வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால்
தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி
முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர்
மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள்
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள்
முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?)
நிறைந்திருக்கும்.
Revision Exam 2025
Latest Updates
105 வங்கிகளின் புத்தகங்கள்முகவரி ஆவணங்களாக ஏற்பு:பாஸ்போர்ட் அதிகாரி தகவல்
''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார்
மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள்
ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர்
கூறியதாவது:
உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, உ கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில்
முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர்
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சீரழியும் ஆரம்ப கல்வி: மேல்நிலை வகுப்பில் மாணவர்களோடு போராடும் ஆசிரியர்கள்!!
மத்திய அரசும், மாநில அரசும் கல்விக்காக
பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க
தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் 'தக்கல்' முறையில்
விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விருப்பமுள்ள
தனித்தேர்வர்கள் சிலர், பல்வேறு காரணங்களால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள்
விண்ணப்பிக்க இயலாமல் போயிருக்கலாம். அவர்களின் நலன் கருதி, 'தக்கல்' முறை
எனப்படும் சிறப்பு அனுமதி முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு வாரிய ஊழல் வழக்கு: மத்திய பிரதேச கவர்னர் ராஜினாமா
மத்திய பிரதேசத்தில் வனக்காவலர் பணிக்கு ஆட்களை
தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த
முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த தேர்வு முறை கேட்டில் மத்திய பிரதேச மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவும்
(வயது 86) நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சிறப்பு
அதிரடிப் படையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையையும் (எப்ஐஆர்) பதிவு
செய்தனர்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல்
உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல்
1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில்
பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில்
பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின்
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக்
காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்
இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி
ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம் பெறுவது
தொடர்பான தணிக்கை தடை எவருக்கேனும் இருப்பின் அரசாணை எண்.23 நிதித் துறை
நாள்.12.01.2011ன் படி அரசு கடித எண்.8764/சி.எம்.பி.சி/2012,
நாள்.18.04.12ன் படி தணிக்கை தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக
பாடசாலை பெருமிதம்கொள்கிறது! நமது ஆசிரிய தன்னார்வலர்களுக்கு நன்றிகள் பல...
கல்வித்துறை சார்ந்த செய்திகளை வழங்கும் ஒரு வலைதளத்தால் வேறு என்ன செய்துவிட முடியும்?
முடியும். முடியும். முடியும்.
PGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில்
தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில்
படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான
2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வந்த தாற்காலிக பணியாளர்கள்
4,100 பேருக்கு பணி நிரந்தர ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்உடற்கல்வி
ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்
(அடிச்சா திருப்பி அடிக்காதவங்க உலகத்துலேயே இரண்டு பேர் தான் -
1) கோயில் பூசாரி, 2) பள்ளிக்கூட வாத்தியார் - சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்பட வசனம் இது.
ஏன்னா? வாத்தியார்கள் ”ரொம்ப..... நல்லவன்”)
செய்தி-
பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை,
தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை
எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலையத்தை
முற்றுகையிட்டனர்.