Half Yearly Exam 2024
Latest Updates
CPS 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு
தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு
மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10
லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது.
இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி
அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட
அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு !!
நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட
சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால்
சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் 2
ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர்,
சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியில் இருக்க வேண்டும்.
6வது ஊதிய குழு அரசாணையின்படி (மூத்தோர் இளையோர்) - ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தால் களைய நீதிமன்றம் உத்தரவு.
பணியல் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை 45113 ஊதிய பிரிவு.17.08.2009 - இதன்படி களைந்துகொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. - Click Here & Download
தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் மாணவி; ருசிகரமான பேட்டி
தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார்.
வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி?
பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை
தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு
பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள்,
ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் மற்றும் முகப்புப் பக்கம்
இணைப்புப் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 தேர்வை நடத்தும்
ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை
பிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை: தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு
* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.
நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை இணைப்புடன் ஏப்ரல் 1ம் தேதி முதல் விரல்ரேகை வருகை பதிவு!!
நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை விவரங்களுடன் கூடிய மின்னணு விரல் ரேகை பதிவு முறையை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே அலுவலகங்களில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும் முறை அமலில் உள்ளது. அதேநேரத்தில் ரயில்வே பணிமனைகளில், தொழிற்சாலைகளில் வருகைப்பதிவு அட்டை முறை உள்ளது.
ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு
ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
SCERTல் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.
உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற புதிய திட்டம் அறிமுகம்
வெளிநாடுகளில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, புதிய கல்வி உதவித் தொகை திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள்
நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில்
இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன
உத்தரவில் 'தற்காலிக பணியிடம்' என குறிப்பிடப்பட்டது.
பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு
'பணிவரன் முறையும்' அடுத்த இரண்டு ஆண்டுகளில் 'தகுதிகாண் பருவமும்' வழங்கப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல,
பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள்
எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947
பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து 816 மாணவர்களும்
கூடுதலாக தேர்வு எழுதுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
தேர்வு காலங்கள்.. மாணவனே பதட்டம் தவிர்... மனதை லேசாக்கு!
பிளஸ் ௨ தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு
முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு,
மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில்
முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம்
அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி.