அரசுப் பள்ளிகளில், கலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு புத்தகங்களே
தெரியாமல், பள்ளிக்கல்வித் துறை பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய பாடங்களுக்கு வரிசை எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித
வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்
தெரிவித்தார்.
'பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில்
ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல்
நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என,
தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கோவை
கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான செய்
முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன்படி பள்ளிகள் 2
பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.
மாணவர்களின் புரிதலைச் சோதிக்கும் வகையில், தேர்வுகளில் நடைமுறை மாற்றத்தைக் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அதற்காக கேள்வித் தாள், காப்பி அடிப்பவர்களுக்கான தண்டனை நடைமுறைகள் ஆகியவற்றிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
ஒவ்வொரு துறையிலும், காலிப் பணியிடங்களை
நிரப்பும் போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை, சம்பந்தப்பட்ட துறை மற்றும்
அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு
உள்ளது.
கலை மற்றும் கைவினை பொருட்கள் தொடர்பான
கல்விக்கு, புதிய பல்கலையை உருவாக்கும் முயற்சியில், மத்திய மனித வள
மேம்பாட்டுத்துறை இறங்கி உள்ளது. இதற்காக, குழு ஒன்றும் அமைக்கப்பட்டு
உள்ளது.
மாணவர்கள் வருகை குறைவால் ஆசிரியர்களுக்கு... நெருக்கடி : 535 தொடக்க பள்ளிகள் மூடப்படலாம் என்று அச்சம்
பெங்களூரு:கர்நாடகாவில், 535 தொடக்க
பள்ளிகளில், மாணவ, மாணவியர் வருகை இல்லை. எனவே, இப்பள்ளி ஆசிரியர்களை, வேறு
பள்ளிகளுக்கு அரசு நியமித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், இப்பள்ளிகள்
மூடப்படலாம் என்ற அச்சம், பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜேட்லி, நிதிப்
பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கை கொஞ்சம் மந்தமானாலும் முதலீட்டை
பெருக்கும் பட்ஜெட்டாக இது அமையும் என்றார்.
கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் வாங்கும் ஊதியத்தை உயர்த்தும்
மசோதா, வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக,
மாதம், 1.23 லட்சம் ரூபாய் ஊதியம் பெற வாய்ப்புள்ளது. தற்போது,
எம்.எல்.ஏ.,க்கள், மாதத்திற்கு, மற்ற படிகள் உட்பட, 65 ஆயிரம் ரூபாய்
பெறுகின்றனர். மாநிலத்துக்குள் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடருக்கு,
தினமும், 1,000 ரூபாயும், மாநிலத்துக்கு வெளியே கூட்டம் எனில், 1,500
ரூபாய் வழங்கப்படும்.
சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன்
வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு
கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று
நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம்
இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி
இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
பிளஸ்
2 தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் முக்கிய பாடங்களுக்கு வரிசை
எண்கள் மாற்றப்பட்டு ஏ, பி என 2 வித வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்: ஆங்கிலத்தில் சரளமாக பேச
பி.எட். மாணவர்களுக்கு பயிற்சி - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் முடிவு
மாநகராட்சி பள்ளிகளில், பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை நேர சிற்றுண்டி
வழங்கும் திட்டம், கடந்தாண்டு துவங்கப்பட்டது. இந்தாண்டு, திட்டத்தை
செயல்படுத்த தவறிய, கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கற்றல்
அடைவுத்திறன் தேர்வில், வெறும் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற
மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற
வேண்டும் என அரசு நிர்பந்தம் செய்வது, நடைமுறை ரீதியாக சாத்தியமானதா என
கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2012ல்,
அடிப்படை திறன்களான எழுதுதல், படித்தல் ஆகிய அறிவை சோதிக்கும் வகையில், 8ம்
வகுப்பு மாணவர்களுக்கு (தற்போது 10ம் வகுப்பு) நடத்திய அடைவுத்திறன்
தேர்வில், வெறும் 35 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த
மாணவர்கள், விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி
பெற வேண்டும் என அரசும், அதிகாரிகளும் கட்டாயப்படுத்துவது எந்த வகையில்
நியாயம் என தெரியவில்லை.
'பேஸ்புக்'
கனவான்களே! இரவு பகல் பாராமல், ஸ்மார்ட்போன் துணையோடு, 'பேஸ்புக்'கில்
மூழ்கியிருப்பவரா நீங்கள்? உங்கள் தனிப்பட்ட விவரங்களையும், குடும்ப
புகைப்படங்களையும், 'அப்லோட்' செய்யும் ஆர்வக்கோளாறு கொண்டவரா நீங்கள்?
உங்களுக்கு எந்நேரமும் ஆபத்து காத்திருக்கிறது.
மத்திய
அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில்
போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த
பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதனிலை
கல்லூரிகளில் உதவிபேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்க நடத்தப்படும்
தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்கடைசிதேதியை மார்ச் 23-ஆம் தேதி
நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான
மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு
பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 'சலுகை'
அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும்.
அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்த, 2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பல்வேறு புதிய பாதைகளை காட்டுகிறது.
இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம்
அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது
புள்ளிவிவரம்.
தமிழகத்தில் எய்ம்ஸ், மாணவர்களின் கல்வி உதவிக்கான புதிய அமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம் ஆகிய பலவித
அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015-2016
நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர்
அருண்ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்டது.
பொது
தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை, தேர்வுக்கு, 25
நாட்களுக்கு முன்பே தேர்வுத்துறை வினியோகம் செய்ததால், அதை பாதுகாப்பதில்
பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.
சேலம்:
கற்றல் அடைவுத்திறன் தேர்வில், வெறும் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
பெற்ற மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி
பெற வேண்டும் என, அரசு நிர்பந்தம் செய்வது, நடைமுறை ரீதியாக சாத்தியமானதா
என, கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட
மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை
துவங்குகிறது. இதில், 24 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
சென்னைப் பல்கலையில், பல ஆண்டுகள்
விலங்கியல் துறை பேராசிரியராக பணியாற்றி, தற்போது, பல்கலை மானியக் குழு
(யு.ஜி.சி.,) துணைத் தலைவராக பணியாற்றும், பேராசிரியர் எச்.தேவராஜ்,
சென்னைக்கு, ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்தார்.
திருக்கோவிலூர் அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்க, 5.50 லட்சம் 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
'பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டிய,
முதல் இரண்டு சீருடைத் துணிகள், மார்ச் 15ம் தேதிக்குள், சமூக நலத்துறைக்கு
அனுப்பி வைக்க வேண்டும்' என, கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர்
கோகுல இந்திரா உத்தரவிட்டு உள்ளார்.
வேலைவாய்ப்பகங்களில்
பதிவு செய்து, தமிழகத்தில், 43.14 லட்சம் பெண்கள் உட்பட, 84.68 லட்சம்
பேர் காத்திருக்கின்றனர். பதிவை புதுப்பிக்காததால், ஆறு மாதங்களில், பதிவு
செய்தோர் எண்ணிக்கை, 10 லட்சம் வரை குறைந்துள்ளது.
தமிழக தபால் துறையில் முதல் முறையாக செல்லிடப்பேசி விற்பனை மதுரையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. தபால் சார்ந்த சேவைகள் தவிர பல்வேறு வணிக ரீதியிலான சேவைகளையும் தபால் துறை செய்து வருகிறது. தற்போது செல்லிடப்பேசி விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்புப் பணி
ஒதுக்கீடு செய்வதற்கு, குலுக்கல் முறை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு
தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை, முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
அனைத்து வாக்காளர்களும் இ-மெயில், ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 உயர்ந்தது. டீசல் விலையும் ரூ.3.34 அதிகரித்தது.