Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் பணி மாற்றம்! - TELTA
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோருக்கு (SET,NET kw;Wk; Ph.D) கல்லூரிக் கல்வித் துறைக்குப் பணிமாற்றம் செய்ய TELTA-(Tamilnadu English Language Teachers Association) மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தகுதியான ஆசிரியர்கள் நமது பாடசாலை இணையதளத்தில் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கீழ்கண்ட தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள RTI தகவல்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் - RTI
பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையில் பணி.
நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், மேலாளர்
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
880 உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்: ஓரிரு நாள்களில் அறிவிக்கை வெளியீடு
தமிழகத்தில் காலியாகவுள்ள 880-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் ஆசிரியர் பணி.
இந்திய ராணுவ கல்விப் பிரிவில் அறிவியல் மற்றும் கலை பிரிவு
பட்டதாரிகளிடமிருந்து ஹவில்தாராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள
ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு?
2014-15ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 03.01.2015 சனிக்கிழமையன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க கோரி உண்ணாவிரதம் போராட்டம்
தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம்: தமிழ் ஆசிரியர் கழகம் அறிவிப்பு
காத்திருக்கும் 4ஜி சூறாவளி
2 ஜியை விட 3 ஜியைப் பெரிய விஷயமாகக் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்குள் 4 ஜி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ஆரம்பமாகிவிட்டன. அநேகமாக எல்லா ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுமே 4 ஜி போன்களுக்கான திட்டத்தை வைத்திருக்கின்றன. மைக்ரோசாப்டின் லூமியா 638 போன் 4 ஜி வசதி கொண்டதாக அறிமுகமாகி உள்ளது.
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம்: டிசம்பருக்குள் பணி நிறைவடையும்
மதுரையில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கட்டுமானப் பணிகள் 2015 டிசம்பருக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி., போட்டித்தேர்வுகல்வி அதிகாரிகள் ஆலோசனை
மதுரையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப 'டிவி'களுக்கு தடை
'பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு
எதிரான பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, 'டிவி'கள் நேரடியாக ஒளிபரப்பக்
கூடாது' என, தகவல், ஒலிபரப்பு துறையிடம், மத்திய உள்துறை அமைச்சகம்
கேட்டுக் கொண்டுள்ளது.தகவல், ஒளிபரப்பு
துறைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தேவையான சட்ட
திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கான, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க
வேண்டும்' என, தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்
புவனேஷ்வர்: மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது: