தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கான சான்றிதழ்
சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை
ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு
நடைபெறுகிறது.
கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக் கல்வி
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்ககம் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளை
விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு எண்ணெய் நிறுவன
அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
'சிறப்பு வகுப்புக் கட்டணம், விடுதியில் தனிப் பயிற்சி கட்டணம் போன்ற
பெயர்களில் மறைமுக கட்டணம் வசூலித்தால், அந்தப் பணத்தை திரும்பப் பெற
நடவடிக்கை எடுக்கப்படும்' என, தனியார் பள்ளிகளுக்கு சிங்காரவேலு கமிட்டி
எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம், முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில்
பிளஸ் 2 வகுப்பு நடக்கும் அவலத்தை கண்டு வருந்திய முன்னாள் மாணவர்கள், 3
லட்சம் ரூபாய் செலவில், மூன்று வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர்
மாவட்டத்தில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட 2,322 மாணவியர்
கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:
உரிமையியல் நீதிபதி பதவியில் (201314ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 162
பணியிடத்தை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 1, 2ம் தேதி
நடந்தது.
முதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில்
சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு 138 என்ற எண்ணை
தொடர்பு கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே துரிதமாக பயன்பாட்டுக்குக் கொண்டு
வந்தது.
பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில்
உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ,
மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு
தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டார்.
பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் நோடல் மையங்களில் மேற்கொள்ள
வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர்கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும்
உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மார்ச் 5ம் தேதி ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகளும்,
மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் தொடங்கவுள்ள
நிலையில், அவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச்
செயலகத்தில் நடைபெற்றது.
வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால்
தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி
முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர்
மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள்
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள்
முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?)
நிறைந்திருக்கும்.
தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல்
வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான
கே.சி.வீரமணி நேற்று தொடங்கிவைத்தார்.
பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது.
''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார்
மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள்
ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர்
கூறியதாவது:
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேர்மையாகவும், முறைகேடு
நடக்காமல் இருக்கவும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு
பணிகளுக்கு 1 லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய
உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக,
சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய
அரசு, 'செக்' வைத்துள்ளது.
திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த
உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப்
பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள், சிறப்புச் சலுகை மூலம், 10ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, தேர்வுத் துறை இயக்குனரகம்
அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின்
பணிகளில், இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை
அலுவலகத்தில், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின்
'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி
இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில்
மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள்
பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் பள்ளியில் தேர்வு எழுத வந்த
மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங் நேற்று நடந்தது. இதை
பார்த்த பெற்றோர் அதிருப்தியடைந்தனர்.
வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம்
தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ,
மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து,
தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது.
மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500
பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 2015-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய
உள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, உ கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில்
முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர்
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே
பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது
தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள்
குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.
மத்திய அரசும், மாநில அரசும் கல்விக்காக
பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது.
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம்
மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக,
tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை
முன்னோட்டம் நடத்தி வருகிறது.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ’சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட, பிளாக் கல்வி அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.