Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி

      அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

'குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்:

          ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 
 

எம்.எட். நுழைவு தேர்வு: வினாத்தாள் குறைவாக வந்ததால் பட்டதாரி ஆசிரியர்– மாணவர்கள் போராட்டம்..

        திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.எட். நுழைவு தேர்வு வேலூர் தனியார் கல்லூரியில் இன்று நடந்தது. சுமார் 863 பட்டதாரிகள் இன்று தேர்வு எழுத வந்தனர். 

TET Paper 1 Posting: காலை 8.30மணிக்கு காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு

          சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு

மத்திய அரசு: அகவிலைப்படி உயர்வு

       மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதுள்ள 100 சதவீத அகவிலைப்படி, 107 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு

          ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு

TNTET Article: எழுத்து அறிவித்தவன்

பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள் - Click Here For Article


PARTICULARS OF KALLAR RECLAMATION SCHOOLS







PARTICULARS OF KALLAR RECLAMATION SCHOOLS

  S.No.
Category of Schools
No. of Schools
1.
Higher Secondary Schools
15
2.
:High Schools
23
3.
Middle Schools
29
4.
Primary Schools
193

Total
260

TET Weightage ரத்து செய்யக்கோரி சென்னையில் பேரணி

        TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரும் கடிதம்.


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டம்.

        மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. 

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

          ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.


இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு

         இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும்,

குறிப்பிட்ட மாவட்ட பணிநாடுநர்கள் - 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு

          தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு

1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்

         தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

நியமன ஆணை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு

         தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு

'ஒன்பது மாவட்டங்களில் (இடைநிலை) ஆசிரியர் காலியிடம் இல்லை'

      'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.

     அவரது அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று,

முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை

         14 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை - தினமணி

         ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வின் முதல் நாளில், 906 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்து 400 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன.

12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை

           12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார் - தினமணி

           மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகங்களில் காலியாக உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

சென்னையில் 4 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

          தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு: சென்னையில் 4 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - தினதந்தி

சாலைகளின் சைக்கிள் செல்ல தனிப்பாதை வேண்டும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

           உடல் நலத்திற்கு தேவையான சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும், சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுப்பியுள்ளார்.

கல்வி நிறுவன கட்டடங்களுக்கு ‘சீல்’? உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

         கல்லூரி, பள்ளி கட்டடங்களுக்கு, ’சீல்’ வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களுக்கு, ’தற்போதைய நிலை தொடர வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர் நியமன கவுன்சிலிங்

           ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ள, நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களுக்கான நியமன கவுன்சலிங், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், செப்டம்பர், 5ம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு தாமதம்; மாணவர்கள் தவிப்பு

          கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

பள்ளிக்கு செல்ல மலைப் பாதையில் தினமும் 10 கி.மீ., நடைப்பயணம்

        பாட்டன் காலத்தில் ’தினமும் 10 கி.மீ., நடந்து போய் நான் படித்து வளர்ந்தவன்,’ என்று பல கதைகளை முன்னோர் குரல்களில் நம் காதுகள் கேட்டிருக்கும். இப்போதும் இது போல் பயணித்து பள்ளி செல்வோர் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் கரடுமுரடான ஒரு மலைப் பாதையில் தினமும் 10 கி.மீ., நடந்து, அதன் பின் பஸ்சில் பயணித்து படிக்கிறார்கள் ஒரு மலைக்கிராமத்து மாணவர்கள் 60 பேர்.

வீடுகளில் பொக்கிஷம் புத்தகங்கள்

            புத்தக கண்காட்சி என்பது ஒரே இடத்தில், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் அமைத்து, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை, லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது. இது இன்று உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுக்கும் ஆசிரியர் பணியில் ஒதுக்கீடு வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

           முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி கோரிய மனு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட் டம், அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் சரண்யா. ஐகோர்ட் மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு:நான், டிப்ளமோ ஆசிரியை பயிற்சி முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன்.
 

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்

                   புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர் பணி நியமனம் மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

           சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

TNTET Court Cases Detail

          TNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு முன் 01,09.2014 திங்களன்று வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.

அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் !!- உங்களுக்காக

1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):
         தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.

Upper Primary BRC Training For Maths BTs

              அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

TET & PG TRB COUNSELING :ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

           ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இறுதி தேர்வு முடிவே ஆகும் .

TET & PGTRB COUNSELING:மாவட்டவாரியாக கலந்தாய்வு நடைபெறும் இடம்.


மாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.

TNTET & PGTRB New Posting: பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?

பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?
                             தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.

  1. பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?
  2. பள்ளி அமைந்துள்ள இடத்திற்கான போக்குவரத்து வசதி.
  3. பள்ளி மற்றும் கிராம சூழல்.

TET & PGTRB Posting - Press News: உங்கள் சொந்த மாவட்டம் எது?

         பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச்  சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- CEO Vellore

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive