Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவிப்பு

                கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு சம்பளம் பெறும் கன்னியாஸ்திரிகள் வருமான வரி செலுத்த ஐகோர்ட் உத்தரவு

           'அரசு சம்பளம் பெறும் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் வருமான வரி செலுத்த வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு பிப். 10-இல் குடல் புழு நீக்க மருந்து

              அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பிப்வரி 10-இல் குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம்


            முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

வெற்றி பெறுவதின் மிக முக்கிய சூட்சுமம் :ரசித்துப் படியுங்கள்!

             பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தேர்வு என்றதும் பலருக்கும் இனம் புரியாத காய்ச்சல் ஒன்று எட்டிப்பார்க்கும். நன்றாக படிப்ப வர்களுக்கும் சேர்த்துதான். உண்மையில் அப்படி எல்லாம் ஒரு காய்ச்சல் இல்லவே இல்லை. எல்லாம் நாமாக கற்பிதம் செய்துகொள்வதுதான்.

ரத்த தானம் செய்வோம்!!!

பால் பவுடர் கலப்படத்தை எளிதாக கண்டறியும் முறையை கண்டுபிடித்த காந்திகிராம் பல்கலை!!

             பால் பவுடரில் கலப்படத்தை ரூ.5 செலவில், நுகர்வோரே நானோ தொழில் நுட்பத்தில் எளிதாக கண்டறியும் முறையை, காந்திகிராம பல்கலை கண்டுபிடித்துள்ளது. 

பி.எட்., - எம்.எட்., புதிய பாடத்திட்டம்

               பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடக்கிறது.

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி :மூன்று நாட்களுக்குள் முடிக்க உத்தரவு

                பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம் குறைக்கப்பட்டு உள்ளது. 'டாப்ஷீட்' உடன், விடைத்தாள் தைக்கும் பணி நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

"வாசிப்புத்திறன் மேம்பட, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும்" ?

                 மாணவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் தவிர, அவர்களின் வாசிப்பு திறன் மேம்பட அவர்களுக்கு, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டது.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் பணி.

              மேற்கு வங்க சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் நிரப்பப்பட உள்ள 488 Trained ANM பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வியியலில் முதன்மைத்தேவை; பாலியலா? அன்பியலா? அறிவியலா?


           இன்றைய வளர் இளம் பருவ மாணவர்களிடம் உள்ள சிக்கல், அவர்களது இனம் புரியா உணர்ச்சிக் கொந்தளிப்புதான். இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு ஒருதலைக் காதலாக, தன் அந்தரங்கத்தில் அடுத்தவர் தலையீட்டின் காரணமாக, கேலியின் விளைவாக, பதிலுக்குப் பதில் கொடுக்கும் ஆக்ரோஷமாக இருப்பதுதான் பெரும்பாலும் இளம் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடக் காரணமாக அமைகிறது.
 

மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்புப் பேரணியில் தமிழக தமிழாசிரியர் கழகம் பங்கேற்பு

Nfhhpf;iffs;:

1)   6tJ Cjpaf;FOtpy;, kj;jpa murpy; gzpGhpAk; Mrphpah;fSf;F toq;fg;gl;l Cjpak;, jkpof murpd; fy;tpj; Jiwapy; gzpGhpAk; ,ilepiy Mrphpah;fs,; rpwg;ghrphpah;fs,; KJfiy Mrphpah;fs;, cah;epiy kw;Wk; Nky;epiyg; gs;sp jiyikahrphpah;fSf;F toq;fg;gltpy;iy. mjdhy; kj;jpa muRf;F ,izahd Cjpaj;ij ,g;gphptpdh; midtUf;Fk; jkpof muR toq;fpl Ntz;Lk;.

டி.ஆர்.பி. சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம்!

               ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்கள் வசதிக்காக, நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு - டி.இ.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பின், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி., தேர்வையும் டி.ஆர்.பி. நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு!

            அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு


               தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.





UPPER PRIMARY CRC ON 14.02.2015 "ENVIRONMENTAL AWARENESS"

          அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று நடைபெறவுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தின குழு விளையாட்டு இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கி பாராட்டு.

           பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டு.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய கணக்கு எண் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரி உத்தரவு

          பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 01.04.2003 முதல் புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய கணக்கு எண் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரி உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

                   1807 முதுகலை ஆசிரியர்  பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி  நடைபெற்றது. இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள் விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர். இதையடுத்து 22.01.2015 அன்று அனைத்து பாடங்களுக்கு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் 29.01.2015க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட கேட்டுக் கொள்ளப்பட்டது. 


மாணவியரின் புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம்: பெண்கள் கண்ணீர் !

            சமூக வலைதளங்களில், படத்தை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, 'படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது' என்கின்றனர், போலீசார்.
 

போளூர் அருகே பள்ளி விடுதியில் ஈவ்டீசிங் கொடுமையால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

                போளூர் அருகே ஜம்னாமரத்தூர் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஈவ்டிசிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக பரபரப்பு கடிதம் சிக்கியது. திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அருகே அத்திபட்டு பகுதியில் புனித வளவனார் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 

கல்லூரிகளில் அழகி போட்டி:ஐகோர்ட் கடும் கண்டனம்

          'தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், அழகிப் போட்டி நடத்துவதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, தமிழக உயர்கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2012ம் ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு 3,589 பேர் தேர்வு

         கூட்டுறவு சங்கங்களில் 3,589 உதவியாளர் பணியிடங்களுக்கு 2012ம் ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் பொது தேர்வு விடைத்தாள் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை

          பிளஸ்2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொது தேர்வுகளில் விடைத்தாள் பயன்படுத்துவதில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் கொண்ட விடைத்தாள் மட்டுமே வழங்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது.  
 

1,078 போலீஸ் எஸ்ஐ தேர்வுக்கான அறிவிப்பு

            காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில்  1078 எஸ்ஐக்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.
 

பொதுத்தேர்வு விதியில் நீலகிரிக்கு விலக்கு? மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு

           'நீலகிரியில் பனிக்காலம் நீடிக்கும் என்பதால், பொதுத்தேர்வு அறைகளில், மாணவ, மாணவியர் காலணிகளை கழட்டி விட்டுச் செல்ல வேண்டும்' என்ற உத்தரவில் இருந்து, நீலகிரிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வித்திட்டம் மாற்றம் : 4 ஆண்டாகிறது மேல்நிலைக்கல்வி 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து?

              மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த போவதாக அறிவித்து இந்த மாற்றம் நடைபெற்று வருகின்றது.


வகுப்புக்கு வராமல் சினிமாவுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் இடைநீக்கம்

              தமிழ்நாடு முழுவதும் பிரபல நடிகர் நடித்த புதிய சினிமா வெளியிடப்பட்டது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து விட்டு, தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அவர்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளி சீருடை அணிந்து இருந்தனர்.


காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: ஆசிரியர் சட்டையை இழுத்து 10ம் வகுப்பு மாணவர் தகராறு

           விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லில் உள்ள எஸ்.ஆர்.அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த 30ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுககு சமூக அறிவியல் 'பாட திருப்புதல் தேர்வு' நடைபெற்றது. தேர்வின்போது 10ம் வகுப்பு 'ஏ' பிரிவைச் சேர்ந்த மாணவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கருகே அமர்ந்து இருந்த மற்றொரு மாணவரின் தேர்வுத்தாளை வாங்கி 'காப்பி' அடித்துள்ளார்.

பொதுத்தேர்வு விடைத்தாள் உறைகள் தயார்செய்தல் குறித்த அரசு அறிவுரைகள்

         மேல்நிலை/பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ,மார்ச் 2015-முதன்மை விடைத்தாட்கள் /முகப்புதாட்கள் -இணைத்து தைத்தல்-விடைத்தாள் உறைகள் தயார்செய்தல் குறித்த அரசு தேர்வுகள் துறை இயக்குனரின் அறிவுரைகள்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive