Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'வகுப்பறைகளால் இணைவோம்!' - பள்ளிகளில் புது திட்டம்

           மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், கல்வி அறிவோடு, தொழில்நுட்ப அறிவை பெருக்கவும், மாநகராட்சி கல்வித்துறை மற்றும் 'அமெரிக்கன் பவுண்டேஷன்', 'டெல்' நிறுவனம் இணைந்து, 'மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வகுப்பறைகள்' திட்டத்தை விரைவில் துவங்க உள்ளன.

டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு

           தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.

"வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'

          வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் லதா பிள்ளை கூறினார்.

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை

           கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

           அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 தனித் தேர்வு: அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

         வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் மாணவர்கள் பாடத் திட்டத்தில் மாற்றம்

            பாலிடெக்னிக் மாணவர்களிடையே ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் வகையில் பாடத் திட்டத்தில் முழுமையான மாற்றத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் கொண்டு வருகிறது. வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு : முதலமைச்சர் மாநில இளைஞர் விருது

            தமிழகத்தில், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று “ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ இந்த ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்று ம் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாணவர்களுக்கு திருவள்ளுவர் கட்டுரை போட்டி

           நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இணையம் மூலம், திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என, மத்திய மனிதவள துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வழிமுறைகள் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

              எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் Bonus அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

           அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான கோப்புகளில் முதல்வர் இன்று கையொப்பமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?


           பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது. 


கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் சார்பான பணிமனை

மா.க.ஆ.ப.நி - கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் சார்பான பணிமனை 07.01.2015 முதல் 09.01.2015 வரை சென்னையில் நடக்கிறது

EMIS New Login Page Under maintenance!

              EMIS New Login Page துவங்கப்பட்டுள்ளது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பாடசாலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். தற்போது தொழில்நுட்ப காரணங்களுக்காக (Server Backup) ஒரு சில நாட்கள் இந்த தற்காலிக வலைதள செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இப்புதிய வலைதள செயல்பாடு துவங்கியவுடன் பாடசாலை வாசகர்களுக்கு உடனடியாக அறிவிப்போம். 

2012ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் !!!

               தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று 17- டிசம்பர் 2012 ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு 16.12.2014  அன்று இரண்டாண்டுகள் பணிநிறைவு செய்துள்ளார்கள், ஆனால் அவர்களின் 10-12ம் வகுப்பிற்கான உண்மை தன்மை சான்றுகள் இன்னும் வரவில்லை என்று ௯றி சில ஒன்றியங்களில் முன்னுரிமை பட்டியலில் பதவி உயர்வுக்கு பெயர் சேர்க்க முடியாது என மறுக்கப்படுவதாக தெரிகிறது.

அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயம்: 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு உத்தரவு

      பெங்களூரு: 'அரசுத் துறைகளில், 50 வயதிற்கு உட்பட்ட, 'சி' பிரிவு ஊழியர்கள் அனைவரும், கம்ப்யூட்டர் கல்வி கற்பது அவசியம்' என, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு நிர்வாகத்திலுள்ள துறைகள், கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இதனால், 'சி' குரூப் ஊழியர்களில், 50 வயதுக்குட்பட்டவர்கள், கண்டிப்பாக கம்ப்யூட்டர் கல்வி கற்க வேண்டும் என, கடந்த 2ம் தேதி, அரசு உத்தரவிட்டு உள்ளது.

பாடம் நடத்தாமல் அரட்டை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்': கடலூர் சி.இ.ஓ., அதிரடி உத்தரவு


          பள்ளிக்கு வந்தும், பாடம் நடத்தாமல் பொழுதை ஓட்டிய பட்டதாரி ஆசிரியரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உத்தரவிட்டார்.


பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அமலாகுமா? அரசு ஒப்புதல் அளிக்காததால் குழப்பம்

            பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர் களிடம் ஏற்பட்டு உள்ளது.

Panel தயாரித்து அனுப்ப இணை இயக்குனர் உத்தரவு

         தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதிவாய்ந்த இடை நிலை / உடற்கல்வி / சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்ப இணை இயக்குனர் உத்தரவு

பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல்

             அரசுக் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுப்  பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 (ஏ) அடிப்படையில் அரசுப் பணி நியமனம் என்ற விதி செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

              வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி  நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டும் பணி நியமனம் செல்லாது

              வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1.50 லட்சம் அனுமதிச் சீட்டுகள் பதிவிறக்கம்

              முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர் நியமனம் பாதியாக குறைப்பு

          தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 797 புதிய பாடங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. இந்த நிலையில் தற்போது (2014-15ம் கல்வியாண்டு) மேலும் 163 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு; சேலத்தில் 10,492 பேர் பங்கேற்பு

            ஜனவரி, 10ம் தேதி நடக்கவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான, டி.ஆர்.பி., தேர்வில், சேலம் மாவட்டத்தில், 10 ஆயிரத்து, 492 பேர் தேர்வெழுத உள்ளனர். இதற்காக, 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து அனுமதிச் சீட்டுகள் வழங்குவது சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

            தொடக்கக் கல்வி - 2015-16ம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து அனுமதிச் சீட்டுகள் வழங்குவது சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?


              வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன் படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர்.
 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத போகும் நண்பர்களே... இதை படிங்க முதலில்...

1. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உடனே உங்கள் ஹால் டிக்கெட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். 
இது கடைசி நேர பரபரப்பு மற்றும் பதட்டத்தை குறைக்கும்.
2. தேர்வுக்கு நீல நிற அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2012-13-ல் நடத்தப்பட்ட TET பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

               2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

பள்ளி நாட்களில் பல்கலை தொலைநிலைத் தேர்வுகள்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

             மதுரையில் பல்கலைகளின் தொலைநிலைத் தேர்வுகள் பள்ளி நாட்களில் நடத்தப்படுவதால், வழக்கமான வகுப்புகள் நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழு

        நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழுக்களை அமைக்க அரசு உத்தரவு

மாநிலங்களிடம் உதவி கோருகிறது மத்திய அரசு

        பிரதமர் மோடி அறிவித்த, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளிடம், மத்திய அரசு உதவி கோரியுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை துறை அலுவலர்களாக நியமிக்க தேர்வுத்துறை நடவடிக்கை தேவை

                 அரசுத் தேர்வுத்துறை தேர்வு மையங்களில் துறை அலுவலர்கள் நியமிப்பதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதில் வஞ்சனை செய்து வருகிறது. இனி வரும் காலங்களில் துறை அலுவலர்களாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive