Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை

           தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொழில்பயிற்சி டிப்ளமோ படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்

           தமிழகத்தில், வரும் கல்வி யாண்டில், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளில், தொழில் பயிற்சி டிப்ளமோ (வொகேஷனல் டிப்ளமோ) படிப்புகள் துவக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பழைய மின்மீட்டர்களுக்குபதிலாக புதிய டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்த அறிவுறுத்தல்

      மின்வாரியம் வெளியிட்டுள்ளதாவது, தமிழகத்தில் பழைய மின்மீட்டர்களுக்குபதிலாக புதிய டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தும் பணி நடக்கிறது. அதற்கு பொதுமக்கள் பணம் செலுத்த தேவையில்லை. 
 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இனி ஆய்வேடுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா


  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வேடுகளும், சமர்பிக்கப்படும் ஆய்வேடுகள் நகலெடுத்து பயன்படுத்தும் முயற்சியை தடுக்கும் வகையில், பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்படும் அனைத்து ஆய்வேடுகளும் சோத்சங்கா திட்டத்தின் மென்பொருள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.

லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை ரூ.35 கோடிக்கு மராட்டிய அரசு விலைக்கு வாங்கியது

         லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை மராட்டிய அரசு ரூ.35 கோடி ரூபாய்க்கு இன்று விலைக்கு வாங்கியுள்ளது. அம்பேத்கரின் பிறந்தநாளான வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் இந்த வீடு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது  

TNPSC: தமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு 28ம் தேதி நேர்காணல்

          தலைமைச் செயலக, தமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு, வரும் 28ம் தேதி நேர்காணல் நடக்கிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம்

            இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை, 251 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 23 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில், 7 ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக , பள்ளியின் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகின்றது.

வாரத்தில் 1 நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் இயங்கும் அரசு பள்ளி

            ராமநாதபுரத்தில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் அரசு பள்ளி இயங்குகிறது. ராமநாதபுரம், நொச்சிவயல் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஈராசிரியர் பணிபுரியும் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால், அங்குள்ள ரேஷன் கடையை வாரத்தில் 5 நாட்கள் பள்ளியாகவும், சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடையாகவும், டூ இன் ஒன் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்

               முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

பெங்களூரு : ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்: கல்வித்துறை அமைச்சர்

          கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

 

IEC சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர்

          மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தகவல்

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு ரேஷன்கார்டு: கேரள முதல்வர் உம்மன்சாண்டி நடவடிக்கை

         ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனை குடும்ப தலைவராக்கி ரேஷன் கார்டு வழங்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். திருச்சூரை சேர்ந்தவர் பிரேமச்சந்திரன். மனைவி ரஜனி. இவர்களுக்கு விசாக் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.
 

பன்றிக் காய்ச்சல் : 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடி பரிசோதனை அவசியம்

           இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையால் இருந்தால் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒகேனக்கல் பஸ் விபத்தால் தேர்வு எழுத முடியாமல் அழும் பிளஸ் 2 மாணவி: ஆறுதல் கூறிய அமைச்சர்கள்

            தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பேருந்து விபத்தில் சிக்கியதால் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளானதை எண்ணி கவலையில் இருந்த பிளஸ் 2 மாணவிக்கு அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.

TAMILNADU OPEN UNIVERSITY CY- 2015 B.ED Admission - V counselling will be conducted on 27-01-2015.

*Time Schedule:  Tamil medium- 9:00 a.m English medium- 11:00 a.m.

தமிழக பள்ளிகளில் கற்றல் திறன் - ACER Report

        ACER REPORT -2014 தமிழக பள்ளிகளில் கற்றல் திறன் (தமிழ்,ஆங்கிலம்,கணிதம்) - ஆய்வு அறிக்கை விவரம்

தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்

           தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது.

SSA - BRT பயிற்றுநர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

          அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டாய இடமாற்றம் செய்வதை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலையில் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!


           கோடைகாலத்தில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. இப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
 

வாட்சிம் கார்டு அறிமுகம்!

 

          150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம்

72 மணி நேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

       நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.

பள்ளிக்கல்வி செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

           விருதுநகரைச் சேர்ந்தவர் ராமநாத சேதுபதி. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘மதுரை அரும்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேர் படிக்கின்றனர். இங்கு 2010ல் 6, 7, 8ம் வகுப்புக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட் டது.
 

இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை

            தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி

         தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்குனர் கவனத்திற்கு பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க உத்தரவு

            கல்லூரிகள் வன்முறை களமாவதை தடுக்கும் விதமாக, அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

PGTRB TENTATIVE GOVT ANSWER KEYS PUBLISHED BY TRB

Soon Padasalai Will Publish All Suject Expected Cutoff

Direct Recruitment of Post Graduate Assistants/Physical Education Director Grade-I for the year 2013-2014 and 2014-2015
TENTATIVE KEY
TAMIL ENGLISH MATHEMATICS PHYSICS
CHEMISTRY BOTANY ZOOLOGY
HISTORY ECONOMICS COMMERCE
PHYSICAL EDUCATION

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேசிய திறனாய்வுத் தேர்வு

          எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு சனிக்கிழமை (ஜன. 24) நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்...!!

           தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.
 

அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்

       சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம்  சார்பில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், தொழிலாளர்கள் தங்களுடைய  நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள் ஏதேனும் இருந்தால் கூறலாம். 

பிளஸ்-2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன

            பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

Aided School FTG Regarding Instructions

       FTG - நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கான 2014ஆம் ஆண்டிற்கான கற்பித்தல் மற்றும் பள்ளி மானியம் விடுவித்தல் தொடர்பாக அறிவுரை வழங்கி இயக்ககம் உத்தரவு

தவறான வார்த்தை..! தடுமாறும் வெற்றி!!

              சொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது. பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஹீலர் பாஸ்கரின் ஒருநாள் கருத்ததரங்கம் சுருக்கமாக

           நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு

           அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ..எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive