Half Yearly Exam 2024
Latest Updates
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
1807 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு
ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள்
விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர்.
இதையடுத்து 22.01.2015 அன்று அனைத்து பாடங்களுக்கு விடைக்குறிப்புகள்
வெளியிடப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் 29.01.2015க்குள் ஆசிரியர் தேர்வு
வாரியத்திடம் முறையிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாணவியரின் புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம்: பெண்கள் கண்ணீர் !
சமூக வலைதளங்களில், படத்தை பதிவு செய்துள்ள
பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள்
அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, 'படங்களை,
வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது' என்கின்றனர், போலீசார்.
போளூர் அருகே பள்ளி விடுதியில் ஈவ்டீசிங் கொடுமையால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
போளூர் அருகே ஜம்னாமரத்தூர் பள்ளி விடுதியில்
10ம் வகுப்பு மாணவி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈவ்டிசிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக பரபரப்பு கடிதம் சிக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அருகே அத்திபட்டு பகுதியில் புனித
வளவனார் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
வகுப்புக்கு வராமல் சினிமாவுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் இடைநீக்கம்
தமிழ்நாடு முழுவதும் பிரபல நடிகர் நடித்த புதிய
சினிமா வெளியிடப்பட்டது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி
மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து விட்டு, தாராபுரம்
ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அவர்கள்
தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது
அவர்கள் பள்ளி சீருடை அணிந்து இருந்தனர்.
காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: ஆசிரியர் சட்டையை இழுத்து 10ம் வகுப்பு மாணவர் தகராறு
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லில் உள்ள
எஸ்.ஆர்.அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த 30ம் தேதி, பத்தாம் வகுப்பு
மாணவர்களுககு சமூக அறிவியல் 'பாட திருப்புதல் தேர்வு' நடைபெற்றது.
தேர்வின்போது 10ம் வகுப்பு 'ஏ' பிரிவைச் சேர்ந்த மாணவர் கண்ணன் (பெயர்
மாற்றப்பட்டுள்ளது) தனக்கருகே அமர்ந்து இருந்த மற்றொரு மாணவரின்
தேர்வுத்தாளை வாங்கி 'காப்பி' அடித்துள்ளார்.
பொதுத்தேர்வு விடைத்தாள் உறைகள் தயார்செய்தல் குறித்த அரசு அறிவுரைகள்
மேல்நிலை/பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ,மார்ச் 2015-முதன்மை விடைத்தாட்கள் /முகப்புதாட்கள் -இணைத்து தைத்தல்-விடைத்தாள் உறைகள் தயார்செய்தல் குறித்த அரசு தேர்வுகள் துறை இயக்குனரின் அறிவுரைகள்
மது அருந்திய கரூர் மாணவனுக்குஅதிகாரிகள் குழு 'கவுன்சிலிங்'
மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி
மாணவனுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்
தலைமையிலான குழு கவுன்சிலிங் வழங்கி,
வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளது.
கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா?
கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா? Tamil Tamil The Hindu
வெட்கக்கேடு
என்று சொல்லிவிட்டு, ஒதுங்கிக்கொள்ள முடியாது யாராலும். நம் சமூகத்தின் கூட்டுக்
குற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசில்
தொடங்கி கடைசிக் குடிமக்கள் வரை பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும்!
ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்
செலவில்லாத மருந்து சிரிப்பு !
சிரிப்பு
என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை
முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த
பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத
மனிதர்கள் உலகில் இல்லை.
இவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாடநூல்களில்?
தமிழ்ச்
சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு
செய்வது ஒரு சுவாரசியமான வேலை.
நம் கல்வி முறையின் தரம்
எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு இது
மிகவும் அவசியமானது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக
அறிவியல் பாடநூல்களை இங்கு ஆய்வுக்கு எடுத்துக்
கொள்வோம்.
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click here for Provisional Merit Sponsor List (Other Department)
Teachers Recruitment Board
College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 |
பயோடெக்னாஜி துறையில் ஆராய்ச்சியாளர் பணி.
Plant Biotechnoligy துறையில்
காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்
நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில்
கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி.
தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Probationary
Assistant Manager பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘பலமொழிகளை கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’
காந்திகிராமம்: ’பலமொழிகளைக் கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’, என காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆங்கிலம், இந்தி போன்ற பிற மொழிகளை கற்பது சிரமம் என பலர் கருதுகின்றனர்.
பிற மொழிகளை எளிதில் கற்பது குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை
இணை பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் ஹமிதாபானு ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு; இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
‘பலமொழிகளை கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’
’பலமொழிகளைக் கற்றால் மூளையின் செயல்திறன்
அதிகரிக்கும்’, என காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆங்கிலம்,
இந்தி போன்ற பிற மொழிகளை கற்பது சிரமம் என பலர் கருதுகின்றனர். பிற மொழிகளை
எளிதில் கற்பது குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை இணை
பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் ஹமிதாபானு ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர்.
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டம் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ளது
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற
சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டம் வருகின்ற சனிக்கிழமை
7.2.2015 அன்று திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் RR
Community hall-க்கு எதிரே உள்ள VGS Meeting Hall இரண்டாவது தளத்தில் காலை
10.00 மணி அளவில் துவங்க உள்ளது. இக்கூட்டத்தில்
ஆசிரியப்பயிற்றுநர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. எனவே அனைத்து ஆசிரியப்பயிற்றுநர்களும் தவறாது கலந்து
கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.