நாட்டில் நடக்கும்கற்பழிப்புக்களை குறைக்கவும்,கட்டுப்படுத்தவும் பள்ளி
மற்றும்கல்லூரிகளில் மொபைல்போன்களுக்கு தடை போட வேண்டும்என கர்நாடக மாநில
எம்.எல்.ஏ.,க்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
SPECIAL TET - சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.
SPECIAL TET: திருத்தப்பட்ட முடிவு வெளியீடு. ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.
18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அமைச்சர்.
15 நாட்களுக்குள் 18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் இன்று பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பு.
பாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க': கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று குறிப்பிடுவது மட்டும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி அல்ல," என,
கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
GROUP-IIA தேர்வு - விடை காணா வினாக்கள்-விழி பிதுங்கும் தேர்வர்கள்:
நடந்து முடிந்த TNPSC GROUP II A தேர்வுக்கான உத்தேச விடைகளை
பொதுத்தமிழுக்கு மட்டும் விடியல் பயிற்சி மையம் வெளியிட்டிருந்தது. அந்த
விடைகள் TNPSC வெளியிட்ட விடைகளுடன் 100 சதவீதம் பொருந்தியிருந்தது என்பதை
பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதர அலுவல்கள் காரணமாக பொது அறிவு
வினாக்களுக்கான விடைகளை வெளியிட இயலவில்லை.
காமராஜர்
காமராஜர் மறைந்த அன்று வந்த பத்திரிக்கைகள் அரிய தொகுப்பு.
காமராஜரின் அரிய புகைப்படங்கள்
காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்)
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை | 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு
கருணை அடிப்படையில் பணி - தமிழக அரசு பிறப்பித்த ஆணை ரத்து.
கருணை அடிப்படையில் பணி:திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து.
காவல் துறை மானியக் கோரிக்கை மீது 2 நாள்கள் விவாதம்
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 2 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதற்காக, பேரவை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை பேரவைத்
தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அதன் விவரம்:வரும்
திங்கள்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதாக
இருந்தது. இது, ஆகஸ்ட் 5ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினமும், ஆகஸ்ட் 6ஆம் தேதியும் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான
விவாதமும், அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையும் இடம்பெறும்.
10 வகுப்பு தேர்ச்சி குறைவுக்காக சம்பளம் கட்: ராமநாதபுரம் ஆட்சியரை கண்டித்து ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி
பெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சம்பளம் கிடையாது என்று
உத்தரவிட்டுள்ளதற்கும், அரசு ஊழியர்களிடம் கெடுபிடியாக செயல்பட்டு
வருவதற்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், இட மாறுதல்
செய்யக்ககோரியும், நாளை(சனிக்கிழமை) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்
கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
பகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம்
பகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம் - பள்ளிகளில் முடங்கிய கணினி வழி கற்றல் திட்டத்தை மீட்டெடுக்க நடவடிக்கை
சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
மலைப்பகுதி பள்ளிகளில் சரியான நேரத்தில் வராத
ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் நந்தகோபால்
எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள
கூட்டரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் முன்னிலை வகித்தார்.
நிதிநிலை அறிக்கை: பிரமாதமுமில்லை, மோசமுமில்லை
நரேந்திர மோடி பிரதமரான ஒரே மாதத்தில் விலைவாசி
குறைந்துவிடும், நிதிப்பற்றாக்குறை சரிகட்டப்படும், வேலைவாய்ப்பு
அதிகரிக்கும், அரசு இயந்திரம் அசாதாரண வேகத்தில் செயல்படும் என்பதுபோன்ற
அதீத எதிர்பார்ப்புகளின் பின்னணியில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது
முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். முந்தைய அரசு
தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில்தான் தனது
முதலாவது நிதிநிலை அறிக்கையை அருண் ஜேட்லி தயாரித்தாக வேண்டிய கட்டாயம்
இருந்ததை மறுப்பதற்கில்லை.
மத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு
மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ள வரிச்சலுகையால்
மாதச் சம்பளம் பெறும் பிரிவினருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு
கிடைத்துள்ளது. 2014-15 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு
60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5
லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை வெளியீடு அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்
பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை
(சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர்
கு.தேவராஜன் தெரிவித்தார். நாளை முடிவு தெரியும் கடந்த மார்ச் மாதம் தேர்வு
எழுதி தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எழுதி உடனே கல்லூரியில் சேர்வதற்கு
வசதியாக அரசு பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி இந்த
வருடம் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்.
தமிழகத்தில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்.
10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆதார் அட்டை திட்டம் தொடரும் : மத்திய அரசு
ஆதார் அட்டை திட்டத்தில் எவ்வித
மாற்றமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் கைவசம்
இல்லை என்றும், ஆதார் அட்டை திட்டம்
தொடரும் என்று லோக்சபாவில், திட்டக்குழு
அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்
அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார்.