Revision Exam 2025
Latest Updates
சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை.
சிறப்பு தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க முதலமைச்சர் தனிப்பிரிவில் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் பரிசீலனைக்கு எடுத்துச்செல்வதாக தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர கற்றல் மையங்கள்
அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்கள்" ஆக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.
TNTET Article:கூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....
மறைக்கப்படும் பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள்....
2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….!!!
2011 ஆம் ஆண்டு முதல்இடைநிலை
ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு
மட்டும் சிறப்பு ஊதியமான ரூ
750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுகையையை
பெற தடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக
அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென
பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.
ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை - தினமலர்
தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய விவரம் கோரி உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு
5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை
நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர்
நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங்
தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு
அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத்
தெரிவித்துள்ளார்.
முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது
முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று இயக்குனர் பிறப்பித்த உத்தரவு
மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...
ஆசிரியர்கள் நியமன விபரம் ... பள்ளிக்கல்வித்துறை:மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ...
SSA சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE...
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம்
சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும்
நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான
மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்
கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில்
நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...
விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க "TRB"தீவிரம்..!
போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி.,
(அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும்
முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்)
ஆலோசித்து வருகிறது.
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி
அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது:
கல்வி துறையில் கைவிடப்பட்ட பழைய அறிவிப்புகள்
அறிவுசார் பூங்கா திட்டம் உள்ளிட்ட, சில முக்கிய திட்டங்களை, கல்வித் துறை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
சட்ட கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி-TRB.
அரசு சட்டக் கல்லூரிகளில், 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக, செப்டம்பர், 21ம் தேதி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), போட்டி தேர்வை நடத்துகிறது.
இழுபறியில் பணி நிரந்தர உத்தரவு; கலையாசிரியர்கள் போராட திட்டம்.
கலையாசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்து, ஓராண்டாகியும் எவ்வித பணி உத்தரவும் வழங்காததை கண்டித்து,
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பில்,
வரும் ௫ம் தேதி,
தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்,
கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை,
காலி பணியிடங்கள்,
பள்ளியின் பெயர்,
முகவரி,
பள்ளிகளில் செயல்படும் மன்றங்கள்,
ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள்,
ஆசிரியர்கள்,
பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் என,
28 வகையான விவரங்களை சேகரிக்க சி.இ.ஓ.,
உத்தரவிட்டுள்ளார்.
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். சேர பயிற்சி!
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர பயிற்சி சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள்:
இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள
ஒரு வீட்டின் முன் கட்டிலில் 6 மாத குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்தது.
அதன் பெற்றோர்கள் வீட்டின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தனர்.
வீடியோ மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் பள்ளி ஆசிரியர் திரு.குருமூர்த்தி பற்றி புதிய தலைமுறை கல்வி இதழில் வந்த செய்தி!
குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு
தொடக்கக்
கல்வி - பள்ளி மாணவர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட்
காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர்
உத்தரவு
இணையதள வாயிலாக இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு
பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
TNTET: ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்?
TRB சொல்வது:
மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில்
தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த
3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு
வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த
காலத்தில் தெரிவு பணியை குறித்த
காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுவரை
தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள
19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று
வருகிறது.