Half Yearly Exam 2024
Latest Updates
உயர்நீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரிய TATA தொடர்ந்த வழக்கில் 8 வாரத்தில் மனுதாரரின் மனு மீது தமிழக அரசின் நிதித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு
GO.MS.NO.882 PUBLIC DEPT DATED. 01.10.2014 - Holiday for BAKRID ON 6th Oct 14 - Change in the Date of Observance of the Festival Revised Order Click Here...
பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ல் கொண்டாடப்படுவதையொட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அனுசரிக்கப்படும்.TET posting - TNTET யில் தேர்ச்சிபெற்று பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ?
உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
அக்டோபர் 9 - துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
அக்டோபர் 9ம் தேதி அனைத்து பள்ளிகளிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
DEE - CLEANLINESS REG INSTRUCTIONS CLICK HERE...
Free Coaching For NET Exam
மதுரை காமராஜ் பல்கலையில் யு.ஜி.சி., உதவியுடன் எஸ்.சி., எஸ்.டி.,
ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 'நெட்' தகுதி தேர்வு இலவச
பயிற்சி அக்.,4 முதல் டிச.,21 வரை ஒவ்வொரு சனி, ஞாயிறில்
நடக்கிறது.டிச.,28ல் தேர்வை எழுத தயாராகும் மாணவர்கள் இதில் பங்கேற்க லாம்.
மருத்துவக் கலந்தாய்வில் முறைகேடு: 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
புதுச்சேரியில் "சென்டாக்' மருத்துவ மாணவர் சேர்க்கையில்
போலிச் சான்றிதழ்கள் அளித்தது தொடர்பாக வில்லியனூரைச் சேர்ந்த 3 வருவாய்த்
துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம், சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
சுய சான்றளிப்பு -ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின்
கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம்
பெறும் முறையைக் கைவிடுமாறும், மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண
நகல்களைப் பெறுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
உத்தரவிட்டுள்ளது.
Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை.
Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம்
இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து
கொள்ளலாம்.
வனவர்கள், வனக் காப்பாளர்கள் 609 பேர் விரைவில் நியமனம்
வனத்துறை பணியாளர்கள் தேர்வுக்கு புதிய வாரியம்: வனவர்கள், வனக் காப்பாளர்கள் 609 பேர் விரைவில் நியமனம். வனத்துறை ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற பெயரில் புதிய தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் 609 வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில், கோவை மாவட்டத்திலுள்ள மூலத்துறை அரசுப் பள்ளி மாணவன் முதலிடம்
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய "திசையெல்லாம் திருக்குறள்" என்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் செ.லோகேஸ்வரன் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.
படித்து பட்டம் பெற்றாலும் திறமையும், தகுதியும் தேவை!
வேலைவாய்ப்பு
தேடி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, தமிழகம் மட்டும் அல்ல;
நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. தாங்கள் படித்த கல்விக்கு
ஏற்ப, வருமான அளவை எதிர்பார்த்து
காத்திருக்கும் இவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.
1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்
அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி
கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள
உத்தரவில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 30ம் தேதி எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். காலி இடங்களுக்கான கலந்தாய்வு
தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு இரண்டு கட்ட மாக
கலந்தாய்வு முடிந்து, இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில்
ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம் - மீண்டும் தொடங்கப்படுமா?
எந்தவித அறிவிப்புமின்றி, மாணவர்களின் அறிவை
வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம், பள்ளிகளில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் கலைச் சொற்கள், கோட்பாடுகள்,
அறிஞர்களது கண்டுபிடிப்புகள் குறித்து, தமிழ் மொழியில், எளிய சொற்களின்
பயன்பாட்டில் அறிவதற்காக, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இது, கடந்த இரு ஆண்டுகளாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அலட்சியத்தால் பள்ளிகளில் நீக்கப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்!
தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்
பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல
பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன. பிளஸ் 1 மற்றும்
பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த
தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. துவக்கத்தில், ஆறு பிரிவுகளில் 66
உட்பிரிவுகளை கொண்டிருந்த தொழிற்கல்வி, தற்போது 12 உட்பிரிவுகளாக
குறைந்துள்ளது.
பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!
மத்திய
அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ்,
பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை
சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய
மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில்
"ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
How to Read Tamil Font Documents in Android Phone & Tablets? - Padasalai's Special Tutorial Soon...
Android Smart Phone மற்றும் Tablet கணிணி சாதனங்களில் வானவில் அவ்வையார், சன் டாமி, போன்ற தமிழ் எழுத்துரு (Tamil Fonts) கொண்ட Word Document & Excel Worksheet-களை படிப்பது எப்படி?
வேலை வேண்டுமா?- ஓ.என்.ஜி.சியில் காலியிடங்கள்!!
ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ட்ரெய்னி இன்ஜினீயர் பணிக்கான பொறியியல் பட்டதாரிகள்
கேட் (GATE 2015) தேர்வு வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிப்பதற்கான காலம் அக்டோபர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!!
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை
மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம்
விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்.
இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் வழங்கப்படாமைக்கான விவரத்தை அளிக்க இயக்குனர் உத்தரவு
புதிய முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ. பன்னீர் செல்வம்; 30 அமைச்சர்களும் பதவியேற்பு!
ஆளுநர்
மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி
பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்
செய்து வைத்தார். அப்போது
ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர்
மல்க நா தழுதழுக்க, கண்கள்
கலங்க உறுதி மொழி ஏற்றுக்கொண் டார். அவருக்கு
கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்..
தேர்வுக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்..
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2002 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இப்போது, காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.
DEPARTMENTAL EXAM-2014 DECEMBER-ONLINE APPLY
S No. | Advt. No./ Date of Notification | Notification | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
1 |
01.09.2014
|
Deptl.Exam Dec'2014
| 01.09.2014 | 30.09.2014 |
23.12.2014
to
31.12.2014 | Apply Onlin |