  அமைக்கப்பட்டுள்ளது.  

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : கிராம மாணவர்களின் நலனை கருதி தமிழ், ஆங்கிலம் தேர்வு தேதி மாற்ற கோரிக்கை

          இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் உச்சிமாகாளி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுதேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. இதில், மார்ச் 24ம் தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வும், 25ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 26ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் தேர்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் முகப்பு சீட்டு அனுப்பப்பட்டது

          தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 19–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுத 3ஆயிரத்து 298 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

          அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு

            அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.


வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மார்ச் 7 கடைசி

  திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களது பதிவை மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தால், இம்மாதம் 7ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
 

சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

undefined
       தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. ஆனால் சில பள்ளிகளில் மட்டுமே உள்ள தகவல் தொழில்நுட்பம் பாடம் கொண்ட 10–ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்று முன்தினம் தேர்வு தொடங்கியது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கொண்ட 10–ம் வகுப்பு தேர்வு நேற்று அறிவியல் பரீட்சையுடன் தொடங்கியது.

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது

  புதுவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
 

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: கொளுத்தும் வெயிலில் காத்து நின்று விண்ணப்பம் வாங்கி செல்லும் பெற்றோர்

         திருச்சியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர், கொளுத்தும் வெயிலில் பல மணிநேரம் காத்து நின்று விண்ணப்பங்களை வாங்கி செல்கிறார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்'டா: இறுதி வாய்ப்பை வழங்கியது டி.ஆர்.பி.,

       கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்காக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 20 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி உள்ளது.
 

கைக்கு வராத கல்வி ஊக்கத்தொகை: கலெக்டரிடம் மாணவர்கள் புகார்

         இடைநிற்றலை தவிர்க்க 10 முதல் பிளஸ் 2 மாணவருக்கான 'சிறப்பு கல்விஊக்கத் தொகை' கடந்த 3 ஆண்டுகளாகக கிடைக்கவில்லை என கலெக்டர்களிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.

பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச் 11ல் துவக்கம்

         பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், மார்ச், 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை துவங்கி, மார்ச், 31ம் தேதி முடிகிறது. இந்நிலையில், பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச், 11ம் தேதி துவங்க உள்ளது.

முதுகலை செம்மொழித் தமிழ் பாட வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை

       அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை செம்மொழித்தமிழ் பட்ட வகுப்பு தொடங்கப்பட்டால், அதில் பயிலும் மாணவர்களுக்கு செம்மொழி மத்திய நிறுவனம் மாதம் ரூ 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு தெரிவித்தார்.

ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பம்

         புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னையில் 3 மாணவர்களுக்கு அறிகுறி: பன்றிக்காய்ச்சலை தடுக்க 50ஆயிரம் தடுப்பு ஊசி

       நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்

           தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive