மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில் நடக்கும் 'நெட்' தேர்வுக்கு
விண்ணப்பிக்க, நவ., ௧௫ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்லூரி,
பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை
இதுவரை யு.ஜி.சி., (பல்கலை மானியக் குழு) நடத்தி வந்தது. இந்நிலையில்,
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) இத்தேர்வை முதல்முறையாக
வரும் டிச., மாதம் நடத்துகிறது. ஆண்டுக்கு இருமுறை, இத்தேர்வு
சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்டவுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம்-
இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.
ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.
புதுச்சேரி: துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு
சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
இதுகுறித்து கல்வித்துறை இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல்
இருந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர், மிகமிக
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினருக்கான 19
தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஊனமுற்றோர்க்கான 5 துவக்கப்
பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்
அறிவிப்பு செய்யப்பட்டது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலவைசாதம் வழங்க போதிய தொகை இல்லை?
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்க, அரசு 70 பைசா மட்டுமே
ஒதுக்குகிறது. குறைந்தது ரூ.5 தந்தால் மட்டுமே காய்கறிகள் வாங்க முடியும்
என, அங்கன்வாடி பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.
அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு செப்., முதல் கலவை சாதம்
வழங்குகின்றனர்.
Pay Continue Order
தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை
சென்னையில் ஆய்வு கூட்டம்
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு
சென்னை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக
அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.வேலூரில்
உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை
கல்வி அதிகாரி அனிதா, சென்னை
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக
நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி
ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி
அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
Rainy News: கனமழை காரணமாக விடுமுறை
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.
தொடக்கக்
கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி
அலுவலர் மற்றும் தொடக்க கல்வி
அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய
2ம் கட்ட கலந்தாய்வு நாளை
சென்னையில் நடைபெறுகிறது.
CTET: தமிழகத்திலிருந்து 89 பேர் மட்டுமே தேர்ச்சி
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில்
இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க
ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை
ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள்!!
தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10
ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்த்து 5 லட்சத்து 8 ஆயிரம்
ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தகுதியான
தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட,
தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்- -- லைனில் பதிவு செய்யவேண்டும் என,
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஓய்வூதிய நிதி யாருக்காக ?
புதிய ஓய்வூதிய
திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு
ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன்
தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம்
20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது.
DTEd = +2 அரசாணை
பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு
விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை,
வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணை
ஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை
கிளையில் தாக்கல் செய்த மனு:
5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில் 3 லட்சம் விண்ணப்பம்!!!
தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப்
பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3
லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவில் உள்ள குறைகளை சரிசெய்ய வாய்ப்பு!!தேனி மாவட்டம்.
இணையத்தில் ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்ததில் ஏற்பட்ட குறைகளை
சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது பதிவு மற்றும்
புதுப்பித்தல் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை அவர்களே இணையதளத்தில் பதிவேற்றம்
செய்து கொள்ளவும், பதிவினை புதுப்பித்து கொள்ளவும் உரிய வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவுதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள பதிவு
விவரங்களில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரியவருகிறது.