Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்.

            சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள், 5,000க்கும் அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள் இணைந்து, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

TET வழக்கு இன்றும் விசாரணைக்கு வரவில்லை.

              மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. 

TET வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்.

                   அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த நிலையில்நேற்று இரவு அ.தி.மு.க.தேர்தல்கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடந்தது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு: மத்திய அரசின் மனு தள்ளுபடி

      அரசு பணிகளில், பதவி உயர்வின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

"பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 9.51 கோடி மாணவர்கள் பார்த்தனர்"

          ஆசிரியர் தினத்தன்று, மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியை நாடு முழுவதும், 8.5 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த, 9.51 கோடி மாணவர்கள் பார்த்துள்ளனர் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

இந்தியாவில் ஒரு தனி ரயில்வே பல்கலைக்கழகம் விரைவில்?

          ரயில்வே தொடர்பான படிப்புகளை மட்டும் வழங்கும் வகையில், ஒரு ரயில்வே பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.

மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை செய்யும் தமிழக அரசு!

              கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

10th Study Material

Tamil Study Material

Bharathidasan University MEd Entrance Result Published

         Bharathidasan University MEd Entrance Result 2014 (CDE) Provisional Selected Candidates List Published in www.TrbTnpsc.com.

Click Here For Download MEd Entrance Result

TNPSC Exam Study Material

TNPSC & TET & VAO Useful Study Materials Group 2 & Group 4 Exams - Schedule 5

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49 பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு

         அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 49 பேர் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் செய்து பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 

சிறந்த ஆரம்ப பள்ளிகளை அரசால் அமைக்க முடியாதது ஏன்?

         சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் அரசால், சிறந்த ஆரம்ப பள்ளிகளை அமைக்க முடியாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்...

        பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்காக சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த, 49 மாவட்ட கல்வி அலுவலர் (டி...,) பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.  
 

பள்ளிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

           பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பஸ் நிறுத்தம் பெயர்களை அறிவிக்கும் 'பேசும் சிக்னல்': அரசு பள்ளி ஆசிரியை அசத்தல்

            பஸ் பயணத்தின்போது நிறுத்தங்கள் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும் 'பேசும் சிக்னல்' கருவியை, மதுரை திருநகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை வெங்கடேஸ்வரி கண்டுபிடித்துள்ளார்.

ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

                இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் நாடு முழுவதும் செல்லக்கூடிய அடையாள அட்டை வழங்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதார் திட்டத்தை கொண்டு வந்தது. ஆதார் அட்டைக்காக ஒருவரது கைரேகை மற்றும் கருவிழிகள் பதிவு செய்யப்பட்டன. 

அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

5 ஆண்டுகளாக வழங்கப்பட்டது
 
          தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். 
 

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி..

          பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 52 Specialist Officer Cadre பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CRPD/SCO/2014-15/03

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணி..

          இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் தில்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளைகளில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேளாண் அறிவியல் தேர்வு வாரியம்.

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் - அடுத்தவருக்கும் அனுப்பலாம்:

           கார்டே இல்லாமல் பணம் எடுக்கலாம்; வங்கி கணக்கே இல்லாதவர்க்கும் அவரின் மொபைல் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம். இப்படி ஒரு புதுமையான திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏடிஎம் கார்டு மூலம் தான் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்; அது போலமற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதை மாற்றி, ஏடிஎம் கார்டே இல்லாமல் பணம் அனுப்பும், பணம் எடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், அவருக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் பெயர், முகவரி, மொபைல் எண் இருந்தால் போதும்.


DEO & DEEOs Transfer & Promotion

          தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

TET Study Material

TET - Collection - New -

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு


          தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்தனர்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வு

           பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 934 துவக்க, 210 நடுநிலை, 113 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 92, பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 89 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர், மேஜை, நாற்காலி, மின் விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.

இவ்வார இறுதியில் வழங்கப்படவுள்ள இலவச காலணிகள்

       பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, இலவச காலணிகள், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இவை, இவ்வார இறுதியில் வழங்கப்பட உள்ளன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

            இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பு அமைப்பு செயலர் எட்வர்டு சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வித் துறையில், கடந்த 2000ம் ஆண்டு முதல் விரிவுரையாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகள் இறுதி பணிமூப்பு பட்டியல் இல்லாமலேயே தற்காலிக பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை நிறுத்தக் கோரி, சென்னை மத்திய நிர்வாகம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அண்ணா பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் 450 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

             அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், 450 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகிறது.

விரைவில் வருகிறது கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அறிவிப்பு

         கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகல் கிடைத்தபின் வெளியடப்படு்ம். அரசாணை எண்.130 நாள்.05.09.2104.
Source From : Computer Science B.Ed Graduates Association, Aruppukottai

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க எதிர்ப்பு: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட 40 பேர் கைது.

           ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க எதிர்ப்பு: கல்வித்துறை அலுவலகம் முற்றுகை- சாலை மறியல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்பட 40 பேர் கைது.


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சிறப்புக் பி.எட். , எம்.எட். கல்வி சேர்க்கை

            தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்புக் கல்விகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (செப்.11) முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு இ&மெயில் முகவரி : கல்வித்துறை உத்தரவு

        பள்ளி மாணவ மாணவியரின் இ&மெயில் முகவரிகளை சேகரிக்க  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TET பணி நியமன ஆணை ஆன்லைனில் தயார்!

         பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமன உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

வெயிட்டேஜ் மார்க் முறையால் பாதிப்பு கண்ணில் கருப்பு துணி கட்டி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்: 35 பேர் கைது

          ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்  முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், தங்கள் கண்களில் கருப்பு துணி  கட்டிக்கொண்டு நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive