Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Article - டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

               டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.
தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சில கேள்விகள்:
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.

கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.!

      தொழில்நுட்பக் கல்வித் துறையால் ஜூன் 2014 இல் நடத்தப்பட்ட கணினிச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூலை 24) வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்வு முடிவுகளை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கம், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் தெரிந்து கொள்ளலாம். 

பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு

          வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தனர் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு

                     வேதாரண்யம் அருகே பூட்டப்பட்ட அரசு பள்ளி மீண்டும் திறப்பு

வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் ராமகோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றியப் தொடக்கப்பள்ளி உள்ளது. அரை நூற்றாண்டை கடந்த இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும், ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவி இரு மாணவர்களும் ஆக 4 பேர் படித்து வந்தனர்.

இந்நிலையில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். பள்ளியில் இருந்த ஒரே ஒரு மாணவனையும் அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்று சான்றிதழை வாங்கி சென்று விட்டார்.

இதனால் இந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் இருவர் பணியில் இருந்தும் மாணவர்கள் யாரும் இல்லாததால் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவனைத் தவிர மாணவர்கள் சேர்க்கை என்பது பூஜ்யமாக இருந்து வந்தது.

தமிழ்வழி கல்வி கற்பிக்கப்பட்டு வந்த இந்த பள்ளியை நிரந்தரமாக மூடாமல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை தொடர்ந்து இயக்க வேண்டுமென இந்த கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் இந்த பள்ளி 1 மற்றும் 2–ம் வகுப்புகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக் கல்விப் பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று மீண்டும் இந்த பள்ளி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்வழி கல்வியை தமிழ்நாட்டில் மெல்ல சாகடிக்கும் நிகழ்வாகவே ஆங்கில வழி கல்வி முறை தொடங்கி இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, துணைஆசிரியர் சுப்பிரமணியன் இருவரும் வீடுவீடாக சென்று ஒன்பது மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பள்ளி மீண்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மூடிய பள்ளியை மீண்டும் திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?

         பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு?

CPS-ன் அவலம் பாரீர்

          2004 ஆம் ஆண்டு 51வயதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாரக்கல்லூர். தாரமங்கலம் ஒன்றியம் சேலம்மாவட்டத்தில் பணியேற்று 2006 ஆம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இவருக்கு பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இவர் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ல் பணிநிறைவு பெற்றார். அதே காலகட்டத்தில் மனைவி இறப்பும் நிகழ்ந்தது.
 

மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பு

               பள்ளி வளாகத்தில் சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானால், பள்ளி நிர்வாகமே நேரடி பொறுப்பாவர் என முதல்வர் சித்தராமய்யா எச்சரித்துள்ளார்.

3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை

         3 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை, சிறுவனை அடித்து தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த துயர சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்துள்ளது.

மருத்துவக் கல்வியின் நிலை வருத்தப்பட வைக்கிறது: உயர் நீதிமன்றம் வேதனை

             டாக்டர் ஒரு இடத்தில் பணிபுரிந்துவிட்டு மற்றொரு இடத்தில் பெயரளவில் வருகையை பதிவு செய்வது அல்லது பணியில் உள்ளதுபோல் பெயரை பதிவு செய்கின்றனர். சி.பி.ஐ. அறிக்கையை பார்க்கையில் மருத்துவக் கல்வியின் இன்றைய சூழ்நிலை பற்றி வருத்தப்பட வைக்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை.


          சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க முதலமைச்சர் தனிப்பிரிவில் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்வதாக தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர கற்றல் மையங்கள்

          அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.


TNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....

         மறைக்கப்படும் பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள்....

2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….!!!

          2011 ஆம் ஆண்டு முதல்இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதியமான ரூ 750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுகையையை பெற தடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.

3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் தகவல்

          ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

பி.எட்., விண்ணப்பம் வினியோக தேதி நீட்டிப்பு

          "தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம், 25ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,'' என, பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை கிடையாது

           அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில், தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது.  அதனால், கல்விக்கான நிதி ஒதுக்கீடு, காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக இருந்தது, தற்போது, 14.6 சதவீதமாக குறைந்து விட்டது,'' என, கல்வியாளர்கள், காட்டமாக தெரிவித்துள்ளனர்.

சட்டக் கல்லூரிகளில் 50 விரிவுரையாளர்கள் நியமனம் செப்டம்பர் 21-ல் எழுத்துத்தேர்வு

         அரசு சட்டக் கல்லூரிகளில் 50 முதுநிலை விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார் கள். இதில், சட்டம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 30 காலியிடங் களும், ஆங்கிலம், பொருளா தாரம், வரலாறு, அரசியல் அறிவி யல், சமூகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 20 காலியிடங் களும் இடம்பெற்றுள்ளன.

ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

        ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை - தினமலர்

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி

            தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய விவரம் கோரி உத்தரவு

               தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு

5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை

            மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
 

முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது

            முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு

மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...

            ஆசிரியர்கள் நியமன விபரம் ... பள்ளிக்கல்வித்துறை:மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...

SSA சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

          அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...

>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம்

               சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார்.

பணிநியமனம் உறுதி

பள்ளிக்கல்வித்துறைக்கு குரல் கொடுத்தார் பாலபாரதி MLA; பணிநியமனம் உறுதி.

10th Science Study Material (Latest)

Science Study Material

12th Chemistry Study Material Latest

Chemistry
  1. Chemistry Short Memory Hints - Tamil Medium - English Medium

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும்

           நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...

விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க "TRB"தீவிரம்..!

          போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி

          அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது:


கல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள்

          அறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

சட்ட கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி-TRB.

           அரசு சட்டக் கல்லூரிகளில், 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக, செப்டம்பர், 21ம் தேதி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), போட்டி தேர்வை நடத்துகிறது.
 

இழுபறியில் பணி நிரந்தர உத்தரவு; கலையாசிரியர்கள் போராட திட்டம்.

                                கலையாசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்து, ஓராண்டாகியும் எவ்வித பணி உத்தரவும் வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பில், வரும் ௫ம் தேதி, தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி தீவிரம்

             கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை, காலி பணியிடங்கள், பள்ளியின் பெயர், முகவரி, பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள், ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் என, 28 வகையான விவரங்களை சேகரிக்க சி..., உத்தரவிட்டுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive