Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சாதிப்பதற்கு படிப்பு முக்கியமல்ல: மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை

            சரியாகப் படிக்கவில்லையென்றாலும் முடியும் என நினைத்தால் சாதிக்கலாம் என்று சந்திராயன், மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். மயில்சாமி அண்ணாதுரை பேசியது: 5 முறை முயன்று அமெரிக்காவும், 15 முறை முயன்று ரஷியாவும் சாதித்த விஷயத்தை நாம் முதல் முறையிலேயே சாதித்துள்ளோம். ஜப்பான், சீனா ஒரு முறை கூட சாதிக்காததை நாம் சாதித்துள்ளோம்.

அரசு பணியில் சேர டாக்டர்கள் ஆர்வம்:போட்டி தேர்வில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு

            மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு உதவி டாக்டர் பணிக்கான போட்டித் தேர்வில், 90 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176 உதவி டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான போட்டித் தேர்வுக்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், செப்., 28ம் தேதி போட்டித் தேர்வை அறிவித்திருந்தது.

வேலை நாட்களில் ஆசிரியர்கள்இயக்குனரகத்திற்கு வர தடை

            ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதென தகவல்


           ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில்  60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.


அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு.

       அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கான பரிந்துரை பட்டியலைதகுதியுள்ள பதிவுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

          தமிழகத்தில் 300 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விரைவில்...குறைகிறது: கச்சா எண்ணெய் சந்தை கடும் வீழ்ச்சி

          சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளதாலும், தங்களிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு, ஈரானும், சவுதி அரேபியாவும், போட்டி போட்டு தள்ளுபடி அறிவித்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை விரைவில் கணிசமாக குறைக்கப்பட உள்ளது.
 

விவரம் வழங்காத 310 தமிழக கல்லூரிகள் : பட்டியலை வெளியிட்டது ஏ.ஐ.சி.டி.இ.,

           அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவுறுத்தல்படி, விவரங்களை பதிவேற்றம் செய்யாத, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.

5,770 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடி மானிய நிதி

             தமிழகத்தில், 5,770 அரசு பள்ளிகளுக்கு ஆர்.எம். எஸ்.ஏ.,திட்டத்தில் ரூ.3.கோடிக்கான மானிய நிதியை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

TNPSC: Group 4 - 4வது கட்ட கலந்தாய்வு!

          இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடத்தப்பட்டது. இதில், இளநிலை உதவியாளர் பணிக்கான 4-வது கட்ட கலந்தாய்வு, தட்டச்சர் பணிக்கான 3-வது கட்ட கலந்தாய்வு, சுரு         க்கெழுத்தர் பணிக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகியவை அக்டோபர் 29-ம் தேதி தொடங்குகிறது.

3 ஆயிரம் வி.ஏ.ஓ., காலி பணியிடம் : மாநில பொதுச்செயலாளர் தகவல்

          ''தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., காலி பணியிடங்கள் உள்ளது,'' என கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் கூறினார். 

தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை

          தமிழகத்தில் 300 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. 
 

அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு

            அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கான பரிந்துரை பட்டியலை தகுதியுள்ள பதிவுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு

         இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை, சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு 

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிலையத்தில் பணி

          கோவாவிலில் செயல்பட்டு வரும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விரைவில் வீடு தேடி வருகிறது 'இன்டர்நெட்' : கேபிள் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை

         வீடுகள் தோறும் வழங்கியுள்ள, கேபிள் 'டிவி' இணைப்போடு, இன்டர்நெட் இணைப்பையும் சேர்த்து வழங்கும் திட்டத்தை விரைவில், அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, கேபிள் ஆபரேட்டர்களுக்கான, சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
 

ஐ.ஓ.எஸ்.8.1 அப்டேட் பைலை வாபஸ் பெற்றது ஆப்பிள்.

 
       மொபைல் சாதனங்களுக்கான தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐ.ஓ.எஸ்.8, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அடுத்து ஒரு வாரத்தில் இதற்கான அப்டேட் பைல் ஒன்றை ஐ.ஓ.எஸ்.8.1 என்ற பெயரில் தன் சர்வர் வழியாக வழங்கியது. ஆனால், தொடர்ந்து வந்த பலவிதபுகார்களை அடுத்து, ஏறத்தாழ 90 நிமிடங்களில், அப்டேட் பைலை வாபஸ் பெற்றது.

இணையதள வசதி இந்திய கிராமங்களில் இலவசம்: வழங்க முன்வருகிறார் பேஸ்புக் தலைவர்

        இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்

  • பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டை காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன்.
         பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டை   காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன்.

TET பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.) இருந்து விலக்கு அளிக்கப்பட்டும் தகுதிகாண் பருவம் மற்றும் பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிக்கின்றனர். தமிழகத்தில் 2010 முதல் டி.இ.டி., தேர்வு நடைமுறையில் உள்ளது.

எம்.பில்., ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் : குழப்பத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்

           தமிழகத்தில் எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் அதற்கான ஊக்க தொகை பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதற்கான அதிகாரம் தலைமையாசிரியருக்கு உள்ளதா அல்லது இணை இயக்குனருக்கு உள்ளதா என்ற குழப்பம் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
 

அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி

      தமிழக அரசு அறிவித்துள்ள 7 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு தலைமைச் செயலக சங்கம் உள்பட அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளனஇதுகுறித்து தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர்
பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் by எம்.டி.விஜயலட்சுமி,

                                                Shy Beggar Girl
   
         'வந்தாள் மகாலட்சுமியேஇனி என்றும் அவள் ஆட்சியே...' என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.  
 

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்: தாகூர் முதல் கைலாஷ் வரை

இந்தியக் குடிமக்கள்

       மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றவர் பட்டியல் வெளியீடு

           அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 

அமைதிக்கான பரிசு: இந்தியாவின் கைலாஷ், பாகிஸ்தானின் மலாலாவுக்கு நோபல்

          இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசஃப்சாய் ஆகியோருக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி - மலாலா


மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தாற்காலிக விரிவுரையாளர் பணி: 13 இல் நேர்முகத் தேர்வு

            திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக விரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

TET Article: TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல

          TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
 

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை

 
       எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். 



தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 7% உயர்த்திட அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
         "மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது தமிழக அரசு வழங்கிவந்துள்ளது.

Flash News:DA 7% Announced

ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கான 7% அகவிலைப் படியினை அறிவித்தது தமிழக அரசு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive