Half Yearly Exam 2024
Latest Updates
சிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க திட்டம்
ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம்
தேதிக்குள் இறுதி செய்ய, கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கற்றல்,
கற்பித்தலில் சிறந்து விளங்குதல், பள்ளி மேம்பாட்டிற்கான பங்களிப்பு
உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு,
'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்படுகிறது.
ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு
தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு
TRB Paper 2: இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்
TRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்
பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்
2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்
சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது
விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி
இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று,
கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது
தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும்
அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி
அடைகிறேன்.
PG TRB Court Case News:
MADURAI BENCH OF MADRAS HIGH COURT :வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி
வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி
DETAILS OF JUDJEMENT
கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.
கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு
ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. மதுரையை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை
கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆசிரியர் பணியிடங்களைநிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு
வாரியம் 2008ல் அறிவிப்பு வெளியிட்டது.
கண்ணகி போல் நீதிகேட்டு வென்ற ஆசிரியை சங்கீதா!- நீதியரசர் நாகமுத்து அவர்களின் முழுத்தீர்ப்பு
கண்ணகி போல் நீதிகேட்டு வென்ற ஆசிரியை சங்கீதா!- நீதியரசர் நாகமுத்து அவர்களின் முழுத்தீர்ப்பு
பள்ளிகளை தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு
2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு
கும்பகோணம் தீ விபத்து | 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு
கும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை; 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு
கும்பகோணம்
பள்ளி தீ விபத்து வழக்கில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் புலவர்
பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
மேலும், அந்தப் பள்ளியின் தாளாளரும்,
பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி,
சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5
ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு
தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை
கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15
பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு
அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டது.
இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்
தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887
இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக
தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை
ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை
1. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப்
பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க
வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில்
தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : 8,000 போலீசார் முதல்வருக்கு கோரிக்கை
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.