Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கற்றல் குறைபாடுக்கு சலுகை தீர்வாகுமா? துவக்கநிலை பயிற்சி அவசியம்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ஏற்படும், 'டிஸ்லெக்சியா' பாதிப்புக்கு, பொதுத்தேர்வின் போது சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

SSLC தனித்தேர்வு: அக். 29- முதல் விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.

10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு புதிய மையங்கள்: அக்.,30க்குள் பரிந்துரை : டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு கல்விமாவட்ட வாரியாக புதிதாக மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரையை அக்.,30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு(டி.இ.ஓ.,) அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

'வண்ண வாக்காளர் அடையாள அட்டை எல்லோருக்கும் கிடைக்குமா' : தேர்தல் அதிகாரி பதில்

'எல்லா வாக்காளர்களுக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுமா' என்ற அரசியல் கட்சிகளின் கேள்விக்கு, தேர்தல் அதிகாரி பதிலளித்தார். மதுரை

வேலையை தேர்வு செய்வது எப்படி

தற்போதுள்ள இளைஞர்கள் குறைந்தபட்ச அடிப்படை கல்வியை முடித்தவர்களாகவே உள்ளனர். வேலை எந்தளவு பெருகியுள்ளதோ, அதே அளவிற்கு போட்டியும் பெருகிவிட்டது.

மானியத்துடன் சோலார் மோட்டார் திட்டம்

மத்திய, மாநில அரசுகளின், 80 சதவீத மானியத்துடன், 'சோலார்' சக்தியில் இயங்கும் மோட்டார் பொருத்தும் திட்டத்துக்கான ஆய்வு பணியில் தாமதம் ஏற்படுவதால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு

               அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது. 
 

பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

              பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை,  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 'இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி, பிளஸ் 2 படிப்பிற்கு நிகரானது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

             அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
                         செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பிற்பகல் 2 மணி முதல் அவர்கள் தேர்வு எழுதிய, தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.

மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு

 
           மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள்...

Chennai Adi Dravida Welfare Schools

List of Adi Dravida Welfare Higher Secondary Schools in Chennai

School Code Name Of School With Address

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள்...


LIST OF SCHOOL IN TIRUNELVELI DISTRICT

Sl.No Name of the School and Address Pri/Mdl/H.S/HSS Type of School Boys/Girls Co-Edn
1 Dr. Ambedkar Boys (ADW) Hr.Sec. School, Nallammalpuram Hr.Sec School Boys
2 Govt. (ADW) Girls Hr.Sec. School, Nallammalpuram Hr.Sec School Girls

தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக - தகவல்

          நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்

              தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.


கால்நடைத்துறையில் ஆய்வாளர் காலியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை.

          விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கால்நடை ஆய்வாளர் கிரேடு-2 பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.     இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துணை இயக்குநரால் (பணியாளர்) கால்நடை ஆய்வாளர் கிரேடு-2 பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

PG - இரு ஊக்க ஊதியம் - பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

           பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

Cell Phone: G.P.U

        கிராபிக்ஸ் பிராசஸிங் யுனிட் என்று பொருள்படும் ஜி.பி.யுக்களானது கம்பியுட்டா் மற்றும் செல்போன்களின் வீடியோ மற்றும் கேம்களை இயக்கும் பகுதியாகும். (கம்பியுட்டா்களின் கிராபிக்ஸ் கார்டும் ஒரு வகை ஜி.பி.யுவே ஆகும்). சி.பி.யு (சென்ட்ரல் பிராசஸிங் யுனிட்கள்) எனப்படும் பிராசசா்கள் (சுத்திகள்) போனின் அனைத்து கட்டளைகளையும்  இயக்க  வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

கனமழை - உரிய நடவடிக்கை மேற்கொள்ள DEEO / AEEO தலைமையிடத்தில் தங்கியிருக்க உத்தரவு.

          தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

               பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளதுஇது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெருகிவரும் குழந்தைக் கடத்தல்கள்:

ஆண்டொன்றுக்கு காணாமல் போகும் 45 ஆயிரம் பேர் - கோடிகளில் புரளும் வியாபாரம் 

              குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்து போலீஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங் களிலும் காணாமல் போன சிறுவர், சிறுமியர்களின் புகைப்பட விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாவதை பார்த்தாலே இதன் தீவிரம் புரியும். ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 44,475 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிப்பு

           விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல்

              தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் 652 தொழிற்கல்வி பயிற்றுநர் (கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்) காலி பணியிடத்திற்கு, மாநில அளவில் பரிந்துரை செய்திடும் பொருட்டு உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

பின்தங்கிய மாணவர்களுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம் எப்போது துவங்கும்?

          உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறைந்தபட்ச பாடத் திட்டங்களை மட்டுமே நடத்தி தேர்ச்சியடைய செய்வதற்கான, பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம், நடப்பாண்டு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'மெட்ராஸ் ஐ' - கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்படி?

அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்

        மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்த பலர் சிகிச்சை பெற்று செல்வதை காண முடிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்க கூடியது.

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

          கொள்முதல் விலை உயர்வு காரணமாக சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய்உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

10th Latest Study Material

Social Science Study Material (10th Std)
  • SS-Geography Maps Learning For Slow Learners - Tamil Medium


CCE Study Material For 4th Standard

CCE Powerpoint Study Material:
  • 4th Standard - Social Science - தேசிய சின்னங்கள் - Tamil Medium

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை

             அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்:

             கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிகளில் 2753 ஆசிரியர்கள் உள்ளனர். 

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்

              முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி   நிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.

TET சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு

            ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை இல்லை : தொடர்ந்து லீவு அறிவித்ததன் எதிரொலி

    கன மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய, இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive