Half Yearly Exam 2024
Latest Updates
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு?
2014-15ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 03.01.2015 சனிக்கிழமையன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க கோரி உண்ணாவிரதம் போராட்டம்
தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம்: தமிழ் ஆசிரியர் கழகம் அறிவிப்பு
காத்திருக்கும் 4ஜி சூறாவளி
2 ஜியை விட 3 ஜியைப் பெரிய விஷயமாகக் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்குள் 4 ஜி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ஆரம்பமாகிவிட்டன. அநேகமாக எல்லா ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுமே 4 ஜி போன்களுக்கான திட்டத்தை வைத்திருக்கின்றன. மைக்ரோசாப்டின் லூமியா 638 போன் 4 ஜி வசதி கொண்டதாக அறிமுகமாகி உள்ளது.
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம்: டிசம்பருக்குள் பணி நிறைவடையும்
மதுரையில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கட்டுமானப் பணிகள் 2015 டிசம்பருக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி., போட்டித்தேர்வுகல்வி அதிகாரிகள் ஆலோசனை
மதுரையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப 'டிவி'களுக்கு தடை
'பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு
எதிரான பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, 'டிவி'கள் நேரடியாக ஒளிபரப்பக்
கூடாது' என, தகவல், ஒலிபரப்பு துறையிடம், மத்திய உள்துறை அமைச்சகம்
கேட்டுக் கொண்டுள்ளது.தகவல், ஒளிபரப்பு
துறைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தேவையான சட்ட
திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கான, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க
வேண்டும்' என, தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்
புவனேஷ்வர்: மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது:
Latest 12th Study Material | Chemistry - English Medium
- Chemistry - 3,5,10 Mark Study Material | Mr. S.Prabakar - English Medium
மாணவியர் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் !
கர்நாடகா
மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும்
அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித்
துறை திட்டமிட்டு உள்ளது. மாணவியரின்
பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில்,
கண்காணிப்பு கேமரா பொருத்த, 60 கோடி
ரூபாய் வழங்கும்படி, கல்வித் துறை, கர்நாடகா
அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 -18 வயது குழந்தைகள் வயது என அறிவிக்க வேண்டும்
குழந்தைகளுக்கான
வயது வரம்பை 14ல் இருந்து 18 ஆக
உயர்த்தும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில்
திருத்தம் வேண்டும் என குழந்தை உழைப்பு
எதிர்ப்பு பிரசார இயக்கம் வலியுறுத்தி
உள்ளது.
பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்
இன்சூரன்ஸ்
பாலிசி யின் முதிர்வு தொகை
பெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர் சேவைப்
பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின்
அடிப்படையில், பாலிசி முதிர்வு குறித்த
தகவல்கள், மூன்று அல்லது ஆறு
மாதங்களுக்கு முன்பே, கடிதம்,
பதிவுத் தபால், மெயில் மூலமாக,
பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும்.
கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்
பாலாஜியுடன், போக்குவரத்து
கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்
சுமூகமான முடிவு
எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப்
பெறப்பட்டுள்ளது. இதனால்,
கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து
இல்லாமல் அவதிப்பட்டு
வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை
போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என, தனி
நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற 'டிவிஷன் பெஞ்ச்' தடை
விதித்துள்ளது.
வணிகவரி துறை உட்பட 18 துறைகளுக்கு உதவி அதிகாரி பதவிகள்: குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது
குரூப்-2 எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நேற்று முதல் தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில்
வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 27-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு.
சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015-16ம் கல்வியாண்டில் எம்.டி, எம்.எஸ்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
"சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல"!!!
சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல; ஆர்வம், முயற்சி, கடின உழைப்புகளே
தேவை என, கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலையின் கணித ஆய்வாளர் ராமமூர்த்தி
பேசினார்.