Half Yearly Exam 2024
Latest Updates
இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி - the hindu tamil
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப்
பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப்
பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத்
தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம்
உதவுகிறது.
மெரினா காந்தி சிலை முன்பு போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது
மெரினா காந்தி சிலை அருகே கோரிக்கை முழக்கமிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களால் நடத்தப்படும் இரத்த தான முகாம்:
தன் இரத்ததிலிருந்து
உயிர் கொடுப்பது
நம் தாய் மட்டுமல்ல !
நாமும் தான்...
இரத்த தானம்
செய்தால் மட்டுமே ....!! என்ற வரிகளை மெய்பிக்கும் வகையில் இந்த
சமுதாயத்தின் ஒளி விளக்காக விளங்கும் ஆசிரியர்கள் முற்றிலும் பொதுநலம்
நோக்கம் உடையவர்கள் என்பதற்கேற்ப முதன் முறையாக ஆசிரியர்களால் நடத்தப்படும்
இரத்த தான முகாம். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தை
சேர்ந்த உயர்நிலை,மேல்நிலை பள்ளி ஆசிரியர்களால் வரும் 05.09.2014 ஆசிரியர்
தினத்தை முன்னிட்டு (சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த
நாள்) 06.09.2014அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் இரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.
ஆசிரியர் பிரச்சினையிலும் அலட்சியமா?- திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் -
The hindu tamil edition
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினையிலும் தமிழக அரசு அலட்சியம் காட்வதாக
திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தகுதிகாண் மதிப்பெண் விவகாரம்: அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி.
தகுதிகாண் மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கருணாநிதி - தினமணி
இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் மாவட்டங்களுக்குள் பணி நியமனம்
இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் அவரவர் மாவட்டங்களுக்குள்ளாகவே பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற்றனர்.
GPF slip - Value Added Service
பொது வருங்கால வைப்பு நிதி - 2014-15ம் ஆண்டுக்கான இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படும் கணக்குத்தாள்களை கொண்டு ஊழியர்களுக்கு தற்காலிக முன் பணம் மற்றும் பகுதி இறுதி பணம் பட்டியல்களை அனுமதிக்க உத்தரவு
TET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?
ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும்.
போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்- மாலைமுரசு
சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை..
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus
2,000 உதவி பேராசிரியர் பட்டியல் மூன்று மாதங்களுக்குள் வெளியீடு
'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2,000 உதவி பேராசிரியரை நியமனம்
செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்' என, ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
தொடக்கக் கல்வி - நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 அன்று விடுவிக்க உத்தரவு
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு
புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு
அரசு மேல் நிலைப்பள்ளி கழிவறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை
பேரணாம்பட்டு பாகர் உசேன் வீதியை சேர்ந்த
கண்ணபிரான் மகள் ஹரிணி. இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 6–ம்
வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளி கழிவறை பகுதியில்
மாணவி ஹரிணி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை
கண்ட ஆசிரியார்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி உயிரிழந்தார்.
வதைக்கும் வாய்ப்புண்: விரட்ட வழிகள்
வாய்ப்புண்
வந்து விட்டால் 2, 3 நாட்களுக்கு கடுமையான அவஸ்தைதான். சாப்பிடும் போதும்,
பேசும்போது வலி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடும். தட்ப வெப்பம் மற்றும்
உடலின் தன்மைக்கு ஏற்ற உணவுகள் சாப்பிடுவது, உணவில் போதுமான சத்துகள்
இருக்கும்படி பார்த்துக் கொள்வது, நோயின் அறிகுறி தென்பட்டவுடன் டாக்டரை
அணுகுவது என இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினால் வாய்ப்புண்
அவஸ்தையில் இருந்து விடுதலை பெறலாம் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.
ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசின் முடிவு : வைகோ கண்டனம்
ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற
மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியராக
வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும்
திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், குடியரசுத்
தலைவராகவும் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5
ஆம் நாள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
மாணவர்களை துன்புறுத்தக் கூடாது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தல்
மாணவர்களை
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்
கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது, வகுப்பில்
பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு
இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால்
அடித்தல் உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை
ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.