Half Yearly Exam 2024
Latest Updates
பாஸ்போர்ட்தாரர்களுக்கு சென்னையில் 27ம் தேதி சிறப்பு முகாம்
கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி
நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27ம்
தேதி நடக்கிறது. கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட
புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம் 24ம் தேதி
முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
181 வனப் பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமனம்
தமிழக அரசின்
வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள தாக
மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
Computer Instructor Recruitment - CV Regarding
ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?
☉புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
அ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?
Dial *99*99# from your Mobile handset
சமையல்
காஸ் மானியம் பெற, வங்கிக்
கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய,
பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம்
செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள்
மட்டுமே பயன்படுத்த முடியும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரதரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய
ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர்.
மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் அவர்
தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே போல் கல்வியாளர் மதன் மோகன் மால்வியாவுகும்
பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை குறிப்பு - பள்ளி ஆசிரியராக வாழ்கையை தொடங்கியவர்
விதியோடு நான் ஆடும் விளையாட்டை பாரு!
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால்,
நேற்று காலமானார். சில மாதங்களுக்கு முன், அவர் மகன் கைலாசம் இறந்தார்.
இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து நாட்களுக்கு
முன், காய்ச்சல், மூச்சுத்திணறலால் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொலைதூர கல்வி மையங்கள் படிப்படியாக மூட நடவடிக்கை - யுஜிசி துணைத்தலைவர் தகவல்
திருச்சி பாரதிதாசன் பல்கலை. 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், 606 பேருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பட்டம் வழங்கினார். இந்த
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 72,720 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்
வழங்கப்பட்டது. விழாவில், டெல்லி பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (யுஜிசி)
துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் பேசியதாவது:
அண்ணா பல்கலை.யில் இலவச 6 மாத கால குளிர்சாதனப் பெட்டி தொழில் நுட்ப பயிற்சி
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி
தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும், சென்னை தெற்கு
ரோட்டரி சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக
வழங்கும் இந்த இலவசப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு
படித்திருக்க வேண்டும்.
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை
சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங்
பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில்
60 முதல் 90 இடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேவை காரணமாக சென்னை, மதுரை
உள்ளிட்ட நர்சிங் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலான
மாணவிகள் சேர்க்கப்பட்டு வந்தனர்.