கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்)
நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ)
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது. கடந்த
மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்
மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர்
அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO;33399/2013
ஆனால் கடந்த வாரம் எந்த வழக்கும் வாரந்திர
பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.இந்த வாரம் ( 20-08-2014 )
இன்றோடு 13 வழக்குகள் மட்டுமே வாரப்பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள்.
தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது
அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி
மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க
உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும்,
தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.
salary - Pay scale Post - Pay scale - check your pay(கல்வி துறையில் பணி புரியும் அலுவலர்கள் ஊதியம் விபரம்)
Post - Pay scale - check your pay
Rs. 5200 - 20200 + G.P 2400
Rs. 5200 - 20200 + G.P 2400
சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.
சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி
தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை
சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த
மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும்
மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
8 மாதம் ஆகியும் வெளியிடப்படாத டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும்
முடிவுவெளியிடப்படாததால் அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கும் 6 லட்சம்
பட்டதாரிகள் தவிப்பில் உள்ளனர்.துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர்,
சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர் உட்பட 19 வகையான
பதவிகளில் 1064காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) கடந்த 5.9.2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக கோரி ஆசிரியர் பயிற்சி பட்டதாரி ஆர்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய
வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை எம்.ஜி.யார்
சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
TRB: Asst Professor in Engineering Colleges Recruitment
TRB - Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 - Click here for Prospectus and Syllabus
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSOR IN ENGINEERING COLLEGES 2013 - 2014
| |
Dated: 20-08-2014 |
Member Secretary
|
2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.
ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க,
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின்
பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி
அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணி பதிவேடுகளில்
ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரிய காலத்தில்
மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன.
2,000 மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் : தொடக்க கல்வி துறை திட்டம்
'மாநிலம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத, 2,000 மழலையர் பள்ளிகளுக்கு,
விரைவில், அங்கீகாரம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொடக்க கல்வித்
துறை வட்டாரம், நேற்றுதெரிவித்தது.
பதவி இறக்கத்துக்கு வழிவகுக்கும் அரசாணை : புள்ளி இயல் துறை ஊழியர்கள் அதிருப்தி
புள்ளி இயல் ஆய்வாளர் பதவியை, உதவி ஆய்வாளராக பதவி இறக்கம்
செய்ய, வழி வகுக்கும் அரசாணை, புள்ளி இயல் துறை ஊழியர்களிடம், கடும்
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில்,
2013 ஜனவரியில், மறு சீரமைப்பு அமல்படுத்தப்பட்டது. அப்போது, புள்ளி இயல்
சார்நிலை பணியிடங்கள், 61 உட்பட, 197 பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டு, 81
உயர்நிலை அலுவலர் பணியிடங்கள் பெறப்பட்டன.
1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர்
TNTET தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல் - தினமலர்.
சலுகை மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு ஆசிரியர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு
மதுரை, சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் தேர்வில் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிவித்தது. இதை மாற்றியமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. என்சிடிஇ மற்றும் டிஆர்பி.யில் 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். கடந்தாண்டு ஆக. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்த டிஇடி தேர்வு முடிவிற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
TET Article: தேர்தல் வைபோகம்!
அன்பான வாசகர்களே,
நமது பாடசாலை வலைதளத்தில் டெட் தேர்வர்கள் சார்பான பல்வேறு சிறப்புகட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.
சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
இதுகுறித்து சென்னை பல்கலை கழகம் சார்பில்
வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல் கலையில், முதுகலை
சட்டப்படிப்புக்கான தேர்வுகள் கடந்த, ஜூன் மாதம் நடந்தது.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு
கல்வித்துறையில்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின்
ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை,
திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி
அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப்
பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
அரசு ஊழியர்களுக்கு 25% அகவிலைப்படி உயர்வு; மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகிறது
ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம்
அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக
உயர்த்தப்பட இருக்கிறது என்று மாநிலமுதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா
அறிவித்திருக்கிறார்.