Half Yearly Exam 2024
Latest Updates
பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர
ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து
உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம்,
கைத்தறி, உடற்கல்வி, கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி
ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000
ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும்
இவர்கள் பணி
புரிகின்றனர்.
புரிகின்றனர்.
ஆசிரியர்களே இல்லாமல் எப்படி படிப்பது? - ஜூனியர் விகடன்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டவர்கள்
பிரமலை கள்ளர் சமூகத்தினர். இவர்களும் கல்வி, வேலை வாய்ப்பில் சமநிலைக்கு
வர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் கள்ளர் சீரமைப்புத் துறை
உருவாக்கப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கிறது என்பதுதான் வேதனை.கள்ளர்
சீரமைப்புத் துறை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று
மாவட்டங்களில் 285 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களைப் பள்ளிக்கு
அனுப்ப பெற்றோர்கள் கஷ்டப்படக் கூடாது என்று, 52 விடுதிகளையும் நடத்தி
வருகிறது. இந்தப் பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் 37 ஆயிரம் மாணவ, மாணவிகள்
பயன்பெறுவதாக அரசு சொல்கிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் 40
சதவிகித கள்ளர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல், கிராமப்புற
மாணவர்களின் உயர்கல்விக் கனவு கேள்விக்குறியாகி வருகிறது.
பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20,000 பேருக்குப் பயிற்சி
கணிதப்
பாடங்களை எளிமையாக கற்பிப்பது தொடர்பாக ஒன்பது, பத்தாம் வகுப்பு
கணித ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
Part Time Teachers Salary Hike?
தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது.
நீதிமன்ற அவமதிப்பு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
நீதிமன்ற அவமதிப்பு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், செப்., 1ம் தேதி ஆஜராக
வேண்டும் என,'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு
உள்ளது.
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகளை மூடுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு!
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர்பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்குஇலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது
அரசு, அரசு உதவி பெறும் இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்
தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக்காலணிகள், புத்தகப்
பைகள் ஆகியவை இந்த ஆண்டு முதல் கடுமையான தரப்பரிசோதனைக்கு உள்படுத்தப்பட
உள்ளன. இவற்றின் தரத்தை தனியார் ஆய்வகங்கள் பரிசோதித்து வந்த நிலையில்,
முதல்முறையாக இலவசப் பொருள்களின் தரத்தைப் பரிசோதிக்கும்பொறுப்பு மத்திய
அரசு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்
தமிழகம் முழுவதும் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
விண்ணப்பங்கள் அனுப்பும் போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது
விண்ணப்பங்கள் அனுப்பும்போது,
சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை
ரத்தாகிறது.இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி
உத்தரவிட்டுள்ளார். நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி
ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில்அரசு நடைமுறைகளை
எளிமைப்படுத்துவதில்ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி
தன்னை சந்தித்தபல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில்அரசு
நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார்.
இன்று பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள்
இன்று வெளியீடு. பி.எட். தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில்
காணலாம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா ?
சட்டசபையில்
கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு
அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு
உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது:
அவமதிப்பு கட்டுரை: மோடி, ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை அரசு
சர்ச்சைக்குரிய
கட்டுரையை வெளியிட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர்
ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற
மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், தமிழக மீனவர்
பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா
எழுதிவரும் கடிதங்கள் குறித்து கொச்சைப்படுத்தப்பட்டு ஒரு கட்டுரை
பதிவேற்றப்பட்டிருந்தது.
ஆண்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறீர்களா? இதோ சில வசதிகள்- கணிணி மூலம் உங்கள் போனை கட்டுப்படுத்தலாம்
கேள்விகள்
1.என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா?.
2.கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது.
TNTET: 15 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் இன்று பிற்பகல் வெளியீடு..!!! - Dinamalar
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 15 ஆயிரம் புதிய
ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்),
இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர்
தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து,
10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம்
இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
TET Paper 1: ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி!
30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண்
இன்று(31.07.2014)வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படிஉயர்வு கணக்கீடும்
வெளியிடப்பட்டது.
எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்காக மத்திய அரசு 2400 கோடி ஒதுக்கீடு !!!!
தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி
திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்)
திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு
செய்துள்ளது. திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான
பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.நடப்பு
(2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ.,
திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, பல மாதங்களுக்கு முன்,
தமிழக அதிகாரிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கி
இருந்தனர்.