Half Yearly Exam 2024
Latest Updates
652 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான GO Available Now.
652 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104
Short Film: மை டியர் அமெரிக்கன்ஸ்
மை டியர் அமெரிக்கன்ஸ்: குறும்படம்
அமெரிக்க இந்தியனின் அடையாளம் - Click Here For Youtube View
"ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர் இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல் வெளியீடு
டிஎன் பிஎஸ்சி நடத்திய சார்நிலைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தெரிவு பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முடங்கிய முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி., திடீர் சுறுசுறுப்பு
கடந்த, 2011, 12, 13ம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடந்து, இறுதி முடிவு வெளிவராமல் முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக,
தற்போது, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு
வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., கடந்த காலங்களில், நடத்திய பல்வேறு
தேர்வுகளின் முடிவை வெளியிடாமல், அப்படியே கிடப்பில் போட்டு இருந்தது.
வழக்குகள் உள்ளிட்ட, பல பிரச்னைகள் காரணமாக, இறுதி முடிவுகளை
வெளியிடுவதில், ஆண்டுக்கணக்கில் இழுபறி ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட(CPS) எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு
புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்.
சென்னையில்
பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும்
அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி
உட்பட பல்வேறு துறைகள் இணைந்து,
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த
கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு: மத்திய அரசின் மனு தள்ளுபடி
அரசு பணிகளில், பதவி உயர்வின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
Bharathidasan University MEd Entrance Result Published
Bharathidasan University MEd Entrance Result 2014 (CDE) Provisional Selected Candidates List Published in www.TrbTnpsc.com.
Click Here For Download MEd Entrance Result
TNPSC Exam Study Material
TNPSC & TET & VAO Useful Study Materials Group 2 & Group 4 Exams - Schedule 5
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49 பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் 49 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோருக்கு மாவட்ட கல்வி
அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும்
பணியிடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்...
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்காக சிறப்பு அனுமதித்
திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (செப்.12) முதல்
தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த, 49 மாவட்ட
கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,)
பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்
பள்ளி,
கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பித்தலை துவக்கி,
மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக்
கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ்
அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும்
நாடு முழுவதும் செல்லக்கூடிய அடையாள அட்டை வழங்க
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசு ஆதார் திட்டத்தை கொண்டு
வந்தது. ஆதார் அட்டைக்காக ஒருவரது
கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவு
செய்யப்பட்டன.
அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
5 ஆண்டுகளாக வழங்கப்பட்டது
தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல்
வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில்
சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி..
பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO/2014-15/03
இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணி..
இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் தில்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளைகளில் காலியாக உள்ள 268 உதவியாளர்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேளாண் அறிவியல்
தேர்வு வாரியம்.
டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் - அடுத்தவருக்கும் அனுப்பலாம்:
கார்டே இல்லாமல் பணம் எடுக்கலாம்; வங்கி கணக்கே இல்லாதவர்க்கும் அவரின்
மொபைல் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம். இப்படி ஒரு புதுமையான திட்டத்தை
ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏடிஎம் கார்டு மூலம் தான்
ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்; அது போலமற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்து
வருகிறது. இதை மாற்றி, ஏடிஎம் கார்டே இல்லாமல் பணம் அனுப்பும், பணம்
எடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ஒருவருக்கு பணம் அனுப்ப
வேண்டுமானால், அவருக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்
பெயர், முகவரி, மொபைல் எண் இருந்தால் போதும்.
DEO & DEEOs Transfer & Promotion
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வு
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய
பயிற்றுனர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 934
துவக்க, 210 நடுநிலை, 113 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ராமநாதபுரம்
கல்வி மாவட்டத்தில் 92, பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 89 அரசு, அரசு உதவி
பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் கூடுதல்
வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர், மேஜை, நாற்காலி, மின் விசிறி
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்
ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியில்
உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள்
கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து
அந்த கூட்டமைப்பு அமைப்பு செயலர் எட்வர்டு சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்வித் துறையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் விரிவுரையாளர் மற்றும் அதற்கு
மேற்பட்ட பதவிகள் இறுதி பணிமூப்பு பட்டியல் இல்லாமலேயே தற்காலிக பணி
மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. விதிகளுக்கு
புறம்பாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை நிறுத்தக் கோரி, சென்னை மத்திய
நிர்வாகம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.