Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிகளில் யோகா : சுப்ரீம் கோர்ட்டில் மனு
பள்ளிகளில், யோகா கற்பிப்பதை கட்டாயமாக்க
வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சேத் என்பவரும்,
பத்மபூஷன் விருது பெற்ற, டாண்டன் என்பவரும், பள்ளிகளில், யோகா போதிப்பதை
கட்டாயமாக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்தனர்.
இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு
கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு
படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்.,
படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்
படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து
வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன்,
கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு
எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக
குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும்
ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு
முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது.
இந்த பலி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இந்த பலி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 10 வருடங்களுக்கு முன்பு வரை 450 மதிப்பெண் பெறுவது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போதோ 490 மதிப்பெண் பெறுவது கூட பெரிய சாதனையாக மதிக்கப்படுவது இல்லை.
சமீப காலங்களில் பல மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கே சிரமப்பட்ட மாணவர்கள் அல்ல. 480 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்ற மாணவர்கள் என்பது தான் இதில் ஆச்சரியம். பிறகு ஏன் தற்கொலை முயற்சி? மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வில்லை எனும் வருத்தமும், பிரபல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் நடத்தப்படும் கல்வி முறைக்கு பொருந்திப் போவதில் உள்ள சிக்கலும் தான் இவர்களை தற்கொலை முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது.
மாணவர்களின் இந்த மனப்போக்கை மாற்ற நாம் முன் வைக்கும் சில யோசனைகள் -
- உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- மனப்பாடம் செய்து தேர்வில் கக்கும் முறையை ஒழித்து மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் வினாத்தாள் மதிப்பீடு இருக்க வேண்டும்.
- பள்ளிகளில் முன்னதாகவே நடைமுறையில் இருக்கும் ”புத்தக பூங்கொத்து” திட்டத்தினை வலுவூட்டி அவற்றில் இருந்து கேள்விகள் பொதுத் தேர்வில் கேட்கப்பட வேண்டும். உதாரணமாக 6 ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் புத்தகத்திலேயே ”Reference Books” என்ற தலைப்பில் பல புத்தகங்களின் பெயரை அச்சடித்து தர வேண்டும். குறிப்பிட்ட அத்தகைய புத்தகங்களை புத்தக பூங்கொத்து திட்டத்திற்காக மாணவர்கள் பார்வையிட ஏதுவாக உடனுக்குடன் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதே போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உட்பட அனைத்து பாடங்களிலும் முப்பருவத்திலும் பயில வேண்டிய நூலக புத்தங்களின் பட்டியலை வழங்கி மாணவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை பள்ளி நூலகத்திலிருந்து தேடிப்படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். இம் முறை முன்னதாகவே நடைமுறையில் இருந்தாலும் பெரிதாக வெற்றி பெற ஒவ்வொரு தேர்விலும் 25 மதிப்பெண்கள் இத்தகைய Referece நூல்களில் இருந்து கேட்கப்பட்டால் மட்டுமே மாணவர்களிடம் நூலக வாசிப்பு மற்றும் புரிந்து படித்தல், நல்ல கருத்துகளை தேடிப்படித்தல் ஆகிய குணங்கள் வளரும். படிப்படியாக இம்முறை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். (முன்னதாகவே இம்முறை சி.பி.எஸ.இ திட்டத்தில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது)
எங்கள் மாணவர்கள் அதிக படியான மன நெருக்குதலுக்கு உட்பட்டு புத்தி பேதலிக்கும் நிலைக்கு முந்தைய நிலையில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வருடம் தோறும் விட்டில் பூச்சிகளாய் இறந்து வருகின்றனர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்று 60 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானாலோ அல்லது 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற அசாதாரண எண்ணிக்கைக்கு மட்டும் அரசு உடனடியாக தீர்வு காணாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வரும் எம் மாணவர்களின் தற்கொலை முயற்சியையும், உயிர் பலியையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய கல்வி முறை மற்றும் மதிப்பீடு முறையில் உடனடியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள நமது கருத்துக்கள் குறித்து கல்வியாளர்களுடன் விவாதித்து நல்லமுறையில், விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கட்டுரை ஆக்கம் -
திரு. K. மோகன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, அச்சமங்கலம், வேலூர் மாவட்டம்.
அரசுப் பள்ளி வேலை நாள் பட்டியல் வெளியீடு மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 186 ஆக உயர்வு!
கடந்த கல்வி ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வி ஆண்டில், மொத்த வேலை நாட்களை அடிப்படையாக கொண்டு, மொத்த கற்றல், கற்பித்தல் நாள், உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 183 இருந்து, 186 நாட்களாக நிர்ணயம்
செய்து, பள்ளி நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது.
BRT மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு நாளை விசாரணக்கு வருகிறது
பாலியல் கல்வி வேண்டுமா, வேண்டாமா?
பள்ளிகளில் பாலியல் கல்வி தொடர்பாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இரண்டு அனுமானங்களின் அடிப்படையில் இந்த விவாதங்கள் நடக்கின்றன: 1. ஏற்கெனவே பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட்டுவருகிறது - இது தடைசெய்யப்பட வேண்டும் அல்லது தொடரப்பட வேண்டும். 2. பாலியல் கல்வி இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாது - ஆனால், அது தேவை (அல்லது) தேவையில்லை என்ற விவாதம்.
சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை மானிய விவாதங்கள்
ஜூலை 10 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானியம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளன.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர: ரம்யா சரஸ்வதி
கல்வி என்றால் என்ன???? ஒருவரின் ஆளுமைத்திறனை
வெளிக்கொணர கடவுள் மனிதனுக்கு தந்த வரம் ஆகும்….அதை நாம் பள்ளி என்னும்
கோவிலில் மட்டுமே பெறமுடியும்….ஏன் பள்ளியை கோவிலுக்கு
ஒப்பிடுகின்றோம்…காரணம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடம்
பள்ளி மட்டுமே…. பள்ளி ஏடும் எழுத்தும் மட்டும் அறியும் இடமில்லை நாம்
யாரென்று நம்மை அடையாளம் காட்டும் ஒரு கோவில்.... மனிதனை மகானாக்குவதும்
இந்த பள்ளிக்கூடமே... ஆனால் தற்பொழுது அந்த கோவில் பல பிரிவினைக்கு
(அரசினர் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என )ஆளாகி அதன் தனித்துவத்தை இழக்க
ஆரம்பித்துவிட்டன…..அவற்றைப் பற்றிக் காண்போம்…..
ஒடுக்கத்தூர் அருகே பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்
ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டில் அரசு
உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 220
மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 7 ஆசிரியர்கள் இருக்க
வேண்டிய இடத்தில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 3 வாரங்களாக 2
ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தினர். இதனால் பருவத்தேர்வுக்கான பாடங்கள்
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை.
ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு டிஎன்பிஎஸ்சி தாமதமே காரணம்.
வேலூரை சேர்ந்த ரவீந்திரநாத் யாதவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
டேராடூன் ராணுவ கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இதற்கான தேர்வில் மாநில
அளவில் நான் முதலிடம் பிடித்தேன். ஆனால், எனது விலாசம் தவறாக உள்ளது என்று
கூறி தேர்வாணையம் என்னை தேர்வு செய்ய காலதாமதப்படுத்தியது. இதனால், எனக்கு
ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
JA காலிப்பணியிடங்களில் மாறுதல் / நியமனம் வழங்குதல் கூடாது என இயக்குநர் உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை :3.7.2014 நிலவரப்படி 1395 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளது -இணை இயக்குநர்
ஆசிரியர் பணியிடம் நிரப்ப பாஜக செயற்குழு தீர்மானம்:
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம்,
செஞ்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட
தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் தீர்த்தமலை, குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொதுசெயலாளர்
ஜானகிராமன், துணை தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் தனசேகர், இளைஞரணி
அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் வல்லம்
ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிற்றாறுகளில்
தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தட்டச்சு தேர்வுகள் ஆக. 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன:
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்ககம் சார்பில்
தட்டச்சுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிரி&ஜூனியர், 8ம் வகுப்பு
முடித்தவர்கள் ஜூனியர் பிரிவுக்கும், ஜூனியர் பிரிவில் தேர்ச்சி
பெற்றவர்கள் சீனியர் பாடத்திற்கும் தேர்வு எழுதலாம்.
107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது 107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:
"தாட்கோ" மூலம் 7,50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது
"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து (05.07.2014) பத்துநாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்
மவுலிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த முடிவு
மவுலிவாக்கத்தில், 'சீல்' வைக்கப்பட்ட 11 மாடி கட்டடம் அருகே செயல்படும் அரசு பள்ளியில், சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.